போட்டி அதிகமாயிருச்சு.. இத விட்ட வேற வழியே இல்ல.. மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பணியில் டிவிஎஸ்
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் புதிய மற்றும் தற்போது விற்பனையில் இருக்கும் ஐ-க்யூப்பைக் காட்டிலும் மிகக் குறைவான விலையில் ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
டிவிஎஸ் (TVS) நிறுவனம் இப்போதைய நிலவரப்படி இந்திய மின் வாகன சந்தையில் ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஐ-க்யூப் (i-Qube) மின்சார ஸ்கூட்டரே அது ஆகும். இது பிரீமியம் வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

ஆகையால், இதன் விலை சற்று அதிகமாக இருக்கின்றது. மேலும், விலை உயர்வாக இருக்கின்ற காரணத்தினால் வசதி படைத்தவர்களால் மட்டுமே வாங்கக் கூடிய மின்சார ஸ்கூட்டராக ஐ-க்யூப் காட்சியளிக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பட்ஜெட் விலையில் ஓர் மின்சார ஸ்கூட்டரை டிவிஎஸ் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, குறைவான விலையில் ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் டிவிஎஸ் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அது தற்போது விற்பனையில் இருக்கும் ஐ-க்யூப்பைக் காட்டிலும் பலமடங்கு குறைவான விலையைக் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை நிறுவனம் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில் இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களை சிறிதும் தயக்கம் இன்றி நம்பலாம் என கூறப்படுகின்றது. சமீபத்தில், இந்திய அரசாங்கம் ஃபேம்-2 திட்டத்தின்கீழ் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வழங்கி வந்த மானியத் தொகையின் சதவீதத்தைக் குறைத்தது.
இதன் விளைவாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விலை மிகப் பெரிய அளவில் உயர்ந்தது. அந்தவகையில், டிவிஎஸ் ஐ-க்யூப்பின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இதனால் ஏற்கனவே காஸ்ட்லியானதாக இருந்த ஐ-க்யூபின் விலை மேலும் காஸ்ட்லியானதாக தற்போது மாறி இருக்கின்றது. இந்த நிலை ஐ-க்யூபின் விற்பனையை பாதிக்கச் செய்யும் என யூகிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே மலிவு விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் டிவிஎஸ் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது ஐக்யூப்-இன் சிறிய பேட்டரி கொண்ட தேர்வாக இருக்கும் என யூகிக்க முடிகின்றது. ஆமாங்க, ஐ-க்யூப்பிலேயே விலை குறைவான தேர்வு எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைக் காட்டிலும் மிகக் குறைவான அம்சங்களையேத் தாங்கியதாகவும் இது இருக்கும். மலிவு விலையில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்காக இதுபோன்று இன்னும் பல அம்சம் குறைப்பு செயலை புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிவிஎஸ் மேற்கொள்ள இருக்கின்றது.
தற்போது விற்பனையில் இருக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.04 kWh பேட்டரி பேக் மற்றும் டிஎஃப்டி திரை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சங்களையே புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிஸ் பண்ண இருக்கின்றது. ஆகையால், 10 ஆயிரம் ரூபாய் முதல் ரூ. 15 ஆயிரம் வரையில் விலை குறைவாக அது எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், அவற்றின் விலையே நம்மை பயந்தோட செய்யும் வகையில் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டிவிஎஸ் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாயிலாக இந்தியாவின் பட்ஜெட் வாகன பிரியர்களைக் கவர்ந்திழுக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








