ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ வீடியோ! நீங்களே ஓட்டி பாத்த அனுபவம் வேண்டுமா? 100சதவீதம் கிடைக்கும்!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக எஸ்1 ஏர் காட்சியளிக்கின்றது. தற்போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான பர்சேஸ் விண்டோ ஏற்கனவே இந்தியாவில் திறக்கப்பட்டுவிட்டன. இதற்கு அறிமுகமாக ரூ. 1,09,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆகஸ்டு 15 ஆம் தேதி வரையில் மட்டுமே ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும்.

இந்த நிலையிலேயே சமீபத்தில் ஓலா நிறுவனத்திடம் இருந்து இந்த புதிய வாகனத்தை ஓட்டி பார்ப்பதற்கான அழைப்பு எங்களுக்குக் கிடைத்தது. நாங்களும் இதை ஓட்டி பார்க்கும் ஆர்வத்துடன் ஓலாவின் ஃப்யூச்சர் ஃபேக்டரிக்கு விரைந்தோம். அங்கு எங்களிடம் ஓலாவின் பீட்டா சாஃப்ட்வேர் கொண்ட எஸ்1 ஏர் யூனிட்டுகள் ஒப்படைக்கப்பட்டன. இதையே ரிவியூ செய்து அதுகுறித்த தகவலை வீடியோவாக வெளியிட்டு உள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த புதய எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹப் மோட்டாரை பயன்படுத்தி இருக்கின்றது. இது அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ இயங்கும் திறன் கொண்டது. அதேவேளையில், வெறும் 3.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் இந்த மோட்டார் கொண்டிருக்கின்றது.

Ola s1 air review video

பேட்டரி பேக்கை பொருத்த வரை ஓலா நிறுவனம் 2.98kWh திறன் கொண்ட பேக்கையே எஸ்1 ஏர்-இல் பயன்படுத்தி இருக்கின்றது. இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 125 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஆனால், ஈகோ மோடில் பயணித்தால் மட்டுமே இந்த ரேஞ்ஜ் திறனை பெற்றுக் கொள்ள முடியும். நார்மல் மற்றும் ஸ்போர்ட் என்கிற இரு மோட்களும் எஸ்1 ஏர்-இல் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், குறைவான ரேஞ்ஜையே வெளியேற்றும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 9, 2023, 12:55 [IST]
English summary
Ola s1 air electric scooter review video full details in english
மேலும்... #ஓலா #ola #electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+