பெட்ரோல் டூ-வீலரை தலையை சுத்தி தூக்கிப்போடும் நேரம் வந்தாச்சு... 94,000 ரூபாக்கு இ-ப்ளூட்டோ 7ஜி ப்ரோ அறிமுகம்!

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்டார்ட்-அப் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ப்யூர் இவி (Pure EV) நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனமே இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையை அலங்கரிக்கும் விதமாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

இ-ப்ளூட்டோ 7ஜி ப்ரோ (ePluto 7G Pro) எனும் பெயர் கொண்ட இ-ஸ்கூட்டரை அது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 94,999 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பிரீமியம் தர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இது ஆகும்.

Pure ev epluto 7g pro

நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் அதிக வசதிகள் கொண்டதாக இ-ப்ளூட்டோ 7ஜி ப்ரோ இருக்கின்றது. இதனை நிறுவனத்தின் புதிய டாப்-பெக்ஸ் ஆப்ஷன் என்றும் கூறலாம். ஆம், இ-ப்ளூட்டோ 7ஜி ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஓர் மாடல் ஆகும். இதில் இ-ப்ளூட்டோ 7ஜி ப்ரோ என்பது புதிய தேர்வாகும். இதனால்தான் ஒரு லட்சத்தை தொடும் அளவிற்கு இ-ப்ளூட்டோ 7ஜி ப்ரோ-விற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது இந்த புதிய தேர்விற்கான புக்கிங் பணிகளும் நாட்டில் தொடங்கி உள்ளன. ப்யூர் இவி விற்பனையாளர்கள் ஷோரூம் வாயிலாக நாடு முழுவதும் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றது. மேலும், இப்போது இ-ப்ளூட்டோ 7ஜி ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாத இறுதியில் அவ்வாகனம் டெலிவரி கொடுக்க இருப்பதாக ப்யூர் இவி தெரிவித்து இருக்கின்றது.

Pure ev epluto 7g side view

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான நிற தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும். அவை, மேட் பிளாக், கிரே மற்றும் வெள்ளை ஆகும். ப்யூர் இவி நிறுவனம் பல்வேறு சிறப்புகள் கொண்டதாகவே இந்த இ-ப்ளூட்டோ 7ஜி ப்ரோவை தயாரித்து இருக்கின்றது.

மிக முக்கியமாக ஈகோ ட்ரிஃப்ட் மோட்டார்சைக்கிளை தயாரிக்கும் பிளாட்பாரத்தை பயன்படுத்தி இந்த இ-ஸ்கூட்டரை உருவாக்கி இருக்கின்றது. இதில், 2.4 kW MCU தொழில்நுட்பம் கொண்ட 1.5 kW மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. CAN அடிப்படையிலான சார்ஜரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டு உள்ளது.

Pure ev epluto 7g white colour

இவற்றுடன், அதிக சக்தி வாய்ந்த 3.0 kWh பேட்டரி பேக்கே இ-ப்ளூட்டோ 7ஜி ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் AIS தர சான்று பேட்டரி பேக்காகும். பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டமும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகையால், இந்த பேட்டரியால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதற்கான சான்றாக இந்த பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் காட்சியளிக்கின்றது. இந்த வசதிகளுடன் சேர்த்து ப்ளூடூத் இணைப்பு வசதியும் இ-ப்ளூட்டோ 7ஜி ப்ரோவில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக செல்போனை இ-ஸ்கூட்டருடன் இணைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு இரண்டையும் இணைக்கும் பட்சத்தில் இருசக்கர வாகனத்தை பற்றிய பல்வேறு முக்கிய தகவல்களை செல்போனிலேயே பெற்றுக் கொள்ள முடியும்.

இதேபோல், டூ-வீலரை ரைடு செய்துக் கொண்டிருக்கும் செல்போனுக்கு வரும் சில முக்கிய தகவல்களை வாகனத்தில் உள்ள திரையின் வாயிலாக தெரிந்துக் கொள்ள முடியும். இ-ப்ளூட்டோ 7ஜி ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 100-150 கிமீ வரை பயணிக்க முடியும்.

மூன்று விதமான ரைடிங் மோட்கள் இ-ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில், ஈகோ மோடே உச்சபட்ச ரேஞ்ஜை வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. புதிய இ-ப்ளூட்டோ 7ஜி ப்ரோவில் நான்கு வெவ்வேறு விதமான மைக்ரோ கன்ட்ரோல்லர்கள் மற்றும் பன்முக சென்சர்கள் வழங்கப்பட்டு இருப்பதாக ப்யூர் இவி தெரிவித்து உள்ளது.

இதுவே டூ-வீலரை அதிக திறன்மிக்கதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றியிருக்கின்றது. நிறுவனத்தின்கீழ் தற்போது அதிக எண்ணிக்கையில் டச் பாயிண்டுகள் செயல்பட்டு வருகின்றன. அதை விரிவாக்கம் செய்யும் பணியிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. 2024 ஆம் ஆண்டிற்குள் டச் பாயிண்டுகளின் எண்ணிக்கையை 300ஆக உயர்த்தும் முயற்சியில் அது களமிறங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ப்யூர் இவி இ-ப்ளூட்டோ 7ஜி ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை ஒகினாவா, ஆம்பியர் மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்களின் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கும் இதன் வருகை பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 11, 2023, 14:29 [IST]
English summary
Pure ev epluto 7g pro launched in india price range and features details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X