ஒட்டு மொத்தமா எல்லாத்தையும் மாத்திட்டாங்க! ரேஞ்ச் எல்லாம் கூடிருச்சு! இப்ப எவ்வளவு தெரியுமா?
ஓலா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை பிளாட்பார்மை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி தனது அனைத்து விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் இந்த பிளாட்ஃபாமிற்க்கு மாற்றி உள்ளது. ஓலாவின் முதல் தலைமுறைக்கும் இரண்டாம் தலைமுறைக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை தான் இங்கு விரிவாக காணப்போகிறோம்.
ஓலா நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன விற்பனை நிறுவனமாக இருந்து வருகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டில் இந்தியாவிலேயே அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யும் நிறுவனம் தற்போது ஓலா தான். பெட்ரோல் ஸ்கூட்டருக்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஓலா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை பிளாட்ஃபார்மை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. அதன் படி ஓலா தனது அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் இனி இரண்டாம் தலைமுறை பிளாட்பார்மில் தான் தயாரிக்கும் என அறிவித்துள்ளது.
ஓலா நிறுவனத்திலும் தற்போது எஸ்1 ப்ரோ மற்றும் எஸ்1 ஏர் ஆகிய இரண்டு விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருக்கிறது. இந்நிலையில் நேற்று புதிதாக எஸ்1 எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3 வேரியண்ட்களில் அறிமுகமானது. அத்தனை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் இந்த இரண்டாம் தலைமுறை பிளாட்ஃபார்மில் தான் தயாராகிறது.

ஏற்கனவே எஸ் ஒன் ப்ரோ முதல் தலைமுறை பிளாட்ஃபார்மில் தயாராகி வந்த நிலையில் அந்த எெலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் இரண்டாம் தலைமுறை பிளாட்ஃபார்மிற்க்கு ஓலா நிறுவனம் மாற்றி உள்ளது. புதிய தலைமுறை பிளாட்பார்மில் பேட்டரி மற்றும் புதிய கருவிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பிளாட்ஃபார்ம் மற்றும் டிசைன்: ஓலாவின் புதிய இரண்டாம் தலைமுறை பிளாட்ஃபார்ம் முந்தைய தலைமுறையை விட எடை குறைவாகவும் அதே நேரம் பலம் அதிகமாகவும் இருக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை பிளாட்பார்ம் ஃப்ளோர் போர்ட் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறையில் நடுப்பக்கத்தில் ஒரு சிறிய ஹம்ப் இருக்கும்.

புதிய எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன்பக்கம் டெலஸ்கோபிக் போர்க் மற்றும் பின்பக்கம் ஷாக் அப்ஸர்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறையில் முன் பக்கம் மோனோ ஷாக் அப்ஸர்பர் மட்டுமே இருந்தது. இந்த மாற்றம் ஸ்கூட்டருக்கே ஒரு சிறப்பான லுக்கை கொடுக்கிறது. பின்பக்கம் புதிய பாக்ஸ் செக்சன் ஸ்விங் ஆர்மாக வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய தலைமுறையில் ஒரு சைடு உள்ள ஸ்விங் ஆர்ம் மட்டுமே இருந்தது. மேலும் இதில் டர்ன் சிக்னல் லைட் ஸ்லீக்காக வழங்கப்பட்டுள்ளது. மற்றும் புதிய எல்இடி ஹெட் லைட் செட்டப்பும் வழங்கப்பட்டுள்ளது. லுக்கில் பெரிய அளவு வித்தியாசம் இல்லை இரண்டும் பார்க்க ஒன்றாக தான் இருக்கிறது.
பேட்டரி மற்றும் ரேஞ்ச்: புதிய ஓலா எஸ் ஒன் ப்ரோ ஸ்கூட்டரை பொறுத்தவரை ஒரு கிலோ வாட் பேட்டரி பேக்கப் கொடுக்கப்பட்டுள்ளது. இது பழைய பேட்டரியை விட குறைந்த எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முழுசார்ஜில் 150 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. 0 - 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.6 நொடியில் எட்டிப் பிடித்து விடும். அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.
பழைய தலைமுறை ஸ்கூட்டரை பொறுத்தவரை 170 கிலோமீட்டர் ரேஞ்ச் தான் கொடுத்தது 0 to 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டிப் பிடிக்க 2.9 நொடிகளை எடுத்துக் கொண்டது அதிகபட்சமாக 116 கிலோமீட்டர் வேகத்தில் தான் பயணித்தது. பேட்டரியை ரீசார்ஜ் செய்வது இரண்டு தலைமுறையிலும் ஒன்று தான் 0- 100% பேட்டரி சார்ஜ் ஏற 6.5 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.
அம்சங்கள்: அம்சங்களை பொருத்தவரை இரண்டு தலைமுறையிலும் பெரிய அளவில் மாற்றம் ஒன்றும் இல்லை ஸ்பீக்கர், பார்ட்டி மோடு, ஃபுல் சூட் கனெக்டிவிட்டி அம்சங்கள் எல்லாம் அப்படியே இருக்கிறது. டிஸ்ப்ளேவில் சிறிய மாற்றங்கள் செய்தாலும் வாடிக்கையாளரின் பார்வையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை.
புதிய தலைமுறை எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அலாய்வீல்கள், டிஸ்க் பிரேக், காம்பினேஷன் பிரேக்கிங் சிஸ்டம், ஃபுல் எல்இடி லைட் , 12 இன்ச் வீல் 110/90 அளவுள்ள டயர். ஆகியன உள்ளன. பூட் ஸ்பேசை பொருத்தவரை பழைய தலைமுறையிலிருந்து இதில் இரண்டு லிட்டர் அளவு அதிகமாகியுள்ளது. ஆனால் இது பார்க்கும்போது எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் இந்தியாவில் மிக முக்கியமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் நிலையில், அந்நிறுவனம் கொண்டு வந்துள்ள இந்த அப்டேட் ஓலா ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. இனி ஓலா ஸ்கூட்டர்களை வாங்குபவர்கள் இந்த புதிய தலைமுறை அட்ரஸ் ஸ்கூட்டர்களை வாங்க முடியும் என அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications









