இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் பண்ணி இருக்கீங்களா? செம்ம ஹாப்பியான நியூஸ் வந்திருக்கு!!

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் புதிய எஸ்1 புரோ ஜென் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளை மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கியுள்ளது. ஓலாவின் எஸ்1 புரோ ஜென் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளன? வாருங்கள் இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக ஓலா எலக்ட்ரிக் விளங்குகிறது. 2021ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக எஸ்1 மாடலை அறிமுகப்படுத்திய ஓலா, இன்று (அக்.13) மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் எஸ்1 புரோ ஜென் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரிகளை துவங்கியுள்ளது.

ola s1 pro deliveries commences

2021இல் ஓலா நிறுவனம் அதன் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எஸ்1 மற்றும் எஸ்1 புரோ என 2 விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தியது. இதில், எஸ்1 வேரியண்ட்டிற்கு மாற்றாக பின்னர் எஸ்1 ஏர் அறிமுகப்படுத்தப்பட்டது வேறு கதை. எஸ்1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2ஆம் தலைமுறை மாடல் தான் எஸ்1 புரோ ஜென் 2 ஆகும்.

ஜென்-2 பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய எஸ்1 புரோ ஜென் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முந்தைய தலைமுறை உடன் ஒப்பிடுகையில், முற்றிலுமாக ஓலா மாற்றியமைத்துள்ளது. அதாவது, ரைடிங் எக்ஸ்பிரீயன்ஸ் புதுமையானதாக கிடைக்கும் என்பது மட்டுமின்றி, அதற்கேற்ப ஸ்கூட்டரின் செயல்படுதிறனிலும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வேலை பார்த்துள்ளது.

ola s1 pro deliveries commences

புதிய ஓலா எஸ்1 புரோ ஜென் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரி பணிகள் இந்தியாவின் 100 நகரங்களில் முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ளதாகவும், பிற பகுதிகளில் விரைவில் துவங்கப்படும் என்றும் ஓலா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரூ.1,47,499 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் எஸ்1 புரோ ஜென் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரீடிசைனிலான பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது.

அத்துடன், ஸ்கூட்டரின் பவர்டிரெயின் மற்றும் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக் சிஸ்டங்களின் வடிவமும் மாற்றப்பட்டுள்ளது. இவ்வளவு ஏன், ஸ்கூட்டரின் அடிப்படையான ஃப்ரேம் மற்றும் சஸ்பென்ஷன் செட்-அப் கூட திருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, புதிய எஸ்1 புரோ ஜென் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எடை 6 கிலோ வரையில் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஸ்கூட்டரின் ரேஞ்சும் 195கிமீ ஆக உயர்ந்துள்ளது.

ola s1 pro deliveries commences

அதாவது, ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 195கிமீ தொலைவிற்கு ஸ்கூட்டரை இயக்கி செல்லலாம். புதிய எஸ்1 புரோ ஜென் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக 11 கிலோவாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக்கூடிய எலக்ட்ரிக் மோட்டார் ஸ்கூட்டரின் மத்தியில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மெருக்கேற்றப்பட்ட ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 120kmph ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 0-இல் இருந்து 40kmph வேகத்தை வெறும் 2.6 வினாடிகளில் எட்டிவிட முடியும். இதன் மூலம், இந்தியாவின் வேகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இது விளங்குவதாக ஓலா தெரிவிக்கிறது. ஜெட் பிளாக், மேட் வெள்ளை, ஸ்டெல்லார், மிட்நைட் நீலம் மற்றும் அமேதீஸ்ட் என்கிற 5 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதல் தலைமுறை ஸ்கூட்டர்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களினால், 2ஆம் தலைமுறை ஸ்கூட்டர்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கவனத்துடன் வடிவமைத்துள்ளது. இதனால்தான், புதிய எஸ்1 புரோ ஜென் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பார்ப்போம், இந்த ஸ்கூட்டர் கஸ்டமர்ஸை எந்த அளவிற்கு கவரும் என்று...

More from DriveSpark

Article Published On: Friday, October 13, 2023, 21:59 [IST]
English summary
Ola s1 pro gen 2 electric scooters deliveries commences
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X