பப்ஜி பிளேயர்களுக்கு செம சான்ஸ், இனி இவங்க ஈஸியா டுகாட்டி பைக்கை வாங்கி ஓட்டிட்டு போகலாம்! செலவே கிடையாது!
பப்ஜி வீடியோ கேம் நிறுவனம் தற்போது டூகாட்டி நிறுவனத்துடன் இணைந்து தனது வீடியோ கேமில் டுகாட்டி பேனிகேல் வி4 எஸ் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பப்ஜி விளையாடுபவர்கள் அனைவரும் இந்த பைக்கை ஓட்டி செல்லும் வாய்ப்பை பெற முடியும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்திய இளைஞர்கள் மத்தியில் தற்போது பிரபலமாக உள்ள வீடியோ கேம் பப்ஜி, இதை ஏராளமான இளைஞர்கள் தினமும் விளையாடி வருகின்றனர். இந்த கேமில் ஒரே நேரத்தில் 100 பேர் சேர்ந்து களம் இறங்குவார்கள். அவர்கள் சேர்ந்து ஒருவரை ஒருவர் கேமில் தாக்கி இறுதியாக யார் தாக்குப் பிடிக்கிறாரோ அவரே கேமின் வெற்றியாளராகக் கருதப்படுவார்.

இந்த கேமில் தான் தற்போது டுகாட்டி பேனிகேல் வி4 எஸ் என்ற பைக் அறிமுகமாகியுள்ளது. இந்த கேமை விளையாடுபவர்கள் இந்த பைக்கை கேமிற்குள் ஓட்டி செல்லும் வாய்ப்பை பெற முடியும். கேமிலும் டிரெடிஷனல் ரெட், பிளாக் பாந்தோம், கிரிம்சன் ஸ்டிரோம் அல்லது ஸ்விஃப்ட் மிராஜ் கலர் ஆகிய நிறங்களில் இந்த பைக்கை பெற்றுக்கொள்ளலாம்.
இது குறித்து பப்ஜி நிறுவனத்தின் தலைவர் வின்சென்ட் வாங்க் கூறும்போது: "டுகாட்டசி பேனிகேல் வி4 எஸ் பைக்கை டுகாட்டி கியர்களுடன் பப்ஜியில் களம் இறக்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். அதன் இத்தாலிய டிசைன் மற்றும் சூப்பரான லுக் பார்க்கவே பரவசமூட்டும், இந்த பைக் உண்மையான பைக் போல வீடியோகேமிலும் பவர்ஃபுல்லாக இருக்கும். " எனக் கூறினார்.

இது குறித்து டுகாட்டி நிறுவனத்தின் தலைமை லைசென்ஸிங், மெர்சன்டைஷிங் மற்றும் கார்பரேட் பார்ட்னர்ஷிப் துறையின் தலைவர் கூறும்போது :"பப்ஜி மொபைல் பிளேயர்கள் டுகாட்டி பேனிகேல் வி4 எஸ் பைக்கை பயன்படுத்துவதை பார்க்க ஆவலாக இருக்கிறோம். பிளேயர்களுக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் அனுபவத்தைத் தர முடிவு செய்துள்ளோம்." எனக் கூறினார்.
பைக் போக பிளேயர்கள் டுகாட்டியின் விர்ச்சுவல் மெர்ச்சன்ட் பொருட்களையும் வாங்க முடியும். இதில் கிரிம்சன் ஸ்டிரோம் ஹெல்மெட், டுகாட்டி ஸ்போர்ட் சி2 டிரவுசர்ஸ், டுகாட்டி ஸ்பீடு இவோ சி2 ஜாக்கெட், டுகாட்டி கோர்ஸ் சிட்டி சி2, டுகாட்டி ஹூடட் ஸ்வெட் ஷர்ட் மற்றும் ஸ்விஃப்ட் மிராஜ் பேக்பேக் ஆகிய அம்சங்கள் எல்லாம் அறிமுகமாகவுள்ளது.
இதைப் பயன்படுத்த பப்ஜி பிளேடயர்கள் தங்கள் ஆப்பை வெர்ஷன் 2.6க்கு அப்டேட் செய்ய வேண்டும். பப்ஜி நிறுவனம் இப்படியாக ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் கை கோர்ப்பது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்னர் டாட்ஜ், டெஸ்லா, புகாட்டி, லம்போர்கினி, கோயினிக்ஸ்எக், ஆகிய நிறுவனங்களுடன் இதற்கு முன்னர் கைகோர்த்திருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பப்ஜி போன்ற இளைஞர்கள் மத்தியில் பிரபலமான ஒரு வீடியோ கேம் ஆப்பில் டுகாட்டி போன்ற நிறுவனங்கள் இப்படியாக கோலாபரேட் செய்வது இளைஞர்கள் மத்தியில் டுகாட்டி நிறுவனம் குறித்த கிரேஸை அதிகமாக்கும். இதனால் எதிர்காலத்தில் டுகாட்சிநிறுவன வாகனங்களுக்கு டிமாண்ட் அதிகமாகும்.


Click it and Unblock the Notifications








