5-8 வருடங்கள் லைஃப் தரும் பேட்டரி பேக்குடன் இ-பைக் அறிமுகம்.. ஃபுல் சார்ஜில் 221கிமீ அசால்டாக போகலாம்!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் ஆர்க்ஸா எனர்ஜீஸ் (Orxa Energies). இந்த நிறுவனமே அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மண்டிஸ் (Mantis) எனும் எலெக்ட்ரிக் பைக்கை வெளியீடு செய்திருக்கின்றது. பார்க்க மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த பைக், ரேஞ்ஜ் தருவதிலும் நம்மை விரட்டி விடும் வகையிலேயே இருக்கின்றது.
இது ஓர் முழு சார்ஜில் 221 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஸ்போர்ட்ஸ் பைக் போன்ற திறன் வெளிப்பாட்டை விரும்புவோர்க்கு ஏற்ற வாகனமாகவும் இதனை ஆர்க்ஸா எனெர்ஜீஸ் தயார் செய்திருக்கின்றது. அதேவேளையில், எடைக் குறைவான மின்சார பைக்காகவும் அதனை அவர்கள் தயார் செய்திருக்கின்றனர்.

இதன் ஒட்டுமொத்த எடையே 182 கிலோ மட்டும்தான். இதில் பொருத்தப்பட்டு இருக்கும் மின்சார மோட்டாரானது வெறும் 8.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். மேலும், இதனால் மணிக்கு உச்சபட்சமாக 135 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். மண்டிஸ்-இன் டார்க் திறன் 93 என்எம் ஆகும்.
இவற்றுடனேயே சூப்பரான பேட்டரி பேக்கை இந்த பைக்கில் ஆர்க்ஸா எனெர்ஜீஸ் வழங்கி இருக்கின்றது. 8.9 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கே 5 முதல் 8 ஆண்டு காலம் நீடித்து உழைக்கும் என ஆர்க்ஸா தெரிவித்து இருக்கின்றது.

இது நீண்ட ஆயுட்காலம் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த தகவல் மின்சார ஆர்வலர்களைப் பெரிதும் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க இந்த எலெக்ட்ரிக் பைக்கை அதிக வேகத்தில் நம்மால் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இதுதவிர, 1.3 kW ஸ்டாண்டர்டு சார்ஜிங் பாயிண்டில் வைத்துச் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.
இதை பயன்படுத்தும்போது பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 5 மணி நேரத்தில் ஏற்றிக் கொள்ள முடியும். அதேவேளையில், 3.3 kW சார்ஜிங் பாயிண்டை பயன்படுத்தும்பட்சத்தில் வெறும் 2.5 மணி நேரங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும்.
இவ்வாறு சார்ஜ் செய்யும்போது விரைவில் இ-பைக்கை சார்ஜ் செய்து நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். 8 ஆண்டு கால கடும் உழைப்பின் ரிசல்டாகவே இந்த பைக்கை ஆர்க்ஸா நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இந்த எட்டு ஆண்டு கால கடும் உழைப்பின் காரணத்தினாலேயே இந்த பைக்கை மிக சிறந்ததாக தயாரிக்க முடிந்திருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
விமானங்களின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் அலுமினியத்தைக் கொண்டே இந்த எலெக்ட்ரிக் பைக் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே எடைக் குறைந்ததாகவும், அதேவேளையில், அதிகம் தரம் மிக்கதாகவும் இந்த மின்சார பைக்காவும் மாறி இருக்கின்றது. இந்த பைக்கிற்கான புக்கிங்குகள் ரூ 10 ஆயிரம் முன் தொகையில் ஏற்கப்பட்டு வருகின்றன.
இப்போது டெலிவரி செய்யப்படுபவர்களுக்கு இந்த எலெக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டில் டெலிவரி கொடுக்கப்பட இருக்கின்றது. ஏப்ரல் மாதத்தில் இருந்தே டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. முதல்கட்டமாக பெங்களூருவிலும், அதற்கு இந்தியாவின் பிற பகுதிகளிலும் டெலிவரி தொடங்கப்பட இருப்பதாக நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மின்சார பைக் பிரிவை அலங்கரிக்கும் விதமாக மண்டிஸ் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. அதில், பிரீமியம் அம்சங்கள் அதிகம் என்பதால் இதன் விலையும் சற்று அதிகமாக உள்ளது. அதேவேளையில், விலைக்கு ஏற்ப அதன் பயன்பாடும் மிக சிறந்ததாக இருக்கும் என கூறப்படுகின்றது. இதன் வருகை எத்தகைய தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








