காவலர்களை கிமீ கணக்கில் விரட்டி சென்ற இளைஞர்கள்.. சைரன் போட்டு தப்பிய போலீஸார்கள்.. அதிர வைக்கும் வீடியோ!

இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு காவலர்களை இளம்பெண்கள் இருவர் விரட்டிச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி, வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இதற்கான காரணம் என்ன மற்றும் எங்கு இந்த சம்பவம் அரங்கேறியது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

காவலர்களுக்காக வழங்கப்படும் ரோந்து இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த இரு காவலர்களை இளம் பெண்கள் இருவர் விரட்டிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி, வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. டூ-வீலரில் பயணித்துக் கொண்டிருந்த இரு காவலர்களும் தலைக்கவசம் அணியவில்லை.

Cops fined for riding bike without helmet

இதன் காரணத்தினாலேயே இரு இளம் பெண்கள் இருவரும், டூ-வீலரில் சென்றுக் கொண்டிருந்த போலீஸாரை விரட்டிச் சென்றிருக்கின்றனர். இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாகும். இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமின்றி, அதன் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இது பொதுமக்களுக்கு மட்டுமல்ல காவலர்களுக்கும் பொருந்தும். ஏன், இருசக்கர வாகனத்தை இயக்குபவர் மாநிலத்தின் முதல்வராகவோ அல்லது ஓர் நாட்டின் பிரதம மந்திரியாகவோ இருந்தாலும்கூட இந்த விதி பொருந்தும். இந்த விதியை மீறும்பட்சத்தில் எவராக இருந்தாலும் அவர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியும்.

Challan image

இத்தகைய நடவடிக்கைக்கு பயந்தே பலர் தற்போது தலைக்கவசத்தை அணியத் தொடங்கி இருக்கின்றனர். முன்பைக் காட்டிலும் இப்போது அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக தலைக் கவசம் அணியாமல் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படுகின்றது.

இத்தகைய அதிகபட்ச அபராதத் தொகை காரணத்தினால் இந்தியாவில் ஹெல்மெட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இருப்பினும், ஒரு சிலர் அதிகார மமதையில் எந்த விதியையும் முறையாக கடைபிடிப்பதில்லை. குறிப்பாக, அரசியல்வாதிகள் மற்றும் காவலர்களே இத்தகைய விதிமீறல்களில் அதிகளவில் ஈடுபடுவதை நம்மால் காண முடிகின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக இரு காவலர்கள் அலட்சியமாக எந்த பாதுகாப்பு கவசமும் அணியாமல் டூ-வீலரில் சென்றிருக்கின்றனர். இதனைக் கண்ட இளம்பெண்களே அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக ஹெல்மெட் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர். ஆனால், இதனை துளியும் காதில் வாங்கிக் கொள்ளாத காவலர்கள் அவர்களின் பேச்சை தவிர்த்துவிட்டு, முன்னேறி சென்ற வண்ணமே இருந்தனர்.

மேலும், சைரனை போட்டுக் கொண்டு அங்கிருந்த தப்பிச் செல்ல முயல்வதையும் நம்மால் காண முடிகின்றது. சைரனை போட்ட உடன் சக வாகன ஓட்டிகள் காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு செலவதாக நினைத்து அவசர அவசரமாக வழிவிடுவதையும் நம்மால் காண முடிகின்றது. இந்த சம்பவமே பார்ப்போரை அதிர்ச்சியில் உறைய செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

குறிப்பாக, இளம்பெண்கள் தலைக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியும், அதை துளியும் காதில் வாங்கிக் கொள்ளாமல், அவர்கள் சைரன் போட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது பொதுமக்களை அதிர்ச்சியின் உச்சத்தை எடுத்துச் சென்றிருக்கின்றது. பொதுமக்களை நல்வழிப்படுத்தி, சட்ட-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவலர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது பலருக்கு வேதனையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த சம்பவம் உபி மாநிலம் காசியாபாத்தில் அரங்கேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வீடியோ வைரலானதை அடுத்து அலட்சியமாக பயணித்த இரு காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருப்பதாக அம்மாநில காவல்துறை தகவல் வெளியிட்டிருக்கின்றது. ஆயிரம் ரூபாய்க்கு அபராத செல்லாணை காவலர்களுக்கு வழங்கியதற்கான ஆதாரத்தையும் காவல்துறையினர் வெளியிட்டு இருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உபி மாநில காவல்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் சரியானது என சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். இந்த நடவடிக்கை நிச்சயம் பிற போக்குவரத்து விதிமீறல் வாதிகளைக் கட்டாயம் நடுங்க செய்யும். குறிப்பாக, போக்குவரத்து வீதிமீறலில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற எண்ணத்தை புகுத்தி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 25, 2023, 11:49 [IST]
English summary
On duty up cops fined for not wearing helmets
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+