90,000கிமீ-க்கு பேட்டரி உத்தரவாதம்... குவாண்டம் எனர்ஜியின் புதிய கமர்ஷியல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!
குவாண்டம் எனர்ஜி நிறுவனம் அதன் குவாண்டம் பிஸினெஸ் (Quantum Bziness) எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. எந்த மாதிரியான தேவைகளுக்கு இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தலாம்? என்பது உள்பட இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமாக குவாண்டம் எனர்ஜி விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் தரமான தயாரிப்புகளுள் ஒன்றான பிஸினெஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குவாண்டம் நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது பொருட்களை ஏற்றி செல்லும் கமர்ஷியல் பணிகளுக்கு ஏற்றதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பிஸினெஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.99,000 ஆக குவாண்டம் எனர்ஜி நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இத்தகைய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சொந்த பயன்பாட்டிற்காக மட்டுமின்றி, லாஸ்ட் மைல் டெலிவிரி பணிகளுக்காகவும் பல நிறுவனங்கள் வாங்கக்கூடும். இதனாலேயே அத்தகைய காப்பிரேட் நிறுவனங்களை கவர்ந்திழுக்க, எச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ மற்றும் சில என்.பி.எஃப்.சி வங்கிகளுடன் குவாண்டம் எனர்ஜி கூட்டணியில் உள்ளது.
அதவாது இந்த கூட்டணியின் மூலம் சில பல சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த மாடர்ன் கமர்ஷியல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1,200 வாட்ஸ் அதி-செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் 0-வில் இருந்து 40kmph வேகத்தை வெறும் 8 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த பிஸினெஸ் கமர்ஷியல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 55கிமீ ஆகும்.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 130கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும் என்கிறது குவாண்டம் எனர்ஜி நிறுவனம். இந்த 130கிமீ ரேஞ்ச் என்பது ஸ்கூட்டர் இயங்கும் சாலை, பயண சூழல் மற்றும் ரைடரின் ரைடிங் ஸ்டைல் உள்ளிட்டவற்றை பொறுத்தது. இவை எல்லாவற்றையும் விட, ஆயுட்காலம் குறைய குறைய பேட்டரியின் திறனும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
குவாண்டம் பிஸினெஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிமோட் லாக்-அன்லாக், ஆண்டி-தீஃப்ட் அலார்ம், யுஎஸ்பி சார்ஜர், டிஸ்க் பிரேக்குகள், எல்சிடி திரை என ஏகப்பட்ட மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன், அப்கிரேடான எல்.எஃப்.பி பேட்டரி, பவர்ஃபுல்லான ஹெட்லேம்ப், சவுகரியமான பயணத்திற்கு அகலமான இருக்கை, வலிமையான கார்கோ ராக் மற்றும் ஓட்டுனர் கால்களையும், சுமைகளை வைத்து கொள்ள அகலமான ஃபுட் போர்டு உள்ளிட்டவையும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளதை குறிப்பிட்டாக வேண்டும்.

சிறந்த நிலைத்தன்மை மற்றும் ஹேண்ட்லிங்கிற்கு ஏற்ப, ஸ்கூட்டரில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 12 இன்ச்களாக உள்ளது. குவாண்டம் பிஸினெஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரிக்கான உத்தரவாத காலம் 3 வருடங்கள் அல்லது 90,000கிமீ-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டில் எது முதலில் வருகிறதோ அதன் வரையில் மட்டுமே உத்தரவாதம் இருக்கும். இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மேற்குறிப்பிடப்பட்ட விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்படக்கூடும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
எதிர்காலத்தில் லாஸ்ட் மைல் டெலிவிரிகள் மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஏனெனில் இப்போதே நேரில் கடைக்கு சென்று வாங்குவதை காட்டிலும், வீட்டிற்கே டெலிவிரி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. ஆதலால் இவ்வாறான புதிய புதிய கமர்ஷியல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகமாகுவது நல்லதுதான். 60 வருடங்கள் இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஈடுப்பட்டுவரும் குசாலவா குழுமத்தை சேர்ந்த நிறுவனம் குவாண்டம் எனர்ஜி என்பதை மறந்துவிட வேண்டாம்.


Click it and Unblock the Notifications








