கரடு முரடான பாதைகளையும் அசால்டாக கடக்கும் ரெய்ஸ் டிரையல் ஆர் டயர் ரிவியூ!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மஹான்சாரியா டயர்ஸ் நிறுவனம் ஐரோப்பியன் மார்க் மிடாஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிதாக ரெய்ஸ் மோட்டோ என்ற பிராண்டில் டயர்களை அறிமுகப்படுத்தியது. குஜராத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் மஹான்சாரியா, இந்நிறுவனம் செக் குடியரசு நாட்டில் உள்ள செக் மார்க் மிடான் என்ற நிறுவனத்திற்காகக் குஜராத்தில் டயர்களை தயாரிக்கிறது.
அத்துடன் சேர்த்து தற்போது இந்தியாவிலும் ரெய்ஸ் என்ற பெயரில் புதிய டயர் பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு இந்நிறுவனத்தின் மீது ஒரு கண் இருப்பதற்கு இது மட்டும் காரணம் அல்ல மாறாக இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது.

மிடாஸ் நிறுவனம் மைக்கேலின் நிறுவனத்தால் கடந்த 1933ம் ஆண்டு செக் குடியரசு நாட்டின் தலைநகரான பராகுவோவில் துவங்கப்பட்டது. மிடாஸ் நிறுவனம் 1947ல் ஸ்பீடு வே ரேஸிங் பைக்குகளுக்காக டயர்களை தயாரித்த போது தான் பிரபலமானது. அதன்பின்னர் இந்நிறுவனம் மோட்டார் ஸ்போர்ட்ஸையும் தாண்டி தனது டயர் தயாரிப்பை விரிவுபடுத்தியது.
இன்றும் இந்த மிடாஸ் நிறுவனத்தின் டயர்கள் டேக்கர் ரேலி உள்ளிட்ட ரேஸ்களில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த டேக்கர் ரேலி உலகின் கடினமான ஒரு ரேலியாக இருக்கிறது. இந்நிலையில் ரெய்ஸ் மோட்டோ நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் இந்தியா மார்கெட்டிற்கு பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான டயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் மொத்தம் 4 விதமான டயர்களை பைக்குகளுக்கும், 2 விதமான டயரை ஸ்கூட்டருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பைக்குகளுக்கு டிரையல் -ஆர் முதல் தினசரி பயன்பாட்டிற்கா ட்ரூப்ஆர் வரையிலான டயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.. இந்நிலையில் ரெய்ஸ் மோட்டோ நிறுவனம் தனது டூயல் பயன்பாட்டு டிரையல்ஆர் டயர்களுக்கான ரைடுகளை ஏற்பாடு செய்திருந்தது.
மகாராஷ்டிரா மாநிலம் லோனாவாலா பகுதியில் நடந்த இந்த ரைடில் டிரைவ் ஸ்பார்க் குழுவும் இந்த ஐரோப்பிய நிறுவனத்தின் ரேஸிங் டிஎன்ஏ டயர்களை டெஸ்ட் செய்யச் சென்றிருந்தோம். அந்நிறுவனத்தின் டயர்கள் இந்திய மார்கெட்டிற்கு ஏற்றதாக இருக்குமா? இந்தியா மக்கள் இந்த டயரை விரும்புவார்களா? வாருங்கள் விரிவாக இதைப் பற்றிக் காணலாம்.

