இந்த ஓலா இ-ஸ்கூட்டரை வாங்க கூட்டம் எங்க இருந்துதான் குவியுதோ..வெளிநாட்டுல இருந்தும் ஆட்கள் வராங்களா என்ன?..
"ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களை வாங்க எங்க இருந்துதான் கூட்டம் இந்த அளவு குவியுதோ" என பொறாமைப்படும் அளவிற்கு மக்கள் அதிகளவில் நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் அமைந்திருக்கின்றது.
இந்த மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 30 ஆயிரம் யூனிட் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதனால் இந்தியாவின் மாபெரும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் உருவெடுத்திருக்கின்றது. இந்த இடத்தை ஓலா எலெக்ட்ரிக் நீண்ட காலமாகவே ஆளுகை செய்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுபோன்று அதிக விற்பனை எண்ணிக்கையை அது பெறுவது எட்டாவது முறையாகும். ஆகையால், பல மாதங்களாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய மின்சார வாகன சந்தையில் விற்பனையில் கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகின்றது. இந்த நிலையிலேயே 2023 ஏப்ரலிலும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையைப் பெற்று தன்னுடைய ராஜ்யத்தை ஓலா நிலை நாட்டி இருக்கின்றது.
இது ஒட்டுமொத்த இந்திய மின் வாகன விற்பனையில் 40 சதவீதம் பங்களிப்பு ஆகும். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போதைய நிலவரப்படி மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் எஸ்1 ப்ரோ, எஸ் 1 மற்றும் எஸ்1 ஏர் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதில் மிக மிக விலை குறைவான மாடலாக எஸ்1 ஏர் இருக்கின்றது. இதன் விலை ரூ. 84,999 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதற்பு புக்கிங்குகள் மட்டுமே ஏற்கப்பட்டு வருகின்றது. இன்னும் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரவில்லை. இன்னும் சில வாரங்கள் அல்லது தினங்கள் இதன் அதிகாரப்பூர்வ வருகை அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஓலா எஸ்1 ஏர் இ-ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக எஸ்1 இருக்கின்றது. இதற்கு ரூ. 99,999 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இவை இரண்டைக் காட்டிலும் மிக அதிக விலைக் கொண்ட மாடலாக எஸ்1 ப்ரோ இருக்கின்றது. ரூ. 1.24 லட்சம் என்கிற உச்சபட்ச விலையில் அது விற்கப்படுகின்றது.

இதுபோன்று அனைத்தின் விலைகளும் சற்று மலிவானதாக இருக்கின்ற காரணத்தினாலும், அதிக சிறப்பு வசதிகளை தாங்கி இருக்கின்ற காரணத்தினாலும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அமோக வரவேற்பு நாட்டில் நிலவிக் கொண்டிருக்கின்றது. கடந்த மார்ச் மாதத்தில்கூட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 27 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைச் சுற்றிலும் முரண்பாடான கருத்துக்கள் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. சாஃப்ட்வேர் பிரச்னை, எந்திர கோளாறு என பல்வேறு பிரச்னைகளை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்கள் சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், இந்தியர்கள் ஓலா இ-ஸ்கூட்டரை வாங்கிக் கொண்டிருப்பது ஒட்டுமொத்த வாகன உலகிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications









