சூப்பர் மார்கெட்டிற்கு இதுல ஷாப்பிங் போனா தனியா பை கொண்டு போக வேணாம்! ரிவர் இண்டி இவியில் இருப்பது இதுதான்!
பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்ட ரிவர் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான இண்டி என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரப் போகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூபாய் 1.25 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முற்றிலும் மாறுபட்டு புதிய விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக விற்பனைக்கு வருகிறது.
இந்த ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்க்க டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அந்நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது. அதன் பெயரில் எங்கள் குழு பெங்களூருவில் இந்த ஸ்கூட்டரை ஓட்டி பார்க்க சென்றது. எங்கள் குழு பெங்களூருவில் செய்த இந்த டிரஸ்டை குறித்த வீடியோவை இதோ உங்களுக்காக நாங்கள் பகிர்ந்து உள்ளோம்.
இந்த ரிவர் இண்டி ஸ்கூட்டரை பொறுத்தவரை ஐபி 67 தரச் சான்று பெற்ற 4 கிலோவாட்ஹவர் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 120 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரியல் வேல்டில் 100 கிலோ மீட்டராவது ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய அம்சமே இதில் அதிகமான இடவசதி இருக்கிறது. இதனால் சிட்டிக்குள் ஷாப்பிங் செல்ல இந்த ஸ்கூட்டர் ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது மட்டுமல்ல இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பு மற்ற ஸ்கூட்டரை விட வித்தியாசமாகவும் அதே நேரம் கவர்ச்சியாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








