சிங்கிள் சார்ஜில் 171 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் பைக்கின் விலை இவ்ளோதானா! ஸ்பிளெண்டர், ஷைன் சோலிய முடிக்க போகுது!

இந்தியாவை சேர்ந்த முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்று ப்யூர் இவி (Pure EV). எலெக்ட்ரிக் டூவீலர்களை (Electric Two Wheelers) விற்பனை செய்து வரும் ப்யூர் இவி நிறுவனம், புத்தம் புதிய தயாரிப்பு ஒன்றை இந்திய சந்தையில் தற்போது களத்தில் இறக்கியுள்ளது.

ப்யூர் இவி ஈக்கோடிரிஃப்ட் 350 (Pure EV ecoDryft 350) என்ற பெயரில் இந்த புதிய தயாரிப்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரிக் கம்யூட்டர் பைக் (Electric Commuter Bike) ஆகும். இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Pure EV ecoDryft 350

ப்யூர் இவி ஈக்கோடிரிஃப்ட் 350 எலெக்ட்ரிக் பைக்கில், 3.5 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 171 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரேஞ்ச் (Range) பற்றிய கவலை இல்லாமல், இந்த எலெக்ட்ரிக் பைக்கை வாங்கலாம்.

அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 75 கிலோ மீட்டர்களாக உள்ளது. 3 ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்படும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த ப்யூர் இவி ஈக்கோடிரிஃப்ட் 350 எலெக்ட்ரிக் பைக்கின் விலை (Price) 1.30 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pure EV ecoDryft 350 Side Design

இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு, ப்யூர் இவி ஈக்கோடிரிஃப்ட் 350 எலெக்ட்ரிக் பைக் மிகச்சிறந்த தயாரிப்பாகவே கருதப்படுகிறது. ஏனெனில் அதிக ரேஞ்ச் தரக்கூடிய எலெக்ட்ரிக் பைக் என்பதால், பெட்ரோலுக்காக (Petrol) நீங்கள் செலவு செய்யும் தொகையை பெரும் அளவில் சேமிக்க முடியும்.

ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), ஹோண்டா ஷைன் (Honda Shine) மற்றும் பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina) ஆகிய பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களை குறி வைத்து, ப்யூர் இவி ஈக்கோடிரிஃப்ட் 350 களத்தில் இறக்கப்பட்டுள்ளது. ப்யூர் இவி ஈக்கோடிரிஃப்ட் 350 பைக்கை நீங்கள் மாத தவணையிலும் வாங்க முடியும்.

4 ஆயிரம் ரூபாயில் இருந்து மாத தவணை தொடங்குகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக, ஐசிஐசிஐ (ICICI), ஹீரோ ஃபின்கார்ப் (Hero FinCorp) மற்றும் எல்&டி ஃபைனான்ஸ் (L&T Finance) உள்ளிட்ட நிறுவனங்களுடன், ப்யூர் இவி கூட்டணி அமைத்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்தியாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட ப்யூர் இவி நிறுவனத்தின் டீலர்ஷிப்களில், ஈக்கோடிரிஃப்ட் 350 எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு கிடைக்கும். சிறப்பான ரேஞ்ச், 3 ரைடிங் மோடுகள் மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகள் (Features) ஆகியவற்றுடன், கவர்ச்சிகரமாக டிசைனும் (Design) செய்யப்பட்டுள்ளதால், ப்யூர் இவி ஈக்கோடிரிஃப்ட் 350 எலெக்ட்ரிக் பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோலுக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டியிருப்பதால், அதிக ரேஞ்ச் வழங்கும் ஒரு கம்யூட்டர் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கலாம் என யோசித்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு ப்யூர் இவி ஈக்கோடிரிஃப்ட் 350 மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 21, 2023, 18:02 [IST]
English summary
Pure ev ecodryft 350 electric bike launched price range all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+