இந்த எலக்ட்ரிக் பைக்கை நான், நீ என்று போட்டி போட்டு வாங்க போறாங்க!! தயாரித்தது யார் தெரியுமா?

உலக கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு ரிவோல்ட் (Revolt) நிறுவனம் அதன் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கில் புதியதாக கிரிக்கெட் ஸ்பெஷல் எடிசனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு உண்டான நீல நிறத்தில் இந்த ஸ்பெஷல் ஆர்வி400 பைக் உருவாக்கப்பட்டு உள்ளது.

கிரிக்கெட் உலகின் முக்கிய தொடரான 50 ஓவர் உலக கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் எப்போதுமே கிரிக்கெட்டிற்கு நல்ல வரவேற்பு உள்ளதாலும், இது முக்கியமான தொடர் என்பதாலும், 2023 உலக கோப்பை போட்டிகள் ஒவ்வொன்றும், நாடு முழுவதும் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளன.

revolt rv400 cricket special edition

'காற்று உள்ள போதே தூற்றிக்கொள்' என்ற பழமொழிக்கு ஏற்ப கார்ப்பிரேட் நிறுவனங்கள் கஷ்டப்பட்டு தங்களது வணிகத்துடன் கிரிக்கெட்டை தொடர்புப்படுத்தி வருகின்றன. ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், ஏற்கனவே சில வேர்ல்டு கப் கிரிக்கெட் எடிசன் வாகனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு விற்பனைக்கு வந்துள்ளன.

இந்த வரிசையில் தற்போது, ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கில் புதியதாக கிரிக்கெட் ஸ்பெஷல் எடிசனை அறிமுகம் செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியினர் உடுத்தும் ஜெர்ஸியின் நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள புதிய ரிவோல்ட் ஆர்வி400 கிரிக்கெட் ஸ்பெஷல் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.55 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

revolt rv400 cricket special edition

இந்த ரூ.1.55 லட்சத்தில் சார்ஜருக்கான தொகையும் அடங்குகிறது. விருப்பப்படுவோர் புதிய ஆர்வி400 கிரிக்கெட் எடிசன் எலக்ட்ரிக் பைக்கை ரிவோல்ட் மோட்டார்ஸின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் அல்லது டீலர்ஷிப் ஷோரூம்களில் முன்பதிவு செய்யலாம். பைக்கின் டெலிவிரிகள் வருகிற அக்.24ஆம் தேதியில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஜெர்ஸியின் நீல நிறத்தினால், ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் இந்த ஸ்பெஷல் எடிசன் தோற்றத்தில் மின்னுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால், வழக்கத்தை காட்டிலும் விலையுயர்ந்த பைக்காக ரிவோல்ட் ஆர்வி400 இந்த ஸ்பெஷல் எடிசனில் காட்சியளிக்கிறது. மற்றப்படி, பவர்டிரெயின் உள்பட பைக்கின் இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை.

revolt rv400 cricket special edition

150கிமீ தொலைவிற்கு இந்த எலக்ட்ரிக் பைக் இயங்குவதற்கு தேவையான சார்ஜை வெறும் 4.5 மணிநேரங்களில் நிரப்பிவிடலாம் என ரிவோல்ட் தெரிவிக்கிறது. இந்த வருடத்தில் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கில் ரிவோல்ட் நிறுவனம் கொண்டுவரும் 2வது ஸ்பெஷல் எடிசன் இதுவாகும். ஏனெனில், சமீபத்தில்தான் ஆர்வி400 ஸ்டீல்த் பிளாக் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை டார்க்கெட் செய்து கொண்டுவரப்படுவதாக கூறப்பட்டாலும், புதிய ரிவோல்ட் ஆர்வி400 கிரிக்கெட் ஸ்பெஷல் எடிசன் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையையும் டார்க்கெட் செய்தே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் பைக் எத்தனை நாட்களுக்கு விற்பனையில் இருக்கும் என்பது தெரியவில்லை. கூடுதல் விபரங்களுக்கு தொடர்ந்து இணைப்பில் இருங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 18, 2023, 18:39 [IST]
English summary
Revolt rv400 cricket special edition electric bike launched
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X