அவரே தயாரிப்பாராம், அவரே வாங்கிப்பாராம்... அப்போ நாம எல்லாம் என்ன பண்ணுறது... விடா வி1-ஐ டெலிவரி பெற்ற பவன்!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சேர்மேன் மற்றும் சிஇஓ-ஆன பவன் முஞ்ஜல் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவரி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் களமிறங்கிய பின்னர் விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலே விடா வி1. இந்த இ-ஸ்கூட்டரையே அந்நிறுவனத்தின் சேர்மேன் மற்றும் சிஇஓ -ஆன பவன் முஞ்ஜல் டெலிவரி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தக் கூடிய புகைப்படங்களும் தற்போது வெளியாகி இருக்கின்றன. விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்தியர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும் இ-ஸ்கூட்டர்
வி1 பிளஸ் மற்றும் வி1 ப்ரோ ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் களமிறங்கி இருக்கின்றது. இதில், எந்த தேர்வை பவன் முஞ்ஜல் வாங்கி இருக்கின்றார் என்பது தெரியவில்லை. விடா வி1 ப்ரோவையே அவர் வாங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், சிறப்பம்சங்கள் நிரப்பப்பட்ட தேர்வாகக் காட்சியளிக்கின்றது. ஆமாங்க, விடா வி1 பிளஸ்ஸைக் காட்டிலும் அதிக சிறப்புகளைத் தாங்கியதாக விடா வி1 ப்ரோ இருக்கின்றது. எனவேதான் இந்தியர்களிடத்திலும் இந்த தேர்விற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளைக் கடந்த சில தினங்களுக்கு முன்பே தொடங்கியது. டிசம்பர் 30 ஆம் தேதி அன்றே நாட்டில் அதிகாரப்பூர்வமாக இந்த வாகனத்தின் டெலிவரி பணிகள் தொடங்கின. இந்த நிலையிலேயே பவன் முஞ்ஜலுக்கு மேட் அப்ராக்ஸ் ஆரஞ்சு நிறத்திலான விடா வி1 இ-ஸ்கூட்டர் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களில் ஒருவராக காத்திருந்து அவர் டெலிவரி பெற்றிருப்பதை இது உறுதிப்படுத்துகின்றது.

விடா வி1 ப்ளஸ்:
இதுவே விலை குறைவான தேர்வாகும். இதற்கு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 143 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். வெறும் 3.4 செகண்டுகளிலேயே விடா வி1 பிளஸ் பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது.
இதன் அதிக ரேஞ்ஜிற்கு 3.44 kWh பேட்டரி பேக்கே காரணமாக இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 143 கிமீ ரேஞ்ஜை வழங்கும். மேலும், இதன் டாப் ஸ்பீடுக்கு 6 கிலோவாட் திறன் கொண்ட மோட்டாரே காரணமாக இருக்கின்றது. இது, 3.9 கிலோவாட் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 25 என்எம் டார்க் வரை இது வெளியேற்றும். பிஎம்எஸ்எம் மோட்டாரே இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் 15 நிமிடங்கள் தேவைப்படும். ஒரு நிமிடம் சார்ஜ் செய்தாலே 1.2 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் எனப்து குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், ஈகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான ரைடிங் மோட்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
விடா வி1 ப்ரோ
இது சற்று காஸ்ட்லியான தேர்வாகும். இதற்கு 1 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரேஞ்ஜிலும், திறன் வெளியேற்றத்திலும் இந்த தேர்வு மிக சிறந்ததாக இருப்பதே இந்த அதிக விலைக்குக் காரணமாக இருக்கின்றது. 0-40 கிமீ வேகத்தை எட்ட வி1 பிளஸ் 3.4 செகண்டுகளை எடுத்துக் கொள்ளும் நிலையில், இதே திறனை வெளிப்படுத்த வி1 ப்ரோவிற்கு வெறும் 3.2 செகண்டுகளே போதுமானது. மேலும், இதில் அதிக ரேஞ்ஜை வழங்குவதற்காக சற்று பெரிய பேட்டரி பேக்கும் வழங்கப்பட்டுள்ளது.
3.94 kWh பேட்டரி பேக்கே வி1 ப்ரோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 165 கிமீ அதிகமான தூரம் பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். விடா வி1 பிளஸ் மற்றும் விடா வி1 ப்ரோ ஆகிய இரண்டிலும் ஒரே ரக மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால்தான் டாப் ஸ்பீடில் இரண்டும் ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றது. மேலும், இதிலும் ஈகோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் ஆகிய மோட்களே வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் கூடுதலாக கஸ்டம் மோட் ஒன்றும் வழங்கப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்கள்:
ரேஞ்ஜ் மற்றும் திறன் வெளிப்பாட்டில் வித்தியாசங்களைக் கொண்டிருக்கும் இந்த தேர்வுகள் சிறப்பம்சங்கள் விஷயத்தில் ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன. அந்தவகையில், 7 அங்குல ஓடிஏ எனேபில்ட் டிஎஃப்டி திரை, முன் பக்கத்தில் டிஸ்க்கும் - பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் சிபிஎஸ் வசதி உடன் வழங்கப்பட்டு உள்ளது. இது மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும். இதுதவிர, பிஎல்இ, 4ஜி மற்றும் ஒய்ஃபை இணைப்பு வசதியும் இந்த இ-ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் சிறப்பு வசதிகளாக திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி, திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம், டிராக் மை பைக், ஜியோ ஃபென்ஸ் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications








