ஆபத்தை உணராமல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடலில் மூழ்க வைத்த யுட்யூபர்.. சோதனைனாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ஓலா எஸ்1 ப்ரோ இருக்கின்றது. நிறுவனத்தின் அதிக விலைக் கொண்ட மின்சார இருசக்கர வாகன மாடலும் இதுவே ஆகும். இந்த வாகனத்தையே இந்தியாவைச் சேர்ந்த யுட்யூபர் ஒருவர் கடல் நீரில் மூழ்க வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்கின்றார்.

ஓலா எஸ்1 ப்ரோ ஓர் வாட்டர் ப்ரூஃப் வாகனம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், கடல் உப்பு நீரில் இது எப்படி செயல்படும் என்பது யாருக்கும் தெரியாது. இதனையே தன்னுடைய சோதனையின் வாயிலாக யுட்யூபர் சோதித்து பார்த்திருக்கின்றார். இந்த சோதனையில் அவர் வெற்றியும் கண்டிருக்கின்றார்.

Youtuber rides ola s1 pro electric scooter into sea

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஐபி67 மற்றும் 55 தர சான்று பெற்ற பேட்டரி பேக் மற்றும் மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. தூசி, நீர் ஆகியவற்றால் எந்த பாதிப்பையும் சந்திக்காது என்பதற்கான சான்றே இது ஆகும். இந்த தர சான்றை சரி பார்க்கும் விதமாகவே யுட்யூபர் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடலில் வைத்து சோதனைக்கு உட்படுத்தி இருக்கின்றார்.

"சோதனை செய்யுறது எல்லாம் சரிதான்.. அதுக்குன்னு வண்டி முழுசும் தண்ணீருல மூழ்குற அளவுக்கா சோதனைய நடத்துவீங்க" என சொல்லும் அளவிற்கு அந்த நபர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடலில் மூழ்க சோதனைக்கு உட்படுத்தி இருக்கின்றார். ஆமாங்க, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுசா மூழ்கின்ற அளவிற்கு அலைகள் அதன் மீது மோதின. இது மிகவும் ஆபத்தான செயல் ஆகும்.

Electric scooter into sea

ஏனெனில் கடல் அலைகளால் வாகனம் மீண்டும் கடலுக்குள் இழுத்துச் செல்ல நேரிடும். மிக பெரிய உருவம் கொண்ட கார்களே இதற்கு முன்பாக கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு இருக்கின்றன. இத்தகைய ரிஸ்கையே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் சந்தித்து இருக்கின்றது.

இருப்பினும், சமாளித்து யுட்யூபர் அந்த வாகனத்தை வெளியில் மீட்டு கொண்டு வந்திருக்கின்றார். இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் அந்த வாகனம் முழுசா கடல் நீரில் மூழ்கிய பின்னரும் சூப்பராக ஓடி இருக்கின்றது. இதுவே, ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனத்தை இவ்வாறு ஓட்டி இருந்தால் பெருத்த சிக்கல்களைச் சந்தித்திருக்க நேரிட்டு இருக்கும்.

Ola escooter rides into sea

ஆனால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரோ மிக சிறப்பாக செயல்பட்டது. ஹாரன் தொடங்கி இன்டிகேட்டர் பஸ்ஸர் வரையில் முழுமையாக தண்ணீரில் முழ்கிய பின்னரும் மிக சிறப்பாக இயங்கின. யுட்யூபர் தனது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மேலும் சில ஆய்வுகளுக்கு உட்படுத்தினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், ரேஞ்ஜ், வேகம் உள்ளிட்டவைகுறித்த டெஸ்டையும் அவர் செய்தார். சுஸுகி பர்க்மேன், யமஹா ஆர்15 மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் உள்ளிட்ட பைக்குகளுடன் ரேஸ் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த போட்டிகளிலும் தான்தான் மிக சிறந்த வாகனம் என்பதை ஓலா எஸ்1 ப்ரோ நிரூபித்துக் காட்டி இருக்கின்றது.

நொடிப் பொழுதில் அதிக வேகத்தை எட்டி அனைத்தையும் இந்த மின்சார வாகனம் வீழ்த்திவிட்டது. அதேவேளையில், ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குடனான போட்டியில் மட்டும் இந்த வாகனம் லேசாக சிரமத்தைச் சந்தித்ததை நம்மால் பார்க்க முடிகின்றது. இருப்பினும், இறுதியில் வெற்றியை ஓலா எஸ்1 ப்ரோவே சூடியது.

100 சதவீத சார்ஜில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 177 கிமீ ரேஞ்ஜை வழங்கி இருக்கின்றது. இந்தியாவில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 1,39,999 என்கிற விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதனால் மணிக்கு 116 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்.

இந்த திறனையே யுட்யூபர் தற்போது டெஸ்ட் செய்து பார்த்து, அது உண்மை என்பதையும் கண்டறிந்திருக்கின்றார். மேலும், இந்த வாகனத்தால் வெறும் 2.9 செகண்டுகளிலேயே 0-40 கிமீ வேகத்தை எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளைத் தாங்கியதாகவே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சுற்றிலும் நேர்மறையான கருத்துகள் மட்டுமல்ல சில எதிர்மறையான கருத்துகளும் பரவிக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த யுட்யூபரின் தரமான ஆய்வுகள் குறித்த வீடியோ வெளியாகி இருக்கின்றது. இந்த வீடியோ எஸ்1 ப்ரோவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 3, 2023, 12:07 [IST]
English summary
Ola s1 pro electric scooter rides into sea here is video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X