புக் செய்ய, மக்களை காந்தம் போல் ஈர்க்கும் மலிவான ஓலா இ-ஸ்கூட்டர்!! அதற்குள் 3,000 கஸ்டமர்ஸை தாண்டியாச்சு!

ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகள் துவங்கப்பட்ட சில மணிநேரங்களில் முன்பதிவுகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி உள்ளது. இதனை ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி உங்களில் சிலர் கேள்விப்படாமல் இருக்கலாம். வாருங்கள், அதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் எஸ்1 மற்றும் எஸ்1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை 2021 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. அப்போதே இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டாலும், ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுப்பது சில மாதங்கள் கழித்து, 2021 டிசம்பர் மாதத்தில்தான் துவங்கியது.

s1 air crossed 3000 bookings

முதல் தயாரிப்புகள் என்பதால், அவற்றை தயாரிக்க ஓலா நிறுவனம் சற்று கூடுதல் காலத்தை எடுத்து கொண்டது. ஆனால், அதன்பின் கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓலா எலக்ட்ரிக்கின் 3வது எலக்ட்ரிக் ஸ்கூட்டரான எஸ்1 ஏர் -க்கும் இப்போதுதான் (ஜூலை 28) முன்பதிவுகள் துவங்கப்பட்டு உள்ளன. ஜூலை 28ஆம் தேதி ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும், அதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக ஜூலை 27ஆம் தேதி இரவு புக்கிங்குகளை துவங்கியது ஓலா.

அதாவது, ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்வதற்காக மிகவும் ஆவலுடன் காத்திருப்போருக்காகவும், அத்தகைய வாடிக்கையாளர்களை ஆரம்பத்திலேயே பெற்றுவிட வேண்டும் என்கிற நோக்கத்திலும் இந்த எதிர்பாராத முன்பதிவை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் துவங்கியது. எதிர்பார்த்ததை போல், எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்ய வெறிக்கொண்டு காத்திருந்தவர்கள் ஓலா எலக்ட்ரிக்கின் வெப்சைட்டை பழுதாக்கும் அளவிற்கு குவிய துவங்கிவிட்டனர்.

s1 air crossed 3000 bookings

முன்பதிவு துவங்கப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் சுமார் 1,000 ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் புக் ஆகிவிட்டன. இதனை ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனை அவர் தெரிவிக்கும்போது மணி இரவு 7.42 ஆகும். அதன்பின் 10.27pm-க்கு பாவிஷ் அகர்வால் மீண்டும் ஒரு ட்விட்டை பதிவிட்டுள்ளார். அதில், "3,000! நானும் இப்போது தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, 1,000 எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக பாவிஷ் அகர்வால் கூறிய அடுத்த 2.5 மணிநேரங்களில் இன்னும் 2,000 எஸ்1 ஏர் ஸ்கூட்டர்கள் புக் ஆகியுள்ளன. அறிவித்த ஜூலை 28ஆம் தேதிக்கு முன்பாக ஜூலை 27ஆம் தேதி மாலையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சமூக உறுப்பினர்களுக்காக மட்டுமே புக்கிங் துவங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, பொது மக்களுக்காக துவங்கப்படவில்லை.

s1 air crossed 3000 bookings

அப்படியிருந்தும், முன்பதிவு துவங்கப்பட்ட 3 மணிநேரத்திற்குள் சுமார் 3,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குறிப்பாக இந்த அளவிற்கு வரவேற்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம், அதன் விலை ஆகும். ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.09 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விலை மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே என்றும், அதன்பின் புக் செய்பவர்களுக்கு ரூ.1.19 லட்சம் எனவும் ஓலா அறிவித்துள்ளது.

மற்ற, எஸ்1 மற்றும் எஸ்1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் இதனை காட்டிலும் சில பத்தாயிரங்கள் அதிகமாக உள்ளன. ஆனால் இதற்கேற்ப, சில அம்சங்கள் குறைவாக எஸ்1 ஏர் ஸ்கூட்டரில் உள்ளன. குறிப்பாக, பேட்டரி தொகுப்பானது அளவில் சற்று சிறியதாக 3kWh ஆக வழங்கப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 125கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: குறைந்த விலையில் கொண்டுவரப்படுவதன் காரணத்தினாலேயே எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, கால தாமதமாகினாலும் பரவாயில்லை என அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பிறகு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங்கை ஓலா துவங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 28, 2023, 11:24 [IST]
English summary
Ola s1 air electric scooter crossed 3000 booking within 3 hours
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X