5 லட்ச கிமீ தொலைவிற்கு ஓட்டியும் ஒன்றும் ஆகல!! ஓலா இ-ஸ்கூட்டரின் தரத்துக்கு இதைவிட என்ன சாட்சிங்க வேண்டும்?

ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சுமார் 5 இலட்ச கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு சோதனை செய்து பார்த்துள்ளதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. இந்த நீண்டத்தூர சோதனை ஓட்டம் குறித்தும், எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்தும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக ஓலா எலக்ட்ரிக் உள்ளது. பெங்களூரை சேர்ந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 2021 ஆகஸ்ட்டில் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமாக சந்தையில் நுழைந்தது. எஸ்1 மற்றும் எஸ்1 புரோ என 2 விதமான வேரியண்ட்களில் ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

ola s1 air 5kms tested

அதன்பின், கடந்த 2022ஆம் ஆண்டில் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அனைத்து விதமான மக்களையும் வாங்க வைக்கும் முயற்சியாக எஸ்1 ஏர் என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைவான விலையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்தது. இந்த நிலையில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் எஸ்1 ஏர் ஸ்கூட்டர் தொடர்பான புதிய பதிவு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த டுவிட்டர் பதிவில், ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சுமார் 5 இலட்ச கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு இயக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த டுவிட்டர் பதிவில் வீடியோ ஒன்றும் பதிவிடப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில், சிவப்பு நிறத்தில் எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றும், அது 5 இலட்ச கிமீ தொலைவிற்கு பல்வேறு சாலைகளில் இயக்கப்பட்டதும் காட்டப்பட்டுள்ளது.

ola s1 air 5kms tested

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்சமயம் எந்த அளவிற்கு பிரபலமானதாக உள்ளதோ, அதே அளவிற்கு கடந்த காலங்களில் இருந்து விமர்சனங்களை சந்தித்துள்ளது. பொதுவாகவே, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்றாலே சார்ஜ் செய்வதில் பிரச்சனை ஏற்படுமோ, வெயிலில் சென்றால் பேட்டரி வெடித்து விடுமோ என்கிற பயம் நம் மக்களிடத்தில் உள்ளது. ஏனெனில், கடந்த சில வருடங்களில் நடந்துள்ள சம்பவங்கள் அப்படி...

ஓலாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இதற்கு ஒருபடி மேலே போய் சாலையில் இயங்கி கொண்டிருந்த போதே பாதியாக உடைந்தன மற்றும் சஸ்பென்ஷன்களில் பிரச்சனை ஏற்பட்டன. இது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தரத்தை காட்டுவதை ஸ்கூட்டரை வாங்கிய பலரும் இணையத்தில் மனம் குமுறுவதை பார்க்க முடிந்தது. சமீப காலமாக அவ்வாறான குற்றச்சாட்டுகளை அவ்வளவாக பார்க்க முடியாவிடினும், அந்த குற்றச்சாட்டுகள் ஓலா எலக்ட்ரிக் பிராண்டின் மீது நீங்கா வடுவாக பதிந்துள்ளன.

ola s1 air 5kms tested

மக்கள் மத்தியில் தங்களது பிராண்ட் மீது உள்ள தவறான கண்ணோட்டத்தை மாற்று முயற்சியாகவே எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த நீண்டத்தூர சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மற்ற எஸ்1 மற்றும் எஸ்1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடுகையில், எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிக முக்கியமான வித்தியாசம் உள்ளது. அதாவது, மற்றவை இரண்டும் பெல்ட் டிரைவ் பவர்டிரெயினை கொண்டவை. ஆனால் எஸ்1 ஏர் மட்டும் மத்தியில் எலக்ட்ரிக் மோட்டாரை கொண்டதாக உள்ளது.

ஆரம்பத்தில் எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.7 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டது. அது பின்னர் 4.5 கிலோவாட்ஸாக அப்கிரேட் செய்யப்பட்டது. எஸ்1 ஏரில் 3kWh பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்வதன் மூலம் அதிகப்பட்சமாக 125கிமீ தொலைவிற்கு சிங்கிள் சார்ஜில் பயணிக்க முடியும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 85kmph ஆகும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்த சோதனை ஓட்டம் ஆனது தங்களது தயாரிப்புகள் எந்த அளவிற்கு தரமானவை மற்றும் நம்பகத்தன்மை கொண்டவை என்பதை காட்டுவதற்காக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் முயற்சி ஆகும். குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தரம் இந்த அளவிற்கு இருக்கும்போது மற்ற இரு எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை மறைமுகமாக கூறும் விதமாகவே இந்த சோதனை ஓட்டத்தில் எஸ்1 ஏர் ஸ்கூட்டரை ஓலா பயன்படுத்தியுள்ளது என நினைக்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 21, 2023, 18:48 [IST]
English summary
Ola s1 air electric scooter tested over 5 lakh kms
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X