வெறும் ரூ. 499 இருந்தா போதுமா!.. ஓலாவுக்கு சங்கு ஊதனும்றது மட்டுமே இவங்களோட கொள்கையா இருக்கும் போலிருக்கே!

கார்களில் காணப்படும் சில முக்கிய அம்சங்களுடன் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் தற்போது ப்ரீ புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றது. அது எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்?, அதன் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கர்நாடகா மாநிலம் பெலாகவியை மையமாகக் கொண்டு இயங்கும் ரிவோட் மோட்டார்ஸ். இந்த நிறுவனம் அதன் என்எக்ஸ்100 எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெகு விரைவில் இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் விற்பனக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் ஆகும்.

Rivot nx100 booking

இதன் வாயிலாகவே இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தன்னுடைய வருகையை ரிவோட் மோட்டார்ஸ் பதிவு செய்ய இருக்கின்றது. இதன் வருகை மற்ற மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், அதி-நவீன தொழில்நுட்ப வசதிகள் தாங்கிய வாகனமாக என்எக்ஸ்100 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரிவோட் மோட்டார்ஸ் உற்பத்தி செய்திருக்கின்றது.

அதுமட்டுமில்லைங்க, மிக மிக குறைவான விலையில் இதனை விற்பனைச் செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரூ. 89 ஆயிரம் எனும் மலிவு விலையிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

NX100

இத்தகைய மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கே தற்போது ப்ரீ புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. ரூ. 499 கட்டணத்தில் புக்கிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரிவோட் என்எக்ஸ் 100 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஸ்ட்ரீட் ரைடர், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஃப் லேண்டரே அவை ஆகும்.

இந்த வேரியண்டுகளிலில் கூடுதலாக மூன்று தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. கிளாசிக், ப்ரோ மற்றும் மேக்ஸ் ஆகியவையே அவை ஆகும். இதில், கிளாசிக் என்பதே மலிவு விலை ஆப்ஷன் ஆகும். அடுத்தடுத்து வரும் ப்ரோ மற்றும் மேக்ஸ் ஆகியவை விலையிலும், சிறப்பம்சங்கள் விஷயத்திலும் மற்றவற்றைக் காட்டிலும் பெரியதாகக் காட்சியளிக்கும்.

NX100 rear

உதாரணமாக, ஸ்ட்ரீட் ரைடர் வேரியண்டின் கிளாசிக் ஆப்ஷனில் சிறப்பம்சங்களாக காம்பி பிரேக்கிங் சிஸ்டம், ரெகோ மோட்டார், ரிவர்ஸ் கியர், 7.84 அங்குல திரை, ஸ்டீல் டயர் ரிம், எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லைட், 750 வாட் போர்டபிள் சார்ஜர் போன்ற பேசிக் அம்சங்களே இதில் வழங்கப்பட்டு இருக்கும்.

அதேவேளையில், ப்ரோ தேர்வில் பார்த்தோமேயானால், கிளாசிக்கைக் காட்டிலும் சற்று கூடுதல் அம்சங்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. கிளாசிக் இருக்கும் சிறப்பம்சங்களுடன் சேர்த்து கூடுதலாக ரைடு ஓஎஸ் 3.1, சென்டர் ஸ்டாண்டு, ஃபோன்லாக், பூஸ்ட் மற்றும் 7.84 அங்குல தொடுதிரை 4ஜி இணைப்பு வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த திரை மல்டிமீடியா மற்றும் நேவிகேஷன் ஆகிய அம்சங்களும் இந்த திரையில் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர, அலாய் வீல்கள், 1000 வாட் ஆன்-போர்டு சார்ஜர், டைனமிக் ரைடர் புரஃபைல், ட்யூப்லெஸ் டயர்கள் ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கும். இத்தகைய கூடுதல் அம்சங்களை இதை தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இதன் விலை ரூ. 1.29 லட்சமாக உள்ளது.

இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதற்கு அடுத்தபடியாக மூன்று இடத்தில், அதாவது, என்எக்ஸ் 100 ஸ்ட்ரீட் ரைடர் ஆப்ஷனின் உயர் நிலை தேர்வாக மேக்ஸ் இருக்கின்றது. இதன் விலை ரூ. 1.59 லட்சம் ஆகும். விலைக்கு ஏற்ப வசதிகளும் இதில் மிக மிக அதிகம்.

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் கிளாசிக் மற்றும் ப்ரோ ஆகிய தேர்வுகளில் வழங்கப்படும் அம்சங்களுடன் சேர்த்து கூடுதல் அம்சங்களாக ஆக்ஸிலரி பவர் யூனிட், கேமிரா, கம்ஃபோர்ட்டான சாவி, லேடீஸ்களுக்கான ஃபூட் ரெஸ்ட், பெரிய ஸ்பேஸ் கொண்ட பூட், ரோல் புரடெக்ட், க்ரூஸ் கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் என ஏகப்பட்ட அம்சங்கள் அதில் வழங்கப்பட்டு இருக்கும்.

இது மட்டுமில்லைங்க, ரேஞ்ஜ் தருவதிலும் இந்த தேர்வே பெஸ்ட்டானதாகக் காட்சியளிக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 300 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இதன் டாப்ஸ்பீடு 110 கிமீ ஆகும். இதேபோல், ப்ரோ தேர்வு ஃபுல் சார்ஜில் 200 கிமீ பயணத்தையும், 110 கிமீ வேகத்தையும் வழங்கும். கிளாசிக் தேர்வு ஓர் முழு சார்ஜில் 100 கிமீ ரேஞ்ஜையும், 110 கிமீ வேத்திலும் இயங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது.

என்எக்ஸ் 100 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மற்ற வேரியண்டுகளான ஸ்போர்ட் மற்றும் ஆஃப்-லேண்டர் ஆகியவற்றின் வசதிகள் மற்றும் திறன்கள் பற்றிய விபரங்களை அது அறிவிக்கவில்லை. விரைவில் இவை பற்றிய விபரங்களை அது அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே பலரின் எதிர்பார்ப்பை கவர்ந்திருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ப்ரீ புக்கிங் பணிகள் தொடங்கி உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனாலேயே புதிய புதிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே ரிவோட் மோட்டார்ஸும் அதன் வருகையை பதிவு செய்ய இருக்கின்றது. இன்னும் ஒரு வாரங்களில் இதன் அதிகாரப்பூர்வ வருகை இந்தியாவில் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 1, 2023, 12:07 [IST]
English summary
Rivot motors nx100 pre booking start in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X