ஓலா ஷோரூமில் இனி இந்த கம்மி விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பார்க்கலாம்!! சும்மா கூட வந்து பார்த்துட்டு போங்க!

ஓலா எஸ்1 எக்ஸ்+ (Ola S1 X+) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொழிற்சாலையில் இருந்து டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர தயாராகி உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையிலான படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சமீப ஆண்டுகளில் நிறைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை புதியதாக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வரிசையில் வெளிவந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் எக்ஸ்+ ஆகும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஓலா எஸ்1 எக்ஸ்+ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், எஸ்1 எக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கி உள்ளன.

ola s1 x+ electric scooter

இதனை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் படங்களுடன் தெரிவித்துள்ளது. ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள படங்கள் பெங்களூரின் இந்திரா நகரில் உள்ள ஓலா ஷோரூம் ஒன்றில் இருந்து வெளியாகி உள்ளன. பெங்களூரை சேர்ந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்துக்கு ஓசூருக்கு அருகே தொழிற்சாலை உள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் மிக பெரிய தொழிற்சாலைகளுள் ஒன்றாக விளங்கும் இதில் உற்பத்தி செய்யப்படும் ஓலா எஸ்1 எக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஷோரூம்களை வந்தடைய துவங்கி உள்ளன. ஆதலால், விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ஓலா எஸ்1 எக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஷோரூமில் நேரடியாக பார்வையிடலாம்.

ola s1 x+ electric scooter

இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,09,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்1 எக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 151கிமீ தொலைவிற்கு ஸ்கூட்டரை இயக்கி செல்லலாம். ஆனால், இந்த ரேஞ்சை பெறுவதற்கு ஸ்கூட்டரின் இயங்கும் சூழல், சாலை மற்றும் டிரைவிங் ஸ்டைல் என நிறைய விஷயங்கள் சரியாக அமைய வேண்டும்.

ஆதலால், எஸ்1 எக்ஸ்+ ஸ்கூட்டரின் நிஜ உலக ரேஞ்ச் ஈக்கோ மோடில் 125கிமீ எனவும், நார்மல் மோடில் 100கிமீ எனவும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை மட்டுமின்றி, ஸ்போர்ட்ஸ் ரைடிங் மோடும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படுகிறது. டாப் ஸ்பீடில் ஸ்கூட்டரை இயக்க உதவும் இந்த ரைடிங் மோடில் ஸ்கூட்டரின் ரேஞ்ச் குறைவாக கிடைக்கும்.

ola s1 x+ electric scooter

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை 500 கிலோவாட்ஸ் சார்ஜரின் உதவியுடன் 7.4 மணிநேரங்களில் முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிடலாம். எஸ்1 எக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மத்தியில் பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் தொடர்ச்சியாக 2.7 கிலோவாட்ஸ் இயக்க ஆற்றலையும், அதிகப்பட்சமாக 6 கிலோவாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றலையும் ஸ்கூட்டருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது.

0-இல் இருந்து 40kmph வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 90kmph ஆகும். 5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, எல்இடி விளக்குகள், சைடு-ஸ்டாண்ட் அலார்ட், ரிவர்ஸ் மோட், ரிமோட் பூட் அன்லாக், நாவிகேஷன் உள்ளிட்டவை ஓலா எஸ்1 எக்ஸ்+ ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும். அத்துடன், ஒவர்-தி-ஏர் அப்டேட்கள், ப்ளூடூத் & ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி உள்ளிட்டவற்றையும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்கக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சமீப காலத்தில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே, எஸ்1 ஸ்கூட்டர்கள் வரிசையில் எக்ஸ்+ போன்ற புது புது மாடல்கள் களமிறக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஷோரூமில் இருந்து வெளியாகியுள்ள இந்த படங்களில் எஸ்1 எக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தோற்றம் பிரீமியம் தரத்தில் பளபளப்பாக ஜொலிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 21, 2023, 19:59 [IST]
English summary
Ola s1 x plus electric scooter started reaching showrooms pictures out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X