ஓலா ஸ்கூட்டர் பேட்டரி விலையைப் பார்த்தா தலையே சுத்திடும்! இதுக்கு புதுசா ஒரு ஸ்கூட்டரை வாங்கிடலாம் போல!

ஓலா ஸ்கூட்டரின் பேட்டரியின் விலை ரூ87 ஆயிரம் எனத் தெரிய வந்துள்ளது. ஸ்கூட்டரே ரூ1.28 லட்சம் என்ற நிலையில் பேட்டரியின் விலையே இவ்வளவு அதிகமாக இருக்கிறதா என மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ஸ்கூட்டர் செக்மெண்டில் மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. மக்கள் பலர் பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கத் துவங்கிவிட்டனர். கிட்டத்தட்ட ஒரே விலை அல்லது சற்று அதிகமான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையானாலும், பெட்ரோல் செலவைக் கணக்கிடும் போது சார்ஜ் போடச் செலவு குறைவாக இருப்பதால் இந்த ரக ஸ்கூட்டர்களை மக்கள் அதிகம் விரும்பத் துவங்கிவிட்டனர்.

ஓலா ஸ்கூட்டர் பேட்டரி விலையைப் பார்த்தா தலையே சுத்திடும்! இதுக்கு புதுசா ஒரு ஸ்கூட்டரை வாங்கிடலாம் போல!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஓலா, ஏத்தர், டிவிஎஸ் ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் இருக்கிறது. பலர் பெட்ரோல் செலவையும், சார்ஜ் போடும் செலவையும் மட்டுமே ஒப்பிட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குகின்றனர். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் பற்றி தெரிந்தவர்களுக்கு பேட்டரியின் வாழ்நாள் மற்றும் புதிய பேட்டரிக்கான செலவு குறித்தும் யோசிக்க வேண்டும் என்பது நன்கு தெரியும்.

ஓலா ஸ்கூட்டர் பேட்டரி விலையைப் பார்த்தா தலையே சுத்திடும்! இதுக்கு புதுசா ஒரு ஸ்கூட்டரை வாங்கிடலாம் போல!

சமீபத்தில் ட்விட்டரில் தருண் பால் என்பவர் ஒரு புகைப்படம் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அந்த புகைப்படத்தில் ஒரு ஒரு மரப்பலகையால் ஆன பெட்டி இருந்தது. இந்த பெட்டியில் ஓலா கம்பெனியின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் பெட்டிக்குள் இருப்பது ஓலாவின் ஃபிக்ஸட் பேட்டரி பேக் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் விலை ரூ87,298 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ட்விட்டை பதிவு செய்த இவர் ஓலா பேட்டரி பேக் விபரம் என எஸ்1 ஸ்கூட்டருக்கு 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி ரூ.66,549 எனவும், எஸ்1 ப்ரோ ஸ்கூட்டருக்கு 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி ரூ.87,298 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓலா ஸ்கூட்டர் பேட்டரி விலையைப் பார்த்தா தலையே சுத்திடும்! இதுக்கு புதுசா ஒரு ஸ்கூட்டரை வாங்கிடலாம் போல!

ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரின் விலையே ரூ12 ஆயிரம் தள்ளுபடி போக ரூ1.28 லட்சம் தான். ஆனால் அதன் பேட்டரி விலை மட்டும் ரூ87,298 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது பலருக்கு ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. ஓலா பிராண்டிலேயே தற்போது குறைவான விலையில் எஸ்1 ஸ்கூட்டர் ரூ99,999 என்ற விலையில் விற்பனையாகிறது. இதற்கான பேட்டரியின் விலை ரூ.66,549 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓலா பேட்டரியின் இந்த பேக் எப்படி வந்தது. இப்பொழுது புதிய ஸ்கூட்டர்கள் தானே விற்பனையாகிறது என விசாரித்த போது ஓலா நிறுவனம் தனது வாகனங்களில் உள்ள பேட்டரிகளுக்கு 3 ஆண்டுகள் வரையறையற்ற கி.மீ வாரண்டியை வழங்குகிறது. அப்படியென்றால் ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி 3 ஆண்டிற்குள் எப்பொழுது பழுதானாலும் இலவசமாக புதிய பேட்டரி பொருத்தித் தரப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஓலா ஸ்கூட்டர் பேட்டரி விலையைப் பார்த்தா தலையே சுத்திடும்! இதுக்கு புதுசா ஒரு ஸ்கூட்டரை வாங்கிடலாம் போல!

இதன்படி ஓலா வாடிக்கையாளர் யாருக்காவது பேட்டரியில் பிரச்சனை இருந்திருக்கும் அதை அவர் மாற்றும் போது அவருக்காக வழங்கப்பட்ட புதிய பேட்டரியின் புகைப்படமாக இது இருக்கலாம் எனத் தெரியவந்தது. ஆனால் இந்த புகைப்படத்தில் பேட்டரிக்கு உள்ள விலையைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஒரு வேலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிய சில ஆண்டுகளில் பேட்டரியில் பிரச்சனை ஏற்பட்டு பேட்டரியை வாங்க வேண்டும் என்றால் ஸ்கூட்டர் விலையில் பெரும்பாலான பணத்தை மீண்டும் செலவு செய்ய வேண்டுமா என யோசிக்கின்றனர்.

இதனால் பலர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மறு பரிசீலனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கு முன்பு டாடா நிறுவனத்தின் நெக்ஸான் இவி விவகாரத்திலும் இப்படியாக ஒரு செய்தி வெளியானது. ஒரு வாடிக்கையாளர் தனது வாகனத்தின் பேட்டரியை மாற்ற முயன்ற போது, அந்த காருக்கான பேட்டரி விலை ரூ7 லட்சம் என டீலர்கள் கூறியதாகச் செய்திகள் வெளியானது. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு இது பெரிய தலைவலியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்து என்ன?

More from DriveSpark

Article Published On: Monday, February 20, 2023, 9:23 [IST]
English summary
Ola scooter battery pack costs 87k people got shocked
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X