இவ்ளோ கம்மியான எடைக்கே ஓலா மின்சார ஸ்கூட்டர் நாக்க தள்ளிருச்சே.. வீடியோவ பாத்தீங்க அது வேண்டாம்னு ஓடிருவீங்க!

கேரளாவைச் சேர்ந்த யுட்யூபர் ஒரு சமீபத்தில் ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) மற்றும் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மலைப் பாதை செயல்திறனை ஆராயும் சில சோதனைகளைச் செய்தனர். இந்த சோதனையில் எந்த இருசக்கர வாகனம் சிறப்பாக செயலாற்றியது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஓலா எலெக்ட்ரிக், எங்கள் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் இந்தியாவின் பெஸ்ட் மின்சார இருசக்கர வாகனம் என மார் தட்டிக் கொண்டிருக்கின்றது. இதற்கேற்ப நம்முடைய நாட்டில் அதன் மின்சார ஸ்கூட்டர்களே மிக அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கு போட்டியாக பஜாஜ் அதன் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், ஹீரோ மோட்டோகார்ப் அதன் விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

Bajaj chetak & ola s1 pro hill climb test

இதுதவிர, பெங்களூருவைச் சேர்ந்த ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலாவிற்கு போட்டியாக இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தனை நிறுவனங்களுக்கும் ஓலா எலெக்ட்ரிக் தற்போது தண்ணீ காட்டிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் மாடலாக ஓலா எஸ்1 ப்ரோ இருக்கின்றது.

இதையே சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஓர் யுட்யூபர் மலைப் பாதையில் வைத்து அதன் மலையேறும் திறனைச் சோதித்து பார்த்திருக்கின்றார். இதை மட்டுமல்ல பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அதே மலைப் பாதையைப் பயன்படுத்தி அவர் சோதனைக்கு உட்படுத்தி இருக்கின்றார். இந்த இரண்டில் எது மிக சிறப்பாக செயல்பட்டு என்பதையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Ola s1 pro hill climb test

பொதுவாக யுட்யூபர் இதுமாதிரியான சோதனைகளை மேற்கொள்ளும்போது இரண்டு வாகனங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி பார்த்து சோதனைச் செய்வர். ஆனால், இந்த விஷயத்தில் இரு பாகங்களாக அவர் சோதனையைச் செய்து பார்த்திருக்கின்றார். அதாவது, முதலில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், இரண்டாவதாக பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் என தனி தனியாக அவர் சோதனையை மேற்கொண்டிருக்கின்றார்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், யுட்யூபரின் சப்ஸ்கிரைபைர் ஒருவருடையதாகும். ஓலா எஸ்1 ப்ரோவின் உரிமையாளரை வீடியோவிலேயே பார்க்க முடிகின்றது. இந்த எஸ்1 ப்ரோ சமீபத்தில் வாங்கப்பட்ட ஒன்றாகும். வீடியோ எடுத்த அன்றைய தினத்தின்படி 1,000 கிமீ வரை மட்டுமே அது இயக்கப்பட்டிருக்கின்றது.

Bajaj chetak hill climb test

இத்தகைய நடுத்தர புதிய நிலையில் இருந்த எஸ்1 ப்ரோவையே அதன் மலையேறும் திறனை ஆராயும் விதமாகச் சோதித்து பார்த்திருக்கின்றனர். இந்த சோதனையில் லேசாக அந்த வாகனம் சொதப்பியது என்றே கூறலாம். முதல் ரவுண்டில் விறுவிறுவென ஏற்றமான மலைப்பாதையில் ஏறிய அந்த வாகனம், இரண்டாவது ரவுண்டில் தெணற தொடங்கிவிட்டது.

முதல் ரவுண்டின்போது அதிக வேகமாக செல்ல பயன்படும் ஸ்போர்ட்ஸ் மோடில் நிற்காமல் வாகனம் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், இரண்டாவது ரவுண்டில் ஸ்போர்ட்ஸ் அல்லாத மோடில் நிறுத்தி நிறுத்தி மலையேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே ஓலா எஸ்1 ப்ரோ திணற தொடங்கி உள்ளது.

மலையேற்றம் மிகவும் செங்குத்தாக இருந்ததன் காரணத்தினாலேயே அதனால் அந்த சூழலைச் சமாளிக்க முடியாமல் போயிருக்கின்றது. தொடர்ச்சியாக மலையில் ஏற முயற்சி செய்ததன் விளைவாக அந்த ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் செயலற்றுப் போயிருக்கின்றது. இத்தனைக்கும் வண்டியில் அமர்ந்திருந்த இருவரின் எடையும் 130க்கும் குறைவாக இருந்த நிலையிலேயே இத்தகைய ஃபெயிலியரை அது சந்தித்து இருக்கின்றது.

இதேபோல் பஜாஜ் சேத்தக்கும் அதே எடையுள்ள நபர்களால் இயக்கப்பட்டது. ஆனால், ஆச்சரியமளிக்கும் விதமாக ஒரே ஸ்ட்ரெட்சாக இயக்கப்பட்டபோதும் அது சிறப்பாக இயங்கியது, செங்குத்தான இடங்களில் நிறுத்தி நிறுத்தி இயக்கியபோதும் அது மிக சிறப்பாக செயல்பட்டிருக்கின்றது. இதனால், ஓலா எஸ்1 ப்ரோவை காட்டிலும் மிக சிறந்த ஹில் க்ளிம்ப் வசதிக் கொண்ட வாகனம் பஜாஜ் சேத்தக் என்பது தெரிய வந்திருக்கின்றது. யுட்யூபர்களின் வீடியோவின் வாயிலாக இது கண்டறியப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்களும் உங்கள் பகுதிக்கு எது பெஸ்ட்டான வாகனம் என்பதை ஒரு ரைடு செய்து பார்த்துவிட்டு வாங்க வேண்டும் என்பதே எங்களின் ஆலோசனையாகும். வாங்கிவிட்ட பின்னர் இதுபோன்ற சூழல்களை உங்கள் புதிய வாகனம் சமாளிக்கவில்லை என்றால் அந்த வாகனத்தின் மீது இருக்கும் காதல் முழுமையாக போக செய்துவிடும். மேலும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும். இதைத்தவிர்க்க ஒரு குட்டி டெஸ்ட் டிரைவ் போடுவதே நல்லது.

More from DriveSpark

Article Published On: Sunday, June 11, 2023, 8:29 [IST]
English summary
Ola s1 pro and bajaj chetak which one is best hill climb ev
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X