இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் பண்ணா இனி சட்டென டெலிவிரி ஆயிடும்!! புது ஷோரூம் நம்ம ஊருக்கு பக்கத்திலேயே!
குவாண்டம் எனர்ஜி (Quantum Energy) நிறுவனம் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்காக தமிழ்நாட்டிற்கு அருகே ஆந்திரா மாநிலம் திருப்பதியில் புதிய ஷோரூமை திறந்துள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் குவாண்டம் எனர்ஜியின் ஷோரூம்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.
குவாண்டம் எனர்ஜி, இந்தியாவை சேர்ந்த இவி ஸ்டார்ட் நிறுவனம். தற்போதைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வடிவமைத்து, உற்பத்தி செய்து இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் ஆந்திராவின் பிரபலமான புன்னியஸ்தலமான திருப்பதியில் புதிய ஷோரூமை கடந்த நவம்பர் 4ஆம் தேதி திறந்து உள்ளது.

இது ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் குவாண்டம் எனர்ஜி நிறுவனத்தின் 9வது ஷோரூம் ஆகும். இதன் மூலமாக, ஆந்திராவில் குவாண்டம் எனர்ஜியின் நெட்வொர்க் மேலும் தென்பகுதியை நோக்கி விரிவடைந்துள்ளது. இந்த புதிய ஷோரூம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பல்வேறு போக்குவரத்து முதன்மை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். அத்துடன், குவாண்டம் எனர்ஜி நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.
சுமார் 950 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஷோரூம் ஆனது ஸ்பார்க் ஆட்டோமொபைல்ஸ் என்ற பெயரில் செயல்பட உள்ளது. இந்த புதிய குவாண்டம் எனர்ஜி ஷோரூமின் முகவரி: 23-8-156/3A, ஏர் பைபாஸ் சாலை, திருப்பதி, ஆந்திரா பிரதேசம் - 517501. குவாண்டம் எனர்ஜியின் மற்ற ஷோரூம்களை போல இந்த ஷோரூமிலும் இந்த நிறுவனத்தின் கட்டிங்-எட்ஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நேரில் காணலாம்.

அத்துடன், அவற்றை டெஸ்ட் ரைடு செய்து பார்க்கும் வாய்ப்பையும் இங்கு பெறலாம். குவாண்டம் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து தற்சமயம் 5 விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிளாஸ்மா, எலெக்ட்ரான், மிலான், பிஸினெஸ் மற்றும் பிஸினெஸ் புரோ என்பன அந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும்.
இதில் பிளாஸ்மாவில் 1500 வாட்ஸ் மோட்டார் பொருத்தப்படுகிறது. மஹாராஷ்டிராவில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1,19,000 ஆக உள்ளது. முழுவதுமாக சார்ஜ் செய்தால் கிட்டத்தட்ட 110கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியதாக இந்த இ-ஸ்கூட்டர் உள்ளது. குவாண்டம் பிளாஸ்மாவின் டாப்-ஸ்பீடு 65kmph ஆகும்.

எலக்ட்ரான், மிலான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 1000 வாட்ஸ் மோட்டார் பொருத்தப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சிங்கிள்-ஃபுல் சார்ஜில் 100கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இந்த இ-ஸ்கூட்டர்களின் டாப்-ஸ்பீடு 60kmph ஆகும். இதில் எலக்ட்ரான் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை (மஹாராஷ்டிரா) ரூ.89,629 மற்றும் மிலானின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.85,470 ஆகும்.
பிஸினெஸ் மற்றும் பிஸினெஸ் புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.95,865 மற்றும் ரூ.1,15,000 ஆகும். இவை இரண்டிலும் ஒரே மாதிரியான 1,200 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டாப்-ஸ்பீடு 55kmph ஆகும். ஆனால், பிஸினெஸ் ஸ்கூட்டரில் 110கிமீ ரேஞ்சும், பிஸினெஸ் புரோவில் 130கிமீ ரேஞ்சும் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுக்க விரும்பும் நிறுவனங்களுள் ஒன்றாக குவாண்டம் எனர்ஜி விளங்குகிறது. நாடு முழுவதும் நெட்வொர்க்கை விரிவுப்படுத்த விரும்பினால், இவ்வாறு புது புது நகரங்களில் ஷோரூம்களை திறப்பது முக்கியம். குவாண்டம் எனர்ஜி இந்த விஷயத்தில் சற்று கவனத்துடன் யோசித்து, தமிழ்நாட்டில் இருந்தும் வாடிக்கையாளர்களை பெறும் முயற்சியாக திருப்பதியில் ஷோரூமை திறந்துள்ளது.


Click it and Unblock the Notifications









