ஷோரூமுக்கு வரவங்க எல்லாரும் இந்த கலர் பைக்கை தான் தேடி வாங்க போறாங்க!! பயப்டாதீங்க... விலையில் மாற்றம் இல்லை!
ரிவோல்ட் ஆர்வி400 (Revolt RV400) எலக்ட்ரிக் பைக்கில் புதிய பெயிண்ட் ஆப்ஷனை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய ஆப்ஷனில் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக் எவ்வாறு உள்ளது என்பதையும், இந்த ஆப்ஷனில் பைக்கின் விலை எவ்வளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதையும் பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
ரத்தன் இந்தியா எண்டர்பிரைஸில் ஓர் அங்கமாக வகிக்கும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் ரிவோல்ட் மோட்டார்ஸ் ஆகும். இந்த நிறுவனத்தின் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வரவேற்பை மேலும் அதிகரிக்கும் விதமாக ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கில் புதிய பெயிண்ட் ஆப்ஷனை ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கிற்கு புதியதாக வழங்கப்பட்டுள்ள பெயிண்ட் ஆப்ஷனின் பெயர் லைட்னிங் மஞ்சள் (Lightning Yellow) ஆகும். இந்த புதிய பெயிண்ட் ஆப்ஷனில் பளிச்சிடும் மஞ்சள் நிறத்தில் பளபளப்பான ஃபினிஷிங்கில் பைக் கிடைக்கும். இந்த புதிய பெயிண்ட் ஆப்ஷனில் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.
விருப்பப்படுவோர் வெறும் ரூ.499 செலுத்தி லைட்னிங் மஞ்சள் நிறத்தில் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இந்த புதிய பெயிண்ட் ஆப்ஷனில் மஞ்சள் நிறம் ஆனது பைக்கின் மேற்பகுதிகளில் மட்டுமே வழங்கப்படும். மற்றப்படி, மற்ற பெயிண்ட் ஆப்ஷன்களில் கிடைப்பதை போல், பைக்கின் கீழ் பகுதிகள் முழுவதும் கருப்பு நிறத்தில் கிடைக்கும்.

புதிய லைட்னிங் மஞ்சள் பெயிண்ட் ஆப்ஷனில் மட்டுமின்றி, வழக்கமான காஸ்மிக் கருப்பு மற்றும் மிஸ்ட் கிரே பெயிண்ட் ஆப்ஷன்களிலும் வழக்கம்போல் ஆர்வி400 பைக் கிடைக்கும். புதிய பெயிண்ட் ஆப்ஷன் தவிர்த்து, பைக்கின் வேறெந்த மெக்கானிக்கல் அப்டேட்களும் கிடையாது. ஆதலால், பைக்கின் விலையிலும் மாற்றமில்லை.
தற்சமயம் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக் ஒன்றின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.19 லட்சமாக உள்ளது. ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கில் 3 கிலோவாட்ஸ் மிட்-டிரைவ் மோட்டார் பொருத்தப்படுகிறது. இந்த மோட்டார் அதிகப்பட்சமாக 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. பெல்ட் டிரைவ் மூலமாக இந்த இயக்க ஆற்றல்கள் பைக்கின் பின் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

ஆர்வி400 பைக்கின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 150கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இந்த எலக்ட்ரிக் பைக்கின் டாப்-ஸ்பீடு 85kmph ஆகும். இந்த எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை 4.5 மணிநேரங்களில் 0-இல் இருந்து 100% சார்ஜ் நிரப்பிவிடலாம். ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கில் ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த வருடம் முழுக்கவே புதிய, புதிய பெயிண்ட் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
முன்னதாக சமீபத்தில் கூட ஸ்டீல்த் பிளாக் லிமிடெட் எடிசன் மற்றும் இந்தியா ப்ளூ கிரிக்கெட் ஸ்பெஷல் எடிசன்கள் ஆர்வி400 பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டன. லைட்னிங் மஞ்சள் பெயிண்ட் ஆப்ஷனில் ஆர்வி400 பைக் ஆனது ஸ்போர்டி வைப்-ஐ குறிப்பதாகவும், அத்துடன் அபரிதனமான இயக்க ஆற்றலையும் சுட்டிக்காட்டுவதாகவும் ரத்தன்இந்தியா எண்டர்பிரைஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற பெயிண்ட் ஆப்ஷன்களை காட்டிலும் புதிய லைட்னிங் மஞ்சள் பெயிண்ட் ஆப்ஷனில் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக் பளிச்சென்று உள்ளது. பொதுவாகவே, மஞ்சள் நிறம் கூடுதல் பிரகாசத்தை தரக்கூடியது. ஆதலால் எவ்வளவு கூட்டத்தில் இருந்தாலும், இந்த நிறத்தில் வாங்கினால் உங்களது ஆர்வி400 பைக் தனியாக தெரியும்.


Click it and Unblock the Notifications









