பஜாஜ்-டிரையம்ப் தயாரித்த பைக்கிற்கு இந்தியாவில் புக்கிங் தொடக்கம்.. இப்பவே எல்லாருக்கும் அல்லு விட்டிருக்கும்!

பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் தயாரான இரு மோட்டார்சைக்கிள் மாடல்கள் நேற்று முன்தினம் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்குகளுக்கே இந்தியாவில் தற்போது ப்ரீ புக்கிங் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பஜாஜ் (Bajaj) - டிரையம்ப் (Triumph) கூட்டணியில் டிரையம்ப் நிறுவனத்திற்காக தயார் செய்யப்பட்ட இரண்டு சூப்பரான மோட்டார்சைக்கிள்கள் நேற்று முன் தினம் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாகவே இரு புதுமுக பைக் மாடல்களும் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டன.

Triumph bikes

ஸ்பீடு 400 (Speed 400) மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் (Scrambler 400X) இவையே பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் தயாரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் ஆகும். இவற்றிற்கான ப்ரீ-புக்கிங் பணிகளே இந்தியாவில் தற்போது தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் அதிகாரப்பூர்வ இந்திய வருகை வரும் ஜுலை 5 ஆம் தேதி அ்ன்று அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த பணிகள் இந்தியாவில் தொடங்கி இருப்பது போட்டி நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ரூ. 2 ஆயிரம் செலுத்தினாலே டிரையம்பின் புதிய பைக்குகளை புக் செய்து கொள்ள முடியும் என கூறப்படுகின்றது. ஆன்லைன் மற்றும் ஷோரூம்கள் வாயிலாக புக்கிங்கை செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Triumph speed 400 scrambler 400 x running shot

இதன் டெலிவரி பணிகள் வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கின்றன. ஆனால், துள்ளியமான நாள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், ஜுலையிலேயே அப்பணிகள் தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது. பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் தயார் செய்யப்பட்டிருக்கும் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் ஆகிய இரண்டிற்கும் இடையில் கணிசமான வித்தியாசங்களே தென்படுகின்றன.

ஸ்பீடு 400 மாடலில் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கான அம்சங்களும், ஸ்கிராம்ப்ளர் 400எ்க்ஸ்-ல் ஸ்கிராம்ப்ளர் பைக்குகளுக்கான அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவையே இந்த இரண்டு பைக்குகளுக்கும் இடையே இருக்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் ஆகும். ஆனால், உருவம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளில் ஒரே மாதிரியானதாக இவை இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Triumph scrambler 400 x

இந்த பைக்குகளை உற்பத்தி செய்யும் பணிகள் இந்தியாவிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. புனேவில் அமைந்துள்ள பஜாஜுக்கு சொந்தமான சக்கன் பிளானட்டிலேயே இரு பைக்குகளின் தயாரிப்பு பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இங்கிருந்தே உலக நாடுகள் பலவற்றிற்கும் இரு புதுமுக பைக்குகளும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன.

ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் ஆகிய இரு பைக்குகளிலும் ஒரே மாதிரியான மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. 398 சிசி, லிக்யூடு கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரால் 40 பிஎஸ் மற்றும் 37.5 என்எம் டார்க்கை வெளியேற்ற முடியும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இத்தகைய பவர்ஃபுல் மோட்டாருடனேயே பல்வேறு இருசக்கர வாகன மாடல்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் ஆகியவை விற்பனைக்கு வர இருக்கின்றன. குறிப்பாக, ஸ்பீடு 400 மாடலானது கேடிஎம் 390 ட்யூக், பிஎம்டபிள்யு ஜி 310 ஆர், ஹோண்டா சிபி300ஆர், ஜோன்டஸ் ஜிகே 350 மற்றும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் கேடிஎம் 390 ட்யூக் ஆகியவற்றிற்கு கடுமையான போட்டியாளனாக அமைய இருக்கின்றது.

இதேபோல், ஸ்கிராம்பளர் 400எக்ஸ் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் பைக்கானது யெஸ்டி ஸ்கிராம்ப்ளர், ராயல் என்பீல்டு ஸ்கிராம் 411 மற்றும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 401 மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது. என்ன விலையில் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் உருவாகி இருக்கும் பைக்குகள் விற்பனைக்கு வர இருக்கின்றன என்பது தெரியவில்லை.

இருப்பினும், ஸ்பீடு 400 ரூ. 2.90 லட்சத்திற்கும் குறைவான விலையிலும், ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் ரூ. 3.20 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது நிறுவனத்தினால் உறுதிச் செய்யப்படாத விலைகள் ஆகும். இதைவிட குறைவான விலையிலும் இந்த பைக்குகள் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணத்தினாலேயே இதன் வருகை போட்டி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் தயாராகி இருக்கும் இந்த பிரீமியம் பைக்குகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், எந்த அளவு வரவேற்புக் கிடைக்கும் என்பது இவற்றின் அறிமுகத்திற்கு பின்னரே தெரியும். மேலும், இதன் வருகையை எதிர்நோக்கி இருசக்கர வாகன காதலர்கள் பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 29, 2023, 9:32 [IST]
English summary
Pre booking begins for bajaj triumph alliance bikes in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X