வெல்டிங் கம்பெனி உருவாக்கிய எலெக்ட்ரிக் டூ-வீலர்.. இதுல ஒரு கிமீ டிராவல் பண்ண 15 பைசா மட்டுமே போதுமானது!

15 ஆண்டுகளாக வெல்டிங் (Welding) தொழிலில் பழம் தின்னு கொட்டை போட்ட நிறுவனம் ரிலோக்ஸ் இந்தியா (Rilox India). இந்த நிறுவனமே ரிலோக்ஸ் இவி (Rilox EV) எனும் புத்தம் புதிய துணை பிராண்டை தற்போது உருவாக்கி இருக்கின்றது. இது ஓர் மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும்.

வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு ரிலோக்ஸ் இந்தியா, மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் களமிறங்கும் விதமாகவே இந்த பிராண்ட் தொடங்கப்பட்டு உள்ளது. இந்தியர்களுக்கு மலிவு விலையில் மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்குவதை லட்சியமாகக் கொண்டு களமிறங்கி இருப்பதாக நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Rilox ev escooter

இதன் அடிப்படையில் தன்னுடைய மேட் இன் இந்தியா எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தற்போது அது வெளியீடு செய்திருக்கின்றது. ஸ்பார்க் எலைட் (Spark Elite) மற்றும் பிஜிலி (Bijli) எனும் இரு மாடல்களையே அது வெளியீடு செய்திருக்கின்றது. அதேவேளையில், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் பிஜிலி 2 (Bijli 2), டேங்கோ ஐ (Tango i) மற்றும் ஹாவ்க் ஸ்போர்ட் (Hawk Sport) போன்ற எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களும் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.

இருப்பினும், நிறுவனம் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஸ்பார்க் எலைட் மற்றும் பிஜிலி ஆகிய இரு மாடல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன. ஆகையால், முதலில் இந்த இரண்டு மாடல்களையே ரிலோக்ஸ் இவி இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Rilox ev biji

ஸ்பார்க் எலைட் ஓர் குடும்பத்திற்கான மின்சார ஸ்கூட்டர் மாடல் ஆகும். மிக சிறந்த ஸ்டைல், திறன் வெளிப்பாடு மற்றும் நம்பகத் தன்மைக்கு பெயர்போனதாக இந்த மாடல் இருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. அதேவேளையில், பிஜிலி என்பது கார்கோ பிரிவிற்காக உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் வர்த்தக நிறுவனங்களின் டெலிவரி சேவைக்குப் பயன்படும் வாகனமாக இதனை ரிலோக்ஸ் இவி தயார் செய்திருக்கின்றது. இந்த இரண்டு எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கும் 2024 ஆம் ஆண்டிற்கு முன்னரே இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தேதி பற்றிய துள்ளியமான விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.

அதேநேரத்தில் இந்த வாகனங்களின் விலை விபரத்தை ரிலோக் இவி அதன் அதிகாரப்பூர்வ தளத்தின் வாயிலாக தெரிவித்து இருக்கின்றது. ஸ்பார்க் எலைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 80 ஆயிரம் விலையும், பிஜிலிக்கு ரூ. 99 ஆயிரம் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இரண்டுமே எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

ஸ்பார்க் எலைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 120 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 72வோல்ட்/24ஏஎச் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும்.

இந்த திறனுக்காக 1000 வாட் பிஎல்டிசி மோட்டார் ஸ்பார்க் எலைட்டில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரு கிலோ மீட்டர் பயணிக்கு வெறும் 15 பைசா மட்டுமே ஆகும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதன் பேட்டரிகளை தனியாக கழட்டி எடுத்துச் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.

இதை முழுமையாக சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்கள் தொடங்கி ரூ. 3 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். ஸ்பார்க் எலைட்டைப் போலவே அதிக சிறப்பு வசதிகள் தாங்கிய வாகனமாக பிஜிலி காட்சியளிக்கின்றது. ஆனால், இது டெலிவரி பயன்பாட்டிற்கான வாகனம் என்பதால் மொபட் தோற்றம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இதில் ஓர் முழு சார்ஜில் 90 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 60V/ 34Ah/ 39Ah பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. 250 வாட் பிஎல்டிசி ஹப் மோட்டாரே பிஜிலியில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடே மணிக்கு 25 கிமீ மட்டுமே ஆகும். இந்த வேக திறன் கொண்ட வாகனத்திற்கு பதிவு மற்றும் லைசென்ஸ் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே உலக நாடுகள் பல இந்தியாவை மையமாகக் கொண்டு தங்களின் புதிய தயாரிப்புகளைக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே ரிலோக்ஸ் இந்தியா போன்ற இந்திய நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தங்களின் புதிய படைப்புகளை இந்தியர்களுக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 7, 2023, 23:08 [IST]
English summary
Rilox ev unveiled made in india ev spark elite and bijli
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+