இந்த அழகான ரிவோல்ட் ஆர்வி400 பைக்கை கொஞ்சம் பேரால் மட்டுமே வாங்க முடியுமா? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் இருக்கோ!

ரத்தன் இந்தியா (Rattan India) நிறுவனத்தின் கை வசம் மாறி இருக்கும் ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors) அதன் பிரபல ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் (RV400 Electric Bike) மாடலில் புதிய அட்டகாசமான சிறப்பு பதிப்பை ஒன்றை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

ஸ்டீல்த் பிளாக் (Stealth Black) எனும் நிற தேர்விலேயே அது சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதனை மிக மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனைச் செய்ய இருக்கின்றது, ரிவோல்ட் மோட்டார்ஸ். ஆனால், எத்தனை யூனிட்டுகளை விற்பனைச் செய்ய இருக்கின்றது என்பதை நிறுவனம் துள்ளியமாக கூறவில்லை.

Revolt rv400 stealth black edition front view

ரூ. 1.17 லட்சம் என்கிற விலைக்கே இந்த சிறப்பு பதிப்பை அது விற்பனைச் செய்ய இருக்கின்றது. நிறுவனத்தின் ஆறாம் ஆண்டு விழாவை முன்னிட்டே இந்த சிறப்பு பதிப்பை ரிவோல்ட் மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ரிவோல்ட் மோட்டார்ஸ் தற்போது வேறு நிறுவனத்தின் கைகளுக்கு மாறியிருக்கின்றது.

இருப்பினும், அது தோன்றிய நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. புதிய சிறப்பு ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கை வாங்க விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக அல்லது ஷோரூம் வாயிலாக புக் செய்துக் கொள்ள முடியும். ரூ. 4,999 டோக்கன் அட்வான்ஸை செலுத்தி உங்களுக்கான ரிவோல்ட் ஆர்வி400 ஸ்டீல்த் எடிசனை புக் செய்துக் கொள்ளலாம்.

Revolt rv400 stealth black edition ev

முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் இந்த ஸ்டீல்த் பிளாக் எடிசன் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், பைக்கின் லுக்கை மிகவும் போல்டானதாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக கோல்டு நிற யுஎஸ்டி ஃபோர்க்கை இ-பைக்கின் முன் பக்கத்தில் ரிவோல்ட் வழங்கி இருக்கின்றது. ஆனால், பின் பக்கத்தில் வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், கருப்பு நிற அலாய் வீல்கள், ஸ்விங்கார்ம் ஹேண்டில்பார் மற்றும் அதிக பிடிமானத்தை வழங்கக் கூடிய கை பிடிகள் உள்ளிட்டவையும் இந்த லிமிடெட் எடிசனில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமாதிரியான சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே வழக்கமான தேர்வைக் காட்டிலும் சற்று அதிக விலையைக் கொண்டதாக இந்த சிறப்பு பதிப்பு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

ரூ. 5 ஆயிரம் அதிக விலையையே அது கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. அலங்கார மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றத்தையும் இந்த சிறப்பு பதிப்பில் ரிவோல்ட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. 3kW திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது 170 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதனால் மணிக்கு 85 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இதுதவிர, ஓர் முழு சார்ஜில் 150 கிமீ தூரம் ரேஞ்ஜ் தரும். ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 4.5 மணி நேரங்களே போதுமானதாக இருக்கின்றது.

இந்த அளவு நேரத்தில் நாம் செலவு செய்யும் பட்சத்திலேயே 150 கிமீ ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியும். ரிவோல்ட் நிறுவனம் இந்த ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கை ஹாப் ஆக்ஸோ, டார்க் க்ரடோஸ் ஆர், ஓபென் ரோர், ஒடைசி வேடெர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே சிறப்பு பதிப்பு பைக்கை ரிவோல்ட் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதேபோல், அல்ட்ராவைலட் எனும் நிறுவனமும் சமீபத்தில் சிறப்பு பதிப்பு எஃப்77 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியது. மொத்தமாகவே 10 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. இவை அனைத்தும் தற்போது விற்று தீர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 23, 2023, 22:05 [IST]
English summary
Revolt rv400 special edition launched here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+