ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணி தொடங்கியாச்சு... இனிமே ஓலாவுக்கு செம்ம அடி காத்திருக்கு!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ரிவர் இவி (River EV). இந்த நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இன்டீ (Indie) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் ஆலை கர்நாடகாவின் ஹோஸ்கோட் எனும் பகுதியிலேயே அமைந்துள்ளது.
இங்கேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகள் தொடங்கி இருக்கின்றன. ஆகையால், விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது கிடைத்திருக்கும் தகவல்கள் ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என தெரிவிக்கின்றன.

ரிவர் இவி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகளை மட்டுமே நாட்டில் தொடங்கவில்லை, அது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியர்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கும் பணிகளிலும் களமிறங்கி இருக்கின்றது. நிறுவனம் அதன் முதல் அனுபவ மையத்தை திறக்கும் பணிகளிலேயே தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றது.
தனது முதல் அனுபவ மையத்தை நிறுவனம் பெங்களூருவிலேயே அமைக்க இருக்கின்றது. இந்த ஆண்டு நவம்பருக்குள் அது பயன்பாட்டிற்கு வந்துவிடும் என கூறப்படுகின்றது. கார்களில் எஸ்யூவி ரகம் இருப்பதைப் போல எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எஸ்யூவி டைப் என இதனை ரிவர் இவி நிறுவனம் வர்ணிக்கின்றது.
இதற்கு அதிக இட வசதி மற்றும் பெரிய உருவம் கொண்டதாக அந்த வாகனத்தை அவர்கள் வடிவமைத்திருப்பதே காரணமாக இருக்கின்றது. 4 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த பேட்டரி பேக்கை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முழுமையாக 5 மணி நேரங்கள் வரை தேவைப்படும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 6.7 கிலோவாட் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனால் அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்.
மேலும், வெறும் 3.9 செகண்டுகளிலேயே இதனால் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 90 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரால் 18 டிகிரி உயரமான பாதைகளைக் கூட சமாளிக்க முடியும். மூன்று விதமான ரைடிங் மோட்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஈகோ, ரைடு மற்றும் ரஷ் ஆகியவையே அவை ஆகும். இதில் ஈகோ மோடில் பயணிக்கும்போது மட்டுமே 120 கிமீ ரேஞ்ஜை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். இதேபோல், நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர் இவி வாரி வழங்கி இருக்கின்றது. எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஏற்கனவே கூறியதவை அதிக இட வசதிக் கொண்டதே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதில் 43 லிட்டர் அளவுள்ள பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையில் இருக்கைக்கு அடியில் இட வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், 12 லிட்டர் அளவுள்ள ஸ்டோரேஜ் வசதியும் குளோவ் பாக்ஸில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுபோன்று தாராள இட வசதிக் கொண்டதே ரிவர் இன்டீ ஆகும். இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகளையே நாட்டில் ரிவர் இன்டீ நிறுவனம் தொடங்கி இருக்கின்றது. இதை புக் செய்துவிட்டு நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் இந்த தகவல் உச்சகட்ட மகிழ்ச்சியையே ஏற்படுத்தி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரிவர் இவி இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை ஓலா எஸ்1 ப்ரோ ஜென்2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக அமைந்து உள்ளது. குறிப்பாக, இன்டீ-யின் அதிக இட வசதிக்காகவே பலர் அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாடி செல்ல தொடங்கி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








