தமிழகத்தில் துவங்கிய பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு! கம்மி ரேட்ல விற்பனைக்கு வருமா?

டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களின் கூட்டு ஒப்பந்தம் ஏற்பட்டு 10 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் என்று பிஎம்டபிள்யூ சிஇ 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தயாரிப்பை ஓசூரில் உள்ள தனது ஆலையில் துவங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் வைத்து பிஎம்டபிள்யூ நிறுவனம் வடிவமைத்து தரும் வாகனங்களை எல்லாம் டிவிஎஸ் நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு கொண்டு போகிறது. அதே நேரம் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிவிஎஸ் நிறுவனமும் பைக்கை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

bmw ce 02

இந்த இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் தற்போது பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் ,பிஎம்டபிள்யூ 310 ஜி எஸ், பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்ஆர் ஆகிய பைக்களையும், டிவிஎஸ் பிராண்டில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 ஆகிய பைக்களையும் தயாரித்து அந்தந்த நிறுவனங்கள் விற்பனை செய்து வருகிறது.

டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தனது அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக் நல்ல வரவேற்பை பெற்றது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பைக்கின் தயாரிப்பு தற்போது டிவிஎஸ் நிறுவனத்தில் துவங்கி விட்டது. இதன் டெலிவரி மற்றும் டெஸ்ட் ரைடுகள் எல்லாம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் ரூபாய் 2.43 லட்சம் முதல் 2.64 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது.

bmw ce 02

இந்நிலையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக பிஎம்டபிள்யூ சிஇ02 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்பொழுது அறிமுகமாகும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெல்ட் டிரைவ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் நான் 54.91என்எம் திறனை 1000ஆர்பிஎம்மில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனம் 48வோல்ட் எலெக்ட்ரிக்கல் சிஸ்டத்தை இந்த பைக்கில் பயன்படுத்தி உள்ளது.

இந்த பைக்கில் சர்ஃப் மற்றும் ப்ளோ ஆகிய இரண்டு ரைட் மோடுகள் உள்ளன. மேலும் இதில் ரிவர்ஸ் கியறும் இருக்கிறது. இதுபோக இந்த பைக்கில் எல்இடி ஹெட் லைட் முன்பக்க வீலில் ஏபிஎஸ், யூஎஸ்பிசி டைப் சார்ஜிங் போர்ட், 3.5 இன்ச் கொண்ட டிஎஃப்டி டிஸ்ப்ளே ஆகிய உள்ளன. இந்த பைக்கின் உற்பத்தியை தற்போது டிவிஎஸ் நிறுவனம் துவங்கியுள்ளது. இது விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

bmw ce 02

இது குறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ ராதாகிருஷ்ணன் கூறும்போது :" எங்கள் இரு நிறுவனமும் சேர்ந்து அடுத்ததாக ஒன்றாக வாகனங்களை வடிவமைத்து தயாரிக்கலாம் என முடிவு செய்துள்ளோம் ஏற்கனவே 310 சிசி இன்ஜின் கொண்ட வாகனங்களை தயாரித்து வருகிறோம். சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

எங்கள் தயாரிப்புகள் சர்வதேச அளவில் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. எங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தற்போது ஈவியில் காலடி எடுத்து தடம் எடுத்து வைத்திருக்கிறோம். பிஎம்டபிள்யூ சிஇ 02 பைக் தயாரிப்பு இன்று துவங்கியுள்ளது" எனக் கூறினார்.

குறித்து பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மார்க்கஸ் கூறும் போது: "தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் 500 சிசிக்கு குறைவான செக்மெண்டில் பிஎம்டபிள்யூ பிராண்டில் மூன்று பைக்குகளை டிவிஎஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளோம். எங்கள் தொழற்நுட்பம் மூலம் டிவிஎஸ் பிராண்டிலும் இரண்டு பைக் வெளியாகியுள்ளது.

எங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எதிர்கால தொழில்நுட்பத்தையும் நீடித்த மொபிலிட்டி தீர்வுகளையும் எட்டுவதற்காக முழுமையான எலக்ட்ரிக் வாகனமாக பிஎம்டபிள்யூ சிஇ2 என்ற எலக்ட்ரிக் வாகனத்தை சேர்ந்து தயாரிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி டிவிஎஸ் நிறுவனம் இந்த வாகனத்தின் தயாரிப்பை இன்று துவங்குகிறது. எதிர்காலத்திலும் இதுபோன்ற பல தயாரிப்புகள் வெளியாகும்" என்று கூறினார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களின் இந்த ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கும் பலனளிக்கிறது. அதே நேரம் டிவிஎஸ் நிறுவனம் ஓசூரில் உள்ள தனது ஆலையில் வைத்து இதை நடத்தி வருவதால் இன் தமிழகத்திற்கும் இதனால் மிகப்பெரிய அளவில் பலன் ஏற்பட்டுள்ளது தமிழகத்தின் வளர்ச்சியும் இதனால் அதிகமாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 6, 2023, 20:40 [IST]
English summary
Production commences for bmw ce 02 at tvs hosur factory
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X