இவரா பப்ளிக் ரோடுல மத்தவங்க முகம் சுழிக்கிற மாதிரி நடந்துக்கிட்டாரு!.. மனுசன ஃபுல் டேமேஜ் பண்ணீட்டாங்க!

சாலையில் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளும், அந்த விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இவற்றைக் குறைக்கும் விதமாக பல கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் விபத்தின் எண்ணிக்கையையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையையும் குறைந்தபாடில்லை.

இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் இதே நிலையே தென்படுகின்றது. எனவே அனைத்து உலக நாடுகளும் விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு அதிகம் விபத்துகள் அரங்கேறும் பகுதிகளைக் கண்டறிந்து, அந்த பகுதியில் வேகமாக பயணிக்கக் கூடாது என்கிற அறிவிப்பையும் மற்றும் வேகத்தைக் குறைப்பதற்கான பிற நடவடிக்கைகளும் எடுத்துக் கொண்டிருக்கின்றன.

Pak Cricketer babar azam rides bike high speed

இருப்பினும், வாகன ஓட்டிகள் த்ரில் ரைடு அனுபவத்திற்காக வாகனங்களை அதீத வேகத்தில் இயக்கி வருகின்றனர். இவ்வாறு சமீபத்தில் 1000 சிசி கவாஸாகி பைக்கில் சென்ற இந்தியாவைச் சேர்ந்த பிரபல யுட்யூபர் அகஸ்தயா சவுஹான், நிலை தடுமாறி விபத்தில் சிக்கி உயரிழந்தார். இவரின் உயிரிழப்பிற்கு அதிக வேகமே காரணம் என கூறப்படுகின்றது.

அவர் தலைக் கவசம் அணிந்திருந்தும் தலை சிதறி உயிரிழந்தார். அவர் பயன்படுத்திய உயரிய ஹெல்மெட்கூட அந்த நேரத்தில் பலனளிக்கவில்லை. ஆகையால், இந்த விபத்து பலரின் மனதை பாதிக்கச் செய்துவிட்டே என்று கூறலாம். குறிப்பாக ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த விபத்து சம்பவம் உலுக்கும் வகையில் அமைந்தது.

Babar azam rides bike high speed

அதிக வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டுவதில் நன்கு தேர்ச்சி பெற்றவரே யுட்யூபர் அகஸ்தயா சவுஹான். இருப்பினும் நொடிப்பொழுதில் கட்டுப்பாட்டை இழந்து அவர் உயிரிழக்க நேரிட்டது. இந்த துயர சம்பவத்திற்கு பிறகு அதிக வேகமாக பயணிப்பதைத் தவிர்க்குமாறு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வாகன ஓட்டிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் மித மிஞ்சிய வேகத்தில் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. கிரிக்கெட் வீரரின் இந்த செயல் பார்ப்போரை அதிர்ச்சியில் உறைய வைக்கும் வகையில் அமைந்திருக்கின்றது என்றே கூறலாம். அந்த அளவிற்கு அதிக வேகத்தில் அவர் வாகனத்தை இயக்கி இருக்கின்றார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பாபர் அசாமே அதிக வேகத்தில் பைக்கை ஓட்டிச் சென்றவர் ஆவார். தன்னுடைய இந்த அதிக வேக ரைடை அவரது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக அவர் பதிவிட்டிருக்கின்றார். இந்த செயல் பிறரையும் செய்யத் தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

ஆகையால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு தற்போது கண்டனங்கள் வலுக்கத் தொடங்கி இருக்கின்றன. பாகிஸ்தான் நாட்டின் குறிப்பிட்ட அந்த சாலையை அதிர வைக்கும் வகையில் பாபர் அசாமின் அதி வேக ரைடு அமைந்திருந்தது. அவர் பயன்படுத்தியது பிஎம்டபிள்யூ எஸ்1000 ஆர்ஆர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும்.

அதிக வேகத்தில் செல்வதற்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 1000 சிசி மோட்டார்சைக்கிள்களில் இதுவும் ஒன்றாகும். அடுத்த சில தினங்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எந்த போட்டிகளும் இல்லை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே இந்த ஜாய் ரைடை பாபர் அசாம் செய்திருக்கின்றார்.

அவர் சந்தோஷத்திற்காக செய்திருந்தாலும் அவரை பின் தொடரும் பலருக்கு பாபரின் செயல் வருந்த செய்யும் வகையில் அமைந்து இருக்கின்றது. ஆகையால், பலர் இவரை திட்டி தீர்த்த வண்ணம் இருக்கின்றனர். பாபர் அதிக பாதுகாப்பு வழிக்காட்டுதல்களைப் பின்பற்றி இந்த ரைடை செய்ததாகக் கூறப்படுகின்றது.

இருப்பினும், ஓர் பொது சாலையில் இத்தனை வேகம் கூடாது என்பதே பலரின் கருத்தாக இருக்கின்றது. அவர் துள்ளியமாக எந்த வேகத்தில் சென்றார் என்கிற விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அவர் மணிக்கு 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணித்திருப்பார் என தெரிகின்றது.

அவர் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ எஸ் 1000ஆர்ஆர் சூப்பர் பைக் அதிகபட்சமாக மணிக்கு 299 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இதுதவிர, அதனால் வெறும் 2.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இத்தகைய சூப்பரான திறனை வெளியேற்றக் கூடிய ஓர் பைக்கிலேயே பாபர் அசாம் அதீத வேகத்தில் பயணித்திருக்கின்றார்.

இந்த பைக்கில் அதிகபட்ச வேகத்திற்காக 999சிசி திறன் கொண்ட வாட்டர்/ ஆயில் கூல்டு, 4 சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் இன்லைன் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அதிகபட்சமாக 13,500ஆர்பிஎம்மில் 207 பிஎச்பி பவரையும், 11,000ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இது ஓர் பிரீமியம் வசதிகள் நிறைந்த சூப்பர் பைக்காகும். இதன் இந்திய மதிப்பு ரூ.20.25 லட்சம் ஆகும். இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக வேகத்தில் செல்வது நமக்கு மட்டுமல்ல சக வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவேதான் மிதமிஞ்சிய வேகத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. அதீத வேகத்தின்போது வாகனங்களைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத ஒன்று. இதனாலேயே உயிரிழப்புகள் அதிகளவில் அரங்கேறுகின்றன. ஆகையால், வேகத்தை தவிர்ப்போம், உயிர் காப்போம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 26, 2023, 12:18 [IST]
English summary
Pakistan cricket team captain babar azam shares his high speed bike ride video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+