இவ்வளவு கம்மி ரோட்ல ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நாளை விற்பனைக்கு வருதா? வாங்குறதுக்கு கூட்டம் குவிய போகுது!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாளை தனது விலை குறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த ஸ்கூட்டர் கான புக்கிங் ஏற்கனவே நடந்து வரும் நிலையில் இதன் விற்பனை நாளை துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் கொடுத்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவிலேயே மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன விற்பனை நிறுவனமாக மாறியுள்ளது.எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. தற்போது ஓலா நிறுவனத்திடம் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய இரண்டு விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருக்கிறது. இந்த ஸ்கூட்டர்கள் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் தற்போது குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த ஓலா நிறுவனம் முடிவு செய்தது.

ola s1 air purchase

அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓலா எஸ்1 ஏர் என்ற குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்தது. இந்த ஸ்கூட்டர் எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ல் இருந்து சில அம்சங்கள் குறைவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஸ்கூட்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புக்கிங் துவங்கப்பட்டு. தற்போது தீவிரமாக புக்கிங் நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை முதல் இந்த ஸ்கூட்டருக்காண விற்பனை விண்டோ திறக்கிறது. இதில் ஏற்கனவே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்தவர்கள் மட்டுமே வாங்க முடியும் ரூபாய் 1.09 லட்சம் என்ற விலையில் இந்த ஸ்கூட்டரை அவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

ola s1 air purchase

ஜூலை 31 ஆம் தேதி முதலே பொதுமக்களுக்கு இந்த விற்பனை விண்டோ திறக்கப்பட இருக்கிறது. இதில் புக் செய்பவர்கள் இந்த ஸ்கூட்டரை ரூபாய் 1.19 லட்சம் என்ற விலையில் வாங்கிக் கொள்ளலாம் என ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது ரூ10 ஆயிரம் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை மூன்று கிலோவாட் ஹவர் பவர் பேட்டரி பேக் கொண்டது. இது முழு சார்ஜர் 125 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி சார்ஜ் ஆக எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும் என்ற தகவலை ஓலா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. அதேபோல இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா ஹைப்பர் சார்ஜர் நெட்வொர்க்கில் செட் ஆகுமா என்ற விவரமும் தெரியவில்லை.

ola s1 air purchase

இந்த ஸ்கூட்டர் அறிவிக்கப்பட்ட போது இது வெறும் 2.7 கிலோ வாட் மோட்டார் உடன் தான் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இது 4.5 கிலோ வாட் மோட்டாருடன் அப்டேட் செய்யப்பட்டு ஹப் மோட்டாராக விற்பனைக்கு வருகிறது. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ வில் பெல்ட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஓலா எஸ் 1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்கனவே புக் செய்தவர்களுக்கு ரூ 1.09 லட்சம் என்ற விலையிலும் புக் செய்யாதவர்களுக்கு ஜூலை 31ஆம் தேதி முதல் ரூபாய் 1.19 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. ஸ்கூட்டரின் டெலிவரி வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஓலா எஸ் ஓனர் யார் எலெக்ட்ரிக் ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதால் இந்த ஸ்கூட்டரின் பின் வில் டயர் பஞ்சரானால் அதை மாற்றுவது சற்று சிரமமாக இருக்கும். இந்த ஸ்கூட்டரின் விலையை குறைக்க ஓலா எஸ்1 மற்றும் எஸ் 1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலிருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சஸ்பென்ஷனில் முன்பக்கம் டெலஸ்கோப்பிக் ஃபோர்க்கும் பின்பக்கம் டிவின் ஷாக் அப்சர்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய ஸ்கூட்டர்களில் முன்பக்கமும் பின்பக்கமும் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருந்தது. இது எல்லாம் விலையை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான்.

எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்களில் அலாய் வீல்கள் இருந்தன. ஆனால் இந்த எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்டீல் வீல்கள் தான் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்குகளும் பழைய ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் இருந்தது. இதில் ட்ரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிவிஎஸ் ஐகியூப் மற்றும் ஏத்தர் 450 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலாவின் இந்த எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகைக்காக ஓலா ரசிகர் தவம் கிடக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். குறைந்த விலையில் என்ட்ரி ஸ்கூட்டர்களை வாங்க பல ஆர்வமாக இருக்கின்றனர். இதனால் இந்த இதன் விலை நிச்சயம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 27, 2023, 21:00 [IST]
English summary
Ola s1 air electric scooter set to launch tommrrow
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X