ரூ.4 இலட்சம் பணத்தை ரெடி பண்ணி வெச்சிக்கோங்க!! இந்த பைக்குகள் எல்லாம் அடுத்ததா வருகின்றன...

ஸ்பிளெண்டர், ஸ்டார் சிட்டி போன்ற பட்ஜெட் விலை மோட்டார்சைக்கிள்களின் விற்பனை எப்போதும் போல் உச்சத்தில்தான் உள்ளது. அதேநேரம் சற்று கூடுதலாக ரூ.2 லட்சத்தில் பைக்கை வாங்க தயாராக இருப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டு வருகிறது. இளம் தலைமுறையினர் தான் இத்தகைய பைக்குகளை அதிகமாக வாங்குவதாக புள்ளி விபரங்கள் கூறும் நிலையில், ரூ.4 லட்சத்திற்குள் அடுத்ததாக விற்பனைக்குவர உள்ள பைக்குகளை இனி பார்க்கலாம்.

அடுத்த தலைமுறை கேடிஎம் 390 ட்யூக்: கேடிஎம் பிரியர்களை 200சிசி பைக்குகள் & 390சிசி பைக்குகள் என 2 வகையாக பிரிக்கலாம். இடையில் 250சிசி-இலும் கேடிஎம் பைக்குகள் விற்பனையாகுகின்றன, ஆனால் பெரிய அளவில் இல்லை. 390சிசி-இல் ட்யூக், ஆர்சி & அட்வென்ச்சர் என 3 விதமான மாடல்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் 390 ட்யூக் மாடல் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு மிக முக்கியமான அப்டேட்டை பெற உள்ளது.

premium bikes which set to arrive india

யமஹா ஆர்3 & எம்டி-03: வெளிநாடுகளில் பல விலையுயர்ந்த பைக்குகளை விற்பனை செய்தாலும் இந்தியாவில் யமஹா விற்கும் அதிக விலை பைக் ஆர்15 எம் ஆகும். வெளிநாடுகளில் பிரபலமான சில பிரிமீயம் தர பைக்குகளை விரைவில் இந்தியாவில் யமஹா அறிமுகப்படுத்த உள்ளதாக சமீக நாட்களாக அதிக பேச்சுகள் எழுந்து வருகின்றன. இதில் லிஸ்ட்டில் இருப்பது, பிரபலமான யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்3 மற்றும் அதன் நாக்டு வெர்சன் எம்டி-03 ஆகும்.

பஜாஜ்/ டிரையம்ப் பைக்குகள்: இந்தியாவில் பஜாஜ் ஆட்டோவின் கீழ் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் செயல்படுவது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இந்திய சந்தைக்காக புதியதொரு மோட்டார்சைக்கிளை தயாரித்து வருவதாக கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் உடன் உருவாக்கப்படும் இந்த விலை குறைவான பைக் இன்னும் ஒரு சில மாதங்களில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

premium bikes which set to arrive india

ஹீரோ/ ஹார்லி-டேவிட்சன் 400சிசி பைக்: பஜாஜ்-டிரையம்ப்பை போன்று ஹீரோ மோட்டோகார்ப்பும், ஹார்லி-டேவிட்சனும் கூட்டணியில் உள்ளன. இந்தியாவில் இருந்து நடையை கட்டிய ஹார்லி-டேவிட்சன் தற்சமயம் ஹீரோவின் உதவியுடன் தான் செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த கூட்டணியில் ஒரு மோட்டார்சைக்கிளும் தயாராகி வருகிறது. 400சிசி என்ஜின் உடன் ரோட்ஸ்டர் ரக பைக்காக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450, 450சிசி ரோட்ஸ்டர்: ராயல் என்பீல்டு நிறுவனம் தனது முதல் லிக்யுடு-கூல்டு என்ஜினை வடிவமைத்து வருகிறது. 450சிசி-இல் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த என்ஜின் முதலாவதாக ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட உள்ளதாம். அதன்பின்பு, புதிய ஒரு ரோட்ஸ்டர் ரக பைக் ஒன்றிலும் இந்த என்ஜின் பொருத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

premium bikes which set to arrive india

ராயல் என்பீல்டு ஷூட்கன் 650 & 650சிசி ஸ்க்ராம்ப்ளர்: ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் ஏற்கனவே 650சிசி பைக்குகள் 3 உள்ளன. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் முனைப்பில் உள்ள ராயல் என்பீல்டு நிறுவனம் ஷூட்கன் 650 பைக்கையும், 650சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக்கையும் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதில் சிலமுறை சோதனை ஓட்டங்களின் போது காட்சி தந்துள்ள ஷூட்கன் 650 பைக் சூப்பர் மீட்டியோர் 650-ஐ காட்டிலும் நிமிர்ந்த தோற்றத்தில் இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியா எந்த அளவிற்கு மாறிவருகிறது என்று பாருங்கள். 400சிசி-க்கு மேல் இத்தனை பைக்குகள் வருகின்றன என்றால், இத்தகைய பைக்குகள் வாங்குவதற்கும் நம் நாட்டில் ஆட்கள் உள்ளனர் என்பதுதானே அர்த்தம். இவை மட்டுமின்றி, அப்ரில்லா நிறுவனமும் ஆர்எஸ்440 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் எது வெற்றி பெறுகிறது என்பதை...

More from DriveSpark

Article Published On: Friday, May 26, 2023, 15:05 [IST]
English summary
Premium bikes which set to arrive india at under rs 4 lakhs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X