இளைஞர்கள் எல்லாம் டிவிஎஸ் ஷோரூம்ல குவிய போறாங்க! செப் 6ம் தேதி வரப்போற பைக்குல இவ்வளவு விஷயம் இருக்குதா?
டிவிஎஸ் நிறுவனம் தற்போது அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கின் அதிகாரபூர்வ அறிமுகத்தை வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பைக்கிற்காக புக்கிங் தற்போது துவங்கியுள்ள நிலையில் ரூ 3,100 கொடுத்து இந்த பைக்கை முன் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக் குறித்து நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. பலர் இந்த பைக் ஆர்டிஎக்ஸ் 310 என்ற பெயரில் வெளியாகும் என்று எல்லாம் பேசி வந்தனர். இந்நிலையில் டிவிஎஸ் நிறுவனம் இந்த அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கின் டீசரை தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் இந்த பைக் குறித்த விரிவான பார்வை நமக்கு கிடைக்கிறது.

இதன்படி டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய அப்பாச்சி ஆர்டிஆர் பைக்கில் பழைய பைக்கில் உள்ள சேஸிஸ் மற்றும் மெக்கானிசத்தை தான் வைத்துள்ளது. ஆனால் இதன் டிசைன் மொழி முற்றிலும் புதுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஸ்பிலிட் எல்இடி ஹெட்லைட் செட்டப், தங்க நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட ஃபிளாட் ஹேண்டில் பார், ஷார்ப்பான மஸ்குலர் டிசைன் கொண்ட பியூயல் டேங்க், ஸ்பிலிட் சீட் மற்றும் பின்பக்க சப்-பிரேம், ஸ்பிலிட் எல்இடி டெய்ல் லைட் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் முன்பக்கம் யூஎஸ்டி ஃபோ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் அட்ஜெஸ்ட் செய்யும் ஆப்ஷனும் இருக்கிறது. பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்சர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் டூயட் சேனல் ஏபிஎஸ் சிஸ்டமும் இருக்கிறது. டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கில் ஏகப்பட்ட எலெக்ட்ரானிக் ஆப்ஷன்கள் வைத்துள்ளது. குறிப்பாக டிராக்ஷன் கண்ட்ரோல், குவிக் சிஃப்டர், அசிஸ்ட் மட்டும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகிய ஆப்ஷன்கள் இந்த பைக்கில் இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 புதிய பைக் இன்ஜினை பொருத்தவரை 312 சிசி ரிவர்ஸ் இன்கிளைன் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 33 பிஎச்பி பவரையும் 27.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த பைக்கில் ரிவர்ஸ் ஸ்பிராக்கெட் மற்றும் கியர் ரேஷியோஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பைக் முற்றிலுமாக தெருக்களில் பயன்படுத்தக்கூடிய அளவில் ஸ்டீரீட் ஃபிரென்ட்லி பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கை பொறுத்தவரை மொத்தம் 4 விதமான ரைடு மோடுகள் உள்ளன அர்பன், ரெயின், ஸ்போட் மற்றும் டிராக் ஆகிய ரைடு மோடுகள் உள்ளன. இந்த பைக் 0-60 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 2.93 நொடியில் பிக்கப் செய்து விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல இந்த பைக் அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த வேகத்தை இன்னும் சீக்கிரமாக எட்டிப் பிடிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் எடை குறைவாக இருப்பதால் இதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. இதனால் இளைஞர்கள் இந்த பைக்கை அதிகம் விரும்புவார்கள்.
இந்த பைக் வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல் விற்பனைக்கு வருவதாக டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பைக்கிற்கான புக்கிங்கை தற்போது டிவிஎஸ் நிறுவனம் துவக்கி உள்ளது. ரூபாய் 3100 முன்பணம் செலுத்தி இந்த பைக்கை தற்போது யார் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த பைக்கின் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கின் விலையை பொருத்தவரை ரூபாய் 2.65 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக் மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் பிஎம்டபிள்யூ ஜி310ஆர், கேடிஎம் 390 டியூக் மற்றும் டிரையம்ப் ஸ்பீடு 400 ஆகிய பைக் போட்டியாக களத்தில் இறங்குகிறது. இந்த பைக்கின் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக் நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்ற பைக்காக இருக்கிறது. இந்த பைக் அறிமுகமான காலத்திலிருந்து இப்பொழுது வரை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு மாற்றத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இளைஞர்கள் மத்தியில் இந்த பைக்கை வாங்க ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இந்த புதிய அப்டேட்டின் மூலம் இளைஞர்கள் உற்சாகமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அப்பாச்சி பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மக்கள் பலர் இந்த புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கை வாங்க ஆர்வமாக இருக்கின்றனர். தற்போது இந்த பைக்கிற்கான புக்கிங் துவங்கிய நிலையில் பலர் ஆர்வமுடன் வந்து இந்த பைக்கை புக் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









