இது மட்டும் வந்தாச்சுன்னா ஹெல்மெட்க்கு இனி போலீஸ் ஃபைன் போட முடியாது! ஏன் தெரியுமா?

எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் பெரும் புரட்சியைச் செய்த ஓலா நிறுவனம் தற்போது டூவீலர் மார்க்கெட்டிலேயே அடுத்த புரட்சியை செய்யத் தயாராகி வருகிறது. டூவீலரில் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணிந்து உள்ளாரா இல்லையா என்பதைக் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது இந்திய மக்களுக்கு மோகம் அதிகரிப்பதை முன்னரே உணர்ந்த ஓலா நிறுவனம், மக்களுக்கு பிடித்தமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கக் களத்தில் இறங்கியது. இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த புகைப்படம் வெளியான போதே மக்கள் பல இந்த ஸ்கூட்டரை வாங்கத் தயாராகி விட்டனர்.

Ola helmet detection system

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்கெட்டிற்கு வந்த பிறகு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம். தற்போது பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் விற்பனையாகும் என்பதை ஓலா நிறுவனம் நிரூபித்துள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் தற்போது ஓலா நிறுவனம் தான் இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க இந்தியாவில் டூவீலரில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருப்பதாக மற்றொரு புறம் விமர்சனங்கள் எழுதுகிறது. கார்களில் சீட் பெல்ட், ஏர்பேக் உள்ளிட்ட ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் போது டூவீலரில் அப்படியான பாதுகாப்புகள் மிகக் குறைவாக இருக்கிறது.

Ola helmet detection system

முக்கியமாக இந்தியா முழுவதும் இருக்கும் பிரச்சினை ஹெல்மெட் தான். அரசாங்கம் என்ன தான் பல்வேறு விதமாக அறிவுறுத்தினாலும் ஹெல்மெட் அணிந்து செல்வதை முழு வீச்சில் செயல்படுத்த முடியவில்லை. பலர் இன்றும் சாலையில் டூவீலரில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் தான் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் ஓலா நிறுவனம் இந்த டூவீலர் பாதுகாப்பு அம்சத்தில் அடுத்த ஒரு முக்கியமான படியை எடுத்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதற்காகத் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணிவதைக் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தைப் புகுத்த முடிவு செய்துள்ளனர். இது அட்வான்ஸ்டு தொழிற்நுட்பமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Ola helmet detection system

அந்த தொழில்நுட்பம் ஸ்கூட்டரில் அமர்ந்திருக்கும் ரைடர் ஹெல்மெட் அணிந்துள்ளாரா இல்லையா என்பதைக் கண்காணிக்கும். அவர் ஹெல்மெட் அணிந்து உள்ளார் என்ற தகவல் ஸ்கூட்டருக்கு தெரிவிக்கப்பட்டால் மட்டுமே ஸ்கூட்டர் டிரைவ் மோடுக்கு செல்லும். இல்லை என்றால் பார்க்கிங் மோடிலேயே இருக்கும். ரைடிங் மோடிற்கு மாறாது.

இதற்காக ஓலா நிறுவனம் அட்வான்ஸ் கேமரா தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து வருகிறது. இந்த தொழில்நுட்பம் வாகனத்தின் கண்ட்ரோல் யூனிட்டுக்கு ரைடரின் ஹெல்மெட் குறித்த தகவலைத் தெரிவிக்கும். இந்த தகவல் வந்தால் மட்டுமே ஓலா ஸ்கூட்டரில் உள்ள கண்ட்ரோல் யூனிட் வாகனத்தை டிரைவ் மோடுக்கு மாற்றும்.

வாகனம் டிரைவ் மோடில் இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும். பார்க் மோடில் இருந்தால் பயணிக்க முடியாது. அப்படி என்றால் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே இனி வாகனத்தை ஓட்ட முடியும் ஹெல்மெட் இல்லை என்றால் ஓட்ட முடியாது. இதை ரியல் டைமில் கண்காணிக்கவும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அதாவது ரைடர் ஹெல்மெட் அணிந்துவிட்டு ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த பின்பு ஹெல்மெட்டை அகற்றினாலும் உடனடியாக பார்க்கிங் மோடு மாற்றப்படும் வகையில் இந்த தொழிற்நுட்பத்தை வடிவமைக்க ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான பிராக்டிகல் ஆய்வுகளையும் செய்து வருகின்றனர். எந்தஅளவிற்கு இது நடைமுறையில் சிக்கல்களை ஏற்படுத்தாமல் இருக்கிறது என ஆய்வு நடக்கிறது.

இதுபோன்று கேமரா மூலம் ஹெல்மெட் அணிவதைக் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே தயாரித்திருந்தது. அந்த தொழில்நுட்பம் ரைடர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் அவருக்கு எச்சரிக்கையை மட்டும் விடுக்கும், டிரைவிங் சிஸ்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் ஓலா ஒரு படி முன்னே சென்று டிரைவிங் சிஸ்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி வாகனத்தை நகர விடாமல் தடுக்கும் விதமாக தொழிற்நுட்பத்தை வடிவமைக்க முடிவு செய்துள்ளது.

ஓலா நிறுவனம் இந்த தொழிற்நுட்பத்தை வெற்றிகரமாகத் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பொருத்திவிட்டால் இந்த தொழிற்நுட்பம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கலாம். இதைத் தொடர்ந்து போட்டி நிறுவனங்களும் இது போன்ற தொழிற்நுட்பத்தை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கும். வருங்காலத்தில் அனைத்து டூவீலர்களிலும் இது அறிமுகப்படுத்தப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொழில்நுட்பம் இருசக்கர வாகனங்களில் அனைத்திலும் கட்டாயமாக்கப்பட்டால் எதிர்காலத்தில் ஹெல்மெட் இல்லாமல் டூவீலர்களை ஓட்ட முடியாது என்ற நிலை ஏற்படும். இதனால் விபத்துக்கள் ஏற்படும் போது அதில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும். பாதுகாப்பான டூவீலர் பயணத்தையும் மக்களால் மேற்கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 19, 2023, 18:30 [IST]
English summary
Ola working on a helmet detection system to enhance safety
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X