நியான் பச்சை நிறத்தில் ஓலா எஸ்1 ஏர் அறிமுகம்! பாக்கவே கலர் அட்டகாசமா இருக்குதே!
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நியான் பச்சை நிறத்தை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் 28ஆம் தேதி இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய கலர் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஓலா தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையான அளவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. மிகக் குறுகிய காலத்தில் இந்நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் வரும் 28ஆம் தேதி (நாளை) ஓலா நிறுவனம் தனது எஸ்1 ஏர் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது. இதற்கான பர்ச்சேஸ் விண்டோவையும் திறக்கிறது. இந்நிலையில் இன்று ஸ்கூட்டரில் புதிதாக தற்போது நியான் பச்சை நிறம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள கலர் போக புதிதாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான டீசர் ஓலாவின் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி உள்ளது. தற்போது இதை ஓலா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். பாக்கவே அட்ராக்டிவாக கண்ணைக் கவரும் வகையில் இந்த நியான் பச்சை நிறம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட நிறமாக இருப்பதால் பலர் இதை வாங்க ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

ஓலா எஸ்1ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான பர்ச்சேஸ் விண்டோ 28ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஓப்பன் செய்யப்படுகிறது அப்போது ஏற்கனவே புக்கிங் செய்தவர்கள், ஓலாவின் வாடிக்கையாளர்கள் மட்டுமே பர்ச்சேஸ் செய்ய முடியும் அவர்களுக்கு ரூபாய் 1.09 லட்சம் என்ற விலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது.
ஜூலை 31-ம் தேதி பொதுமக்கள் அனைவருக்கும் இந்த ஸ்கூட்டரை வாங்கும் பர்ச்சேஸ் விண்டோ திறக்கப்படவிருக்கிறது. அப்பொழுது அவர்களுக்கு ரூ 1.19 லட்சம் என்ற விலையில் இந்த எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் டெலிவரி வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது.
ஓலாவிடம் தற்போது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளன. தற்போது எஸ் 1 ஏர் அறிமுகம் ஆகிவிட்டால் மூன்றாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ஓலாவில் இது சேர்ந்து விடும். எஸ் ஒன் ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளியை ஒட்டி அறிவிக்கப்பட்டது. தற்போது தான் விற்பனைக்கு வருகிறது.
அதன் பின்னர் பல்வேறு சோதனைகள் மற்றும் பல ஆய்வுகளை தாண்டி ஓலாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இது அறிமுகமாகியுள்ளது. ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சுமார் ஐந்து லட்சம் கிலோ மீட்டர் வரை டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சோதனைகள் மற்றும் மாற்றங்களுக்கு பிறகே இது விற்பனைக்கு வருகிறது.
எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை 2.7 கிலோ வாட் மோட்டார் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் ஓலா நிறுவனம் அதை 4.5 கிலோ வாட் மோட்டாராக அப்கிரேட் செய்துவிட்டது. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பெல்ட் டிரைவ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. எஸ்1ஏரில் மட்டும் ஹப் மோட்டாராக அது மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்கூட்டரின் விலை குறையும் என்பதால் அதை செய்துள்ளது.
இது போக இன்னும் ஏகப்பட்ட மாற்றங்களை செய்துள்ளது ஓலா நிறுவனம். இந்த ஸ்கூட்டரின் விலையை குறைக்க பல்வேறு யுக்திகளை கையாண்டுள்ளது. முக்கியமாக முன்பக்கம் மோனோஷாப் சஸ்பென்ஷனுக்கு பதிலாக டெலஸ்கோபிக் ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கமும் அதே போல் மோனோ ஷாக் அப்ஷர்பருக்கு பதிலாக ட்வின் ஷாக் அப்ஷர்பர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் முன்பக்கமும் பின்பக்கமும் ட்ரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய ஸ்கூட்டர்களில் இருந்த கர்வடு ஸ்பைன் கொஞ்சம் பிராக்டிகல் பிரச்சனையை ஏற்படுத்துவதால் இதில் பிளாட் ஃப்ளோர் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் உள்ள கிராப் ரெயில் சிம்பிளாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் பேட்டரி பேக்கை பொருத்தவரை 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரே சார்ஜிங் 125 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது என சான்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் ஏற்றும் நேரம் குறித்த விபரங்களை ஓலா நிறுவனம் வெளியிடவில்லை.
ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மொத்தம் மூன்று விதமான ரைடிங் மோடுகள் உள்ளன. எக்கோ, நார்மல், மற்றும் ஸ்போர்ட்ஸ். இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகம் வரை சீறிப்பாயும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை ஏகப்பட்டவர் புக் செய்துவிட்டனர். இப்பொழுதும் புக்கிங் செய்யப்படுகிறது. இப்பொழுது புக் செய்து நாளை வாங்கினால் கூட ரூ10 ஆயிரம் பணம் மிச்சமாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனத்தின் இந்த நியான் பச்சை நிற அறிமுகம் விற்பனையை கணிசமான அளவு உயர்த்தும் என எதிர்பார்க்கலாம். வாடிக்கையாளர்களுகு்கு நிறத்தை தேர்வு செய்வதில் கூடுதலாக ஒரு ஆப்ஷன் கிடைக்கிறது. இளைஞர்கள் பலர் இந்த நிறத்தால் கவரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








