ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை வாங்கிய நடிகை.. அந்த நடிகையா இவங்க! கொஞ்சம் லேசா ஆள் மாறிட்டு இருக்காங்க!
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாகக் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் இருக்கின்றது. இந்தப் பைக்கை விரும்பாதவர்களே யாரும் இருக்க முடியாது எனக் கூறிவிடலாம். அந்த அளவிற்கு தனக்கெனத் தனி ரசிகப் பட்டாளத்தை இந்தப் பைக் இந்தியாவில் உருவாக்கி வைத்திருக்கின்றது.
இதில் சிறுவர்களும் அடங்குவர். அதேவேளையில் இந்தப் பைக்கை ஆண்கள் வாங்குவது அதிசயமில்லை. பெண்கள் பலரும் வாங்கிக் கொண்டிருப்பதுதான் ஆச்சரியத்தின் உச்சம். ஆமாங்க, இளம் பெண் ரசிகர்கள் இந்தப் பைக்கிற்கு மிக ஏராளம். இதை உறுதிப்படுத்தும் விதமான ஓர் சம்பவமே தற்போது அரங்கேறி இருக்கின்றது.

நம்மில் பலர் 'ஒரு அடார் லவ்' திரைப்படத்தைப் பார்த்திருப்போம். மலையாளத்தில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டு தமிழகத்தில் வெளியிடப்பட்ட படமே இதுவாகும். இந்தப் படத்தில் ஹீரோவுக்குத் தோழியாக வந்து கடைசியில் ஹீரோயினாக மாறும் நபரே, நூரின் ஷெரீஃப். இந்த நடிகையே தற்போது கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை வாங்கி இருக்கின்றார்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக நூரின் ஷெரீஃப் புத்தம் புதிய சாம்பல் நிற கிளாசிக் 350 பைக்கில் வலம் வரும் வீடியோக் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அந்த வாகனம் இன்னும் பதிவுகூட செய்யப்படாத நிலையிலேயே காட்சியளிக்கின்றது. இதிலேயே அவர் ஓர் சிறிய ஜாலி ரைடை செய்திருக்கின்றார்.

நூரின் ஷெரீஃப் ஓர் மிகப் பெரிய வாகன ஆர்வலர் என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் அதிகம் ஆர்வம் கொண்டவராக அவர் இருக்கின்றார். இதற்குச் சான்றாகவே கிளாசிக் 350 கொள்முதல் அமைந்திருக்கின்றது. இதுதவிர அவரிடத்தில் இன்னும் சில டூ-வீலர்களும் பயன்பாட்டில் இருக்கின்றன.
யமஹாவின் எம்டி-15 மற்றும் கேடிஎம் ட்யூக் உள்ளிட்ட பைக்குகளே அவரிடத்தில் உள்ளன. இதுதவிர, ஒரு சில கார்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் உள்ளிட்ட கார் மாடல்களே நூரின் ஷெரீஃப் இடத்தில் உள்ளன.
இந்த நிலையிலேயே புதிதாக அவர் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை அவர் வாங்கி இருக்கின்றார். இப்போதைய நிலவரப்படி இந்தப் பைக்கின் ஆரம்ப விலை ரூ. 1.93 லட்சம் ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 2.24 லட்சமாக இருக்கின்றது. இவை வெறும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.
இந்த மோட்டார்சைக்கிள் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றில் விற்பனைச் செய்யப்படுகின்றது. இந்தியாவைப் போலவே இந்த உலக நாடுகளிலும் இப்பைக்கிற்க நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய ஜே-பிளாட்பாரத்தை பயன்படுத்தியே கிளாசிக் 350 பைக்கை உற்பத்தி செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தின் வாயிலாகவே நடுத்தர டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ட்ரிப்பர் நேவிகேஷன் உள்ளிட்ட பல நவீன கால அம்சங்களை இந்தப் பைக்கில் ராயல் என்பீல்டு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
மேலும் சிறந்த ரைடு அனுபவத்திற்காகப் பைக்கின் முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமின்றி டிஸ்க் மற்றும் இரட்டை ஏபிஎஸ் வசதியும் கிளாசிக் 350-இல் வழங்கப்படுகின்றது. இவை மிகச் சிறந்த பிரேக்கிங் வசதியை வழங்க உதவும்.
மேலும், 349 சிசி திறன் கொண்ட ஏர் மற்றும் ஆயில் கூல்டு எஞ்ஜினே ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 350இல் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவர் மற்றும் 27 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஐந்து ஸ்பீடு கியர்பாக்ஸில் இந்த திறனை கிளாசிக் 350 வெளியேற்றும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியாக முன்னணி நிறுவனங்கள் பல புதிய கிளாசிக் ரக மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், அவற்றில் பல இந்த பைக்குடன் போட்டியிட முடியாமல் சந்தையை விட்டு வெளியேறிய கதைகள் பல இருக்கின்றன. ஆகையால், கிளாசிக் ரகம் மற்றும் 350 சிசி இருசக்கர வாகன பிரிவில் அறிவிக்கப்படாத தலைவனாக கிளாசிக் 350 பைக் இருந்து வருகின்றது.


Click it and Unblock the Notifications








