இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல காரா! விலையும் இவ்ளோதானா! எல்லாருக்கும் முன்னாடி புக்கிங் பண்ணீரணும்!

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான (Electric Scooters) வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. எனவே அடிக்கடி புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுக நிகழ்ச்சியை நம்மால் காண முடிகிறது.

தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric), ஏத்தர் எனர்ஜி (Ather Energy), டிவிஎஸ் (TVS), பஜாஜ் (Bajaj), ஆம்பியர் (Ampere) மற்றும் ஒகினவா (Okinawa) உள்பட பல்வேறு நிறுவனங்கள் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து கொண்டுள்ளன. அத்துடன் இன்னும் பல்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் (Start-up Companies) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சிகளை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல காரா! விலையும் இவ்ளோதானா! எல்லாருக்கும் முன்னாடி புக்கிங் பண்ணீரணும்!

இந்த சூழலில் கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரை சேர்ந்த ரிவர் (River) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் இன்டி (Indie) என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஃபேன்ஸி மற்றும் கம்பீரம் ஆகிய இரண்டும் கலந்த கலவையாக ரிவர் இன்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே 'SUV Of Scooters' என்ற அடைமொழியுடன் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் களமிறக்கப்பட்டுள்ளது.

எஸ்யூவி என்பது ஒரு கார் வகை. டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களுக்கு ஒரு உதாரணம். எஸ்யூவி ரக கார்கள் எப்படி முரட்டுத்தனமாக இருக்குமோ, அதேபோல் இந்த ரிவர் இன்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பெரிய 14 இன்ச் வீல்களும் இந்த ரிவர் இன்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன.

இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல காரா! விலையும் இவ்ளோதானா! எல்லாருக்கும் முன்னாடி புக்கிங் பண்ணீரணும்!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் 43 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர முன்பகுதியில் உள்ள க்ளவ் பாக்ஸில் கூடுதலாக 12 லிட்டர் இடவசதியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்கூட்டரில் இந்த அளவிற்கு தாரளமான இடவசதி இருப்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம்தான். அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 26 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3.9 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு (Top Speed) மணிக்கு 90 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருப்பது 4 kWh பேட்டரி ஆகும். இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 120 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ரேஞ்ச் (Range) என்பதில் சந்தேகமில்லை. பொதுவாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கும் ரேஞ்ச் நாம் சாலைகளில் பயன்படுத்தும்போது கிடைக்காது. ஆனால் இது ரியல் வேர்ல்டு ரேஞ்ச் (Real World Range) என ரிவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே நாம் சாலைகளில் வழக்கமாக ஓட்டும்போதும் 120 கிலோ மீட்டர்கள் ரேஞ்ஜை எதிர்பார்க்கலாம். எனவே தினசரி பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும்போது அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய தேவையிருக்காது.

அதே சமயம் ஸ்டாண்டர்டு சார்ஜரை பயன்படுத்தினால், வெறும் 5 மணி நேரத்தில் இந்த பேட்டரியை 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈக்கோ, ரைடு மற்றும் ரஷ் என மொத்தம் 3 ரைடிங் மோடுகளும் (Riding Modes) வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர முழு டிஜிட்டல் ஸ்க்ரீன், ரிவர்ஸ் பார்க்கிங் அஸிஸ்ட் மற்றும் 2 யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள் ஆகிய வசதிகளையும் ரிவர் இன்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய புதிய ரிவர் இன்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை (Price) 1.25 லட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இது நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. அத்துடன் இது அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே வரும் மாதங்களில் விலை அதிரடியாக உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 22, 2023, 17:03 [IST]
English summary
River indie electric scooter launched in india all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+