இது பைக்கா.. இல்ல பேயா.. இவ்ளோ அதிக சிசி-யை வெளிப்படுத்துமா?.. க்யூஜே எஸ்ஆர்கே700 வெளியீடு!
சீன நிறுவனம் க்யூ மோட்டார் அதன் எஸ்ஆர்கே 700 பைக்கை இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2023இல் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த பைக் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரபல சீன இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான க்யூஜே அதன் எஸ்ஆர்கே 700 மோட்டார்சைக்கிளை இந்தியா 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இது ஓர் 700 சிசி மோட்டார் சைக்கிள் ஆகும். இது பவர்ஃபுல் நேக்கட் ரக பைக் மாடலாகும். இந்த பைக்கையே ஆட்டோ எக்ஸ்போவில் க்யூஜே வெளியீடு செய்திருக்கின்றது. க்யூஜே மோட்டார் இந்தியாவில் கடந்த ஆண்டின் இறுதியிலேயே அதன் கால் தடத்தைப் பதித்தது.

நான்கு புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களுடன் அது அதன் வருகையை பதிவு செய்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தனது இருப்பைப் பலப்படுத்தும் விதமாக நிறுவனம் இன்னும் சில மோட்டார்சைக்கிள் மாடல்களை நாட்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே சீன நிறுவனம் உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியான ஆட்டோ எக்ஸ்போவை பயன்படுத்தி தனது புதுமுக மோட்டார்சைக்கிளை காட்சிப்படுத்தி இருக்கின்றது.
எஞ்ஜின் விபரம்
எஸ்ஆர்கே 700 எனும் மோட்டார்சைக்கிளையே நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இந்த பைக்கில் க்யூஜே மோட்டார் இன்லைன் ட்வின் சிலிண்டர், 8 வால்வுகள் கொண்ட லிக்யூடு கூல்டு மோட்டாரையே பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டார் 698 சிசி வரை திறன் வெளியேற்றும். இது 8,000 ஆர்பிஎம்மில் 72.4 எச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 67 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

சஸ்பென்ஷன்
இதை வைத்து பார்க்கையில் சாலையில் பயணிக்கும்போது இந்த பைக் மிகவும் உற்சாகமான ரைடிங் அனுபவத்தை வழங்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. இந்த ரைடை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்றும் விதமாக இன்னும் சில சிறப்பு வசதிகளை இந்த பைக்கில் க்யூஜே மோட்டார் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், சிறந்த சஸ்பென்ஷனுக்காக டெலிஸ்கோபிக் அப்சைடு-டவுன் முன் பக்கத்திலும், டெலிஸ்கோபிக் காயில் ஸ்பிரிங் ஆயில் டேம்பட் பின் பகுதியிலும் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்கத்தில் 320 மிமீ டிஸ்க்கும், பின் பக்க வீலில் 240 மிமீ டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் மிக சிறந்த பிரேக்கிங்கிற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிக வேகத்தைகூட அசால்டாகக் கட்டுப்படுத்த உதவும். இதுபோன்று பல்வேறு சிறப்பு வசதிகளை இந்த பைக்கில் சீன நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

சிறப்பம்சங்கள்
குறிப்பாக, இந்தியர்களை தன் வசம் வளைத்துப் போடும் விதமாக எக்கசக்கமான அளவில் பிரீமியம் ரக அம்சங்களை எஸ்ஆர்கே 700 மோட்டார்சைக்கிளில் க்யூஜே மோட்டார் வழங்கி இருக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த எடையே 196 கிலோகிராம் ஆகும். இந்த பைக்கில் க்யூஜே நிறுவனம் எல்சிடி திரையையே வழங்கி இருக்கின்றது. இது இருசக்கர வாகனத்தின் வேகம், ஆர்பிஎம், ட்ரிப் மாஸ்டர், ஃப்யூவல் லெவல், நேரம் மற்றும் கியர் லெவல் ஆகியவற்றை இந்த திரை வழங்கும்.
விலை விபரம்
உலக நாடுகள் சிலவற்றில் இந்த கார் ஏற்கனவே விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், இங்கிலாந்து நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சுமார் 6,999 யூரோக்களுக்கு அது விற்கப்படுகின்றது. ஏற்கனவே நிறுவனம் எஸ்ஆர்சி 250 (SRC 250), எஸ்ஆர்சி 500 (SR C500), என்டிஎக்ஸ் 300 (NTX300) மற்றும் எஸ்ஆர்கே (SRK400) ஆகிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








