பிளாட்டினாபோல் டெய்லி யூசுக்கு ஏற்ற இ-பைக்கின் டெலிவரி தொடங்கியது.. ரோடு ஃபுல்லா இனி இந்த பைக்தான் மேய போகுது!
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ப்யூர் இவி (PURE EV)-யும் ஒன்று. இந்த நிறுவனம் அண்மையில் அதன் மலிவு விலை எலெக்ட்ரிக் பைக் மாடலான ஈகோ ட்ரிஃப்டை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதுவே நாட்டின் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் பைக்காகும்.
ரூ. 99,999 என்கிற மலிவு விலையே மின்சார பைக்கிற்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அளவு மிகவும் குறைவான விலையில் நாட்டில் வேறு எந்த எலெக்ட்ரிக் பைக்கும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், இது தலைநகர் டெல்லிக்கான எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதே மின்சார பைக் இந்தியாவின் பிற பகுதிகளில் 1,14,999 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலை குறைவான மின்சார பைக்கின் டெலிவரி பணியே தற்போது நாட்டில் தொடங்கப்பட்டு இருக்கின்றது. தினசரி இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களைக் கருத்தில் கொண்ட இந்த பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
பஜாஜ் பிளாட்டினா மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டி அளிக்கும் நோக்கிலேயே இந்த பைக்கை ப்யூர் இவி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. கம்யூட்டர் பைக் பிரிவில் இந்த இரு டூ-வீலர்களுக்கும் மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ப்யூர் இவி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் பன்முக நவீன தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், ஸ்மார்ட் பிஎம்எஸ் மற்றும் ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்ட ஓர் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஈகோ ட்ரிஃப்டில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த திரை வாயிலாக பல்வேறு முக்கியமான தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ரேஞ்ஜ் திறன், இத்தனை கிமீ பயணிக்க முடியும், பேட்டரியின் மின்சார அளவு என எக்கசக்க தகவல்களை இந்த திரை வாயிலாக அறிந்துக் கொள்ள முடியும். இதுதவிர இந்த எலெக்ட்ரிக் பைக் நல்ல ரேஞ்ஜ் தரும் டூ-வீலராகவும் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

ஓர் முழு சார்ஜில் 130 கிமீ தூரம் வரை ப்யூர் இவி ஈகோ ட்ரிஃப்டில் பைக்கில் பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் பைக்கில் 3.0 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ப்யூர் இவி நிறுவனம் இந்த மின்சார பைக்கை நான்கு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்குகின்றது.
கருப்பு, கிரே, ப்ளூ மற்றும் ரெட் ஆகியவையே அவை ஆகும். இத்தகைய சூப்பரான வசதிகள் கொண்ட மின்சார பைக்கின் டெலிவரி பணிகளையே ப்யூர் இவி தற்போது தொடங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பைக்கை டெலிவரி கொடுக்கும் படங்களை வெளியிட்டிருக்கின்றது.

தற்போது பேன் இந்தியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இந்த பைக்கை விற்பனைக்குக் கிடைக்கச் செய்திருக்கின்றது, ப்யூர் இவி. தற்போது நாடு முழுவதிலும் நிறுவனத்தின் கீழ் 130க்கும் மேற்பட்ட விற்பனையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இதனை விரைவில் பலமடங்கு அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதிலும் 300க்கும் அதிகமான நகரங்களில் தன்னுடைய கால் தடத்தை பதிக்க அது திட்டம் போட்டு இருக்கின்றது. 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த இலக்கை எட்ட நிறுவனம் திட்டம் போட்டு இருக்கின்றது. இந்தியாவைத் தாண்டி இன்னும் சில நாடுகளில் இருந்தும் இந்த பைக்கிற்கு விருப்பங்கள் கிடைக்கத் தொடங்கி உள்ளன.
அதாவது, வேறு நாடுகளில் இந்த பைக்கை விற்பனைக்கு எதிர்பார்ப்பதாக சிலர் தெரிவிக்கத் தொடங்கி இருக்கின்றனர். அந்தவகையில், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், தெற்கு ஆப்பிரிக்க மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்தே விருப்பங்கள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. ஆகையால், வெகு விரைவில் இந்த நாடுகளுக்கு இங்கிருந்து ப்யூர் இவியின் ஈகோ ட்ரிஃப் ஏற்றுமதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









