ஓலாவை இதனாலதான் இந்திய மின்சார இருசக்கர வாகன உலகின் தலைவனு சொல்லுறாங்க.. எல்லாத்துக்கும் தண்ணி காட்டிருச்சு!
விற்பனையில் இதுவரை எந்தவொரு மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளரும் செய்திராத சாதனையை ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) இந்தியாவில் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி என்ன சாதனையை அது செய்திருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) இருக்கின்றது. இரண்டு சக்கர வாகன பிரிவிலும் இதுவே பெஸ்ட் செல்லிங் மாடலுமாகும். இத்தகைய ஓர் ஸ்கூட்டருக்கே டஃப் கொடுக்கின்ற அளவிற்கு நடப்பாண்டில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் அதிக அளவில் விற்பனையாகி இருக்கின்றன.

இந்த 2023ஆம் ஆண்டில் நம்ப முடியாத எண்ணிக்கையில் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்த ஒரே ஆண்டில் 2.5 லட்சம் யூனிட்டுகள் வரை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்தியாவில் ஏத்தர் எனெர்ஜி, பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் என முன்னணி நிறுவனங்கள் மின்சார இருசக்கர வாகன பிரிவில் தங்களின் பங்களிப்பை வழங்கி ஓர் மிகப் பெரிய போட்டியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய போட்டி மிகுந்த பிரிவிலேயே தனி ஆளாக கெத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது ஓலா எலெக்ட்ரிக். இதற்கு சான்றாகவே அதன் விற்பனை புள்ளி விபரம் அமைந்திருக்கின்றது. மிக முக்கியமாக கடந்த பண்டிகைக் காலத்தில், அதாவது, நவம்பர் மாத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் மட்டும் 29,898 யூனிட்டுகள் விற்பனையாகின.

இந்த அளவு மாபெரும் விற்பனை எண்ணிக்கையே ஓலாவை இந்த இமாலய சாதனையை படைக்க உதவியாக அமைந்திருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2023 ஜனவரி 1 தொடங்கி 2023 ஜனவரி 21 வரையில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 647 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன.
இது ஒட்டுமொத்தமாக இந்தியாவில் விற்பனையாகி மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையில் 31 சதவீதம் ஆகும். ஜனவரி 1 தொடங்கி டிசம்பர் 21 வரையில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 8 ல்ட்ச்தது 28 ஆயிரத்து 537 யூனிட்டுகள் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனையாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இப்போதைய விற்பனை புள்ளி விபரத்தை வைத்து பார்க்கையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த 2023 ஆண்டில் 131 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. அதேவேளையில், இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 9 நாட்கள் வரை இருக்கின்றன.
இந்த நாட்களில் மேலும் விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில் வருகின்ற 2024 ஆம் ஆண்டில் முன்னணி நிறுவனங்கள் பல விலை உயர்வைச் செய்ய இருக்கின்றன. இதேபோல், ஆண்டு இறுதியை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு சலுகைகளை அறிவித்துக் கொண்டு இருக்கின்றன.
ஓலா எலெக்ட்ரிக்கும் விலை தள்ளுபடி மற்றும் சுலப மாத தவணை ஆகிய திட்டங்களை அறிவித்து இருக்கின்றது. இதுதவிர, கேஷ் பேக் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட சலுகைகள் சிலவற்றையும் அது அறிவித்து இருக்கின்றது. இதன் விளைவாக விற்பனை இன்னும் அதிகரிப்பதற்கான சூழலே தற்போது ஓலாவிற்கு நாட்டில் உருவாகி இருக்கின்றது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக டிவிஎஸ் மோட்டார் அதிக எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைச் செய்த நிறுவனமாக இருக்கின்றது. இதன் தயாரிப்புகள் 1,62,399 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. டிவிஎஸ்-க்கு அடுத்தபடியாக ஏத்தர் எனெர்ஜி இருக்கின்றது. இதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 1.01 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன.
டிவிஎஸ் பெற்றிருப்பது 19.60 சதவீதம் விற்பனை வளர்ச்சியாகும். இதேபோல், ஏத்தர் பெற்றிருப்பது 12.30 சதவீதம் விற்பனை வளர்ச்சியாகும். இதை வைத்து பார்க்கையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் ஆண்டின் இறுதியை சிறப்பிக்கும் விதமாக 'டிசம்பர் டூ ரிமெம்பர்' (December to Remember) எனும் திட்டத்தை அறிவித்து இருக்கின்றது.
இதன்கீழே விலை குறைப்பு நடவடிக்கையை அது எடுத்திருக்கின்றது. எஸ்1 எக்ஸ்-பிளஸ் (S1 X+) தேர்வின் விலையையே அது நம்ப முடியாத அளவிற்குக் குறைத்திருக்கின்றது. ரூ. 20 ஆயிரம் வரை அதன் விலையில் குறைப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 89,999 ஆக மாறி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் அசைக்க முடியாத மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்து இருக்கின்றது. இதற்கு சான்றாகவே அதன் இந்த ஆண்டு முழுவதுமான விற்பனை எண்ணிக்கை அமைந்திருக்கின்றது. அடுத்து வரும் மாதங்களிலும் இதுமாதிரியான விற்பனை வளர்ச்சியையே அது பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








