டிவிஎஸ் எக்ஸ் vs ஓலா எஸ்1 ப்ரோ.. ரெண்டுத்துல எது பெஸ்ட்னு தெரிஞ்சிக்கணுமா? அக்கு வேறா ஆணி வேறா தெரிஞ்சிக்கலாம்

டிவிஎஸ் (TVS) நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக எக்ஸ் (X) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மிக அதிக பிரீமியம் அம்சங்களைக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இதுவாகும். எலைட் மக்களைக் கவரும் விதமாக பிரத்யேக தோற்றத்திலும், பல புதிய அம்சங்களையும் இந்த வாகனத்தில் டிவிஎஸ் வழங்கி இருக்கின்றது.

இதன் வருகை ஓலா எஸ்1 ப்ரோ ஜென்2 (Ola S1 Pro Gen2)-விற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றது. ஆமாங்க, இதற்கு போட்டியாகவே டிவிஎஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

Tvs x vs ola s1 pro

அப்படி எந்தெந்த வகையில் எல்லாம் இது ஓலா எஸ்1 ப்ரோவிற்கு போட்டியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, எஸ்1 ப்ரோ - எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஒப்பீடு செய்த தகவலையே பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

தோற்றம்: ஓலா எஸ்1 சற்று வித்தியாசனமான ஓர் உருவத்தைக் கொண்டிருக்கின்றது. இதன் தோற்றம் ஓர் ரோபோட்டைப் போல உள்ளது. இதனை டிவிஎஸ் எக்ஸ் உடன் ஒப்பிடுகையில், டிவிஎஸ் எக்ஸ் வேற லெவல் ஸ்போர்ட்டி தோற்றத்தைக் கொண்டதாக உள்ளது. குறிப்பாக, இதன் முகப்பு பகுதி முற்றிலும் முரட்டுத் தனமானதாக இருக்கின்றது. தன்னுடைய கிரியான் கான்செப்ட் மாடலின் ஸ்டைலை அப்படியே தழுவி இதற்கு மேக்ஸி ஸ்கூட்டர் ஸ்டைலை டிவிஎஸ் கொடுத்திருக்கின்றது.

Tvs x vs ola s1 pro

சிறப்பம்சங்கள்: ஓலா எஸ்1 ப்ரோ ஜென்2-வில் இடம் பெற்றிருக்கும் மிக முக்கியமான அம்சமாக 7 அங்குல தொடுதிரை இருக்கின்றது. மூவ் ஓஎஸ் 4 சாஃப்ட்வேரே இந்த திரையில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், பன்முக ரைடிங் மோட்கள், ஹில் ஹோல்டு அசிஸ்ட் என ஏகப்பட்ட அம்சங்கள் அதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

அதேவேளையில், டிவிஎஸ் நிறுவனம் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தேவைக்கேற்ப எந்த கோணத்தில் வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ளும் வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ரிவர்ஸ் அசிஸ்டன்ட், லைவ் வீடியோ, கேம் விளையாடும் வசதி எண்ணற்ற புதிய அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன.

இதுதவிர, கூகுள் செய்யும் வசதி, ஏபிஎஸ் அம்சம், க்ரூஸ் கன்ட்ரோல், டிவிஎஸ் ஸ்மார்ட்எக்ஸோன்னக்ட், திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம், சாவியே இல்லாமல் ரைடு செய்யும் வசதி மற்றும் பன்முக ரைடிங் மோட்கள் உள்ளிட்ட அம்சங்களும் புதிய டிவிஎஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

ரேஞ்ஜ் திறன் மற்றும் மின் மோட்டார் விபரம்: ஓலா எஸ்1 ப்ரோ ஜென்2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 140 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதில் 5.5 கிலோவாட் திறன் கொண்ட மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ ஆகும். இதனால் 0-40 கிமீ வேகத்தை வெறும் 2.6 செகண்டுகளிலேயே எட்டிவிட முடியும்.

டிவிஎஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 140 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இதில் பொருத்தப்பட்டு இருப்பது 7 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் ஆகும். இதனால் மணிக்கு 105 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். அத்துடன், வெறும் 2.6 செகண்டுகளிலேயே 0-40 கிமீ வேகத்தை அது எட்டிவிடும்.

விலை விபரம்: புதிய எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டிவிஎஸ் நிறுவனம் 2.5 லட்ச ரூபாயை விலையாக நிர்ணயம் செய்திருக்கின்றது. இதற்கு ஃபேம்2 திட்டம் பொருந்தாது என்பதாலேயே இந்த அளவு அதிக விலை அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால், ஓலா எஸ்1 ப்ரோ ஜென்2 ரூ. 1.40 லட்சத்திற்கே வாங்கிவிட முடியும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பிரீமியம் வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் டூ-வீலராக எக்ஸ் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதற்கு என்ன மாதிரியான வரவேற்பு நாட்டில் கிடைக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 26, 2023, 8:30 [IST]
English summary
Ola s1 pro gen2 vs tvs x comparison details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+