2வாரத்தில் ஓலா இ-ஸ்கூட்டர்களுக்கு கிடைத்த புக்கிங் எவ்வளவு தெரியுமா? அடிச்சு சொல்றோம் இத நீங்க நம்ப மாட்டீங்க!
இந்தியாவின் மாபெரும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) உருவெடுத்து இருக்கின்றது. இந்த நிறுவனம் தற்போது எஸ்1 போர்டஃபோலியோவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கே கடந்த இரண்டே வாரங்களில் மட்டும் மிகப் பெரிய எண்ணிக்கையில் புக்கிங் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுமார் 75 ஆயிரம் புக்கிங்குகளையே நிறுவனத்தின் எஸ்1 வரிசையில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெற்றிருக்கின்றன. அனைத்தும் கடந்த இரண்டே வாரங்களில் கிடைத்தவை ஆகும். நிறுவனம் எஸ்1 ப்ரோ ஜென்1, எஸ்1 ப்ரோ ஜென்2, எஸ்1 எக்ஸ் மற்றும் எஸ்1 ஏர் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றிற்கே இந்தியர்கள் புக்கிங்கை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். புதிதாக அண்மையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட எஸ்1 எக்ஸ் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, எக்ஸ்1 பிளஸ் (3kWh), எஸ்1 எக்ஸ் (2kWh) மற்றும் எஸ்1 எக்ஸ் (3kWh) ஆகும்.
இவற்றிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கத் தொடங்கி இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். எஸ்1 எக்ஸ் (2kWh) தேர்வானது இந்தியாவில் ரூ. 89,999 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.
நிறுவனத்தின் அதிக விலைக் கொண்ட தேர்வு எது என்றால் எஸ்1 ப்ரோ ஜென்2 ஆகும். இதற்கு ரூ. 1,47,499 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. விலைக்கு ஏற்ப இதில் சிறப்பு வசதிகளையும் ஓலா வாரி வழங்கி இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடே மணிக்கு 120 கிமீ ஆகும்.
மேலும், இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 195 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகள் இந்த மாடலுக்கு வழங்கப்படுகின்றது. இத்துடன் ஈகோ, நார்மல், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைப்பர் ஆகிய நான்கு விதமான ரைடிங் மோட்களும் ஓலா எஸ்1 ப்ரோ ஜென்2-வில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுபோன்ற மிக சிறப்பான வசதிகளை இந்த தேர்வுக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இதற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், ஏழை மற்றும் எளிய மக்களும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் ஓலா நிறுவனம் எஸ்1 எக்ஸ் மாடலை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
இதனை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கு மற்றொரு காரணமும் இருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் இந்தியாவை முற்றிலும் ஐசிஇ வாகனங்களே இல்லாத நாடாக மாற்றும் எண்ணத்தில் இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையான விலையில் புதிய எஸ் 1 எக்ஸ்-க்கு அது நிர்ணயித்து உள்ளது.
இதன் 2 kWh ஆப்ஷனில் ஓர் முழு சார்ஜில் 91 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இதன் டாப் ஸ்பீடோ மணிக்கு 85 கிமீட்டராக இருக்கின்றது. இத்துடன் ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய ரைடிங் மோட்களும் வழங்கப்படுகின்றன.
நிற தேர்வை பொருத்தவரை 7 விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஆகையால், வரும் காலத்தில் இது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என வாகனத்துறை வல்லுநர்கள் சிலர் கணித்திருக்கின்றனர். ஆகஸ்டு 15 ஆம் தேதி அன்றே இதனை இந்தியாவில் ஓலா விற்பனைக்குக் களமிறக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: "இந்தியாவில் இந்த அளவிற்கு மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றதா" என்றே வாயை பிளக்க செய்திருக்கின்றது, இப்போது ஓலாவிற்கு கடந்த 2 வாரங்களில் கிடைத்திருக்கும் 75 ஆயிரம் புக்கிங்குகளின் விபரம் உள்ளது. வரும் நாட்களில் இதைபோல இன்னும் அதிகளவில் புக்கிங்குகள் ஓலாவிற்குக் கிடைக்கும் என்றே கணிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