ஸ்பெக் மற்றும் ரைடிங் இம்பிரஷன்
லோனோவாலா பகுதியில் உள்ள அட்வென்சர் ஸ்கோயர் பகுதியில் உள்ள ஆஃப்ரோடு கோர்ஸில் நாங்கள் ரெய்ஸ் டிரையல் ஆர் டயர்களை டெஸ்ட் செய்ய ரெய்டு செய்தோம். ரெய்ஸ் குழுவினர் தங்கள் டிரையல்ஆர் டயர்களை ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் பொருத்தியிருந்தனர். முன்பக்கம் 90/90-21 டயரையும், பின்பக்கம் 120/90-17 டயரையும் பொருத்தியிருந்தனர்.
அட்வெஞ்சர் ஸ்கோயரில் ஆஃப்ரோடு எக்ஸ்பிரியரன்ஸிற்கு ஹிமாலயன் பைக் சிறப்பாக இருக்கும் என்பதால் அந்த பைக்கை தேர்வு செய்திருந்தனர். இந்த ஆஃப்ரோடு பகுதியில் லூசான மணல், கற்கள், கூழாங்கற்கள், செங்குத்தான ஏற்றம், பெரிய இறக்கம், குதித்துச் செல்லும் பகுதி என பல வகையான இடங்களில் டெஸ்ட் செய்ய முடியும்.
ரெய்ஸ் மோட்டோ டிரையல்ஆர் டயர்கள் பொருத்தப்பட்ட ஹிமாலயன் பைக் லோனாவாலா ஆஃப்ரோட்டில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. தனது ஆஃப்ரோடு திறனைச் சிறப்பாகக் காட்டியது. லூசான மணல், சரல் நிறைந்த பகுதிகளில் திருப்பங்களில் சிறப்பாகச் செயல்பட்டது.
டிரையல் ஆர் டயரின் அகலமான ஃபுட் பிரிண்ட் மற்றும் ஸ்டிஃப்பான கார் கேஸ்கள் அதிக வேகத்தில் டிராக்கன் இல்லாமல் காக்கிறது. இது ஹிமாலயனை ஸ்லிப் ஆகாமல் லைனில் வைத்திருக்கிறது. டயரில் உள்ள டயகனல் கிராஸ் ஓவர்கள் பைக்கின் வேகத்தை வேகமாகக் குறைக்கிறது வேகமாகச் செல்லும் போது சடன் பிரேக் பிடிக்கும் சமயங்களிலும் மெதுவாக ஷார்ப் டர்ன் எடுக்கும் நேரங்களிலும் டயர் எல்லா விதமான செயல்களுக்கும் ஒத்துழைக்கிறது.
டிரையர் ஆர் டயர்கள் ஹிமாலயன் பைக் ஸ்லைடிங்கில் ரியர் எண்டை லூசில் விடாமல் நம்மை ஆச்சரியப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். ஐரோப்பிய குஜராத்தி மேஜிக் இங்கே ஒர்க் ஆகியுள்ளது. கொஞ்சம் வேகம் அதிகரித்து ஸ்டைலிங், ஜம்ப்கள், உடன் எங்கள் பயணத்தைக் கொஞ்சம் ரஃப் ஆக்கினோம். இதில் ஏற்றம் இறக்கங்களும் இருந்தன. சிறிய மற்றும் பெரிய பாறைகள் நிறைந்த பகுதியில் சுமார் கிலோ மீட்டர் வரை பயணித்து டயரை டார்ச்சர் செய்தோம் அப்படியும் டயர் அசராமல் இருந்தது.
நாங்கள் பயணித்த பாதை கடினமாக இருந்தாலும் இந்த டயரில் உள்ள ஆஃப்ரோடில் போட்டென்ஷியல் பயணத்தைச் சுலபமாக்கியது. ஹிமாலயரின் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் டிரையல் ஆர் டயரை பொருத்தியது மூலம் இந்த பயணத்தை எப்படி ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாக்குமோ அப்படி அது பாதுகாப்பாகச் செயல்பட்டது.
ராயல் என்ஃபீல்டின் குறைவான ஸ்பீடில் கிடைக்கும் டார்க் கற்கள் மற்றும் பாறைகளில் கூட எளிதாக ஏறி இறங்கியது. இப்படியாக பெரும் திருப்தியுடன் எங்கள் ஆஃப்ரோடிங் பயணம் முடிந்தது.
இறுதித்தீர்ப்பு!
ரெய்ஸ் மோட்டோ டிரையல் ஆர் டயரைில் நாங்கள் ஆஃப்ரோடிங் கோர்ஸ் மட்டும் தான் சென்றோம். ஆனால் இதில் நாங்கள் உணர்ந்தது. இந்த டயர்கள் எந்த விதமான ரோடுகளுக்கும் அனைத்து சாலைகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்பதை உணர்வு கொண்டோம். இந்த டயர் டூயல் பயன்பாடு என்பதால் இந்த டயரில் தார்ச் சாலைகளில், ஈரமான ரோடுகளில் ஓட்டி பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்.


Click it and Unblock the Notifications








