கார் வாங்குவதற்கு பதில் இப்படியொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிட்டு போய்டலாம்!! ஒருமுறை சார்ஜ் நிரப்பினால்...!
ரிவோட் மோட்டார்ஸ் (RIVOT Motors) நிறுவனம் அதன் புதிய என்.எக்ஸ்100 (NX100) மூலமாக இந்தியாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நுழைவதாக அறிக்கை ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் புது புது ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் களமிறங்கி வருகின்றன. இந்த வகையில், என்.எக்ஸ்100 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மூலம் ரிவோட் மோட்டார்ஸ் நிறுவனம் இவி மார்க்கெட்டில் இறங்குகிறது. கர்நாடகா மாநிலம் பெலகாவி பகுதியை சேர்ந்தது ரிவோட் மோட்டார்ஸ் ஆகும்.

இந்த நிறுவனத்தில் இருந்து என்.எக்ஸ்100 என்ற பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய விபரங்கள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது என்.எக்ஸ்100 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன.
இதன் மூலம் இந்தியாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் நுழைவதை ரிவோட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து ரிவோட் மோட்டார்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆயுத பூஜை, வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களுக்கு தங்களது வாழ்த்துகளையும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்.23ஆம் தேதியான இன்று முதல் ரிவோட் என்.எக்ஸ்100 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவுகளும் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரிவோட் மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் குறித்து எந்த விபரங்களும் இல்லை. ரிவோட் என்.எக்ஸ்100 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.
கிளாசிக், பிரீமியம், எலைட், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஃப்லேண்டர் என்பன அந்த 5 வேரியண்ட்களாகும். இதில் கிளாசிக் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.89,000 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக ஆஃப்லேண்டர் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,89,000 ஆகும். ரிவோட் என்.எக்ஸ்100 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சமே அதன் ஸ்டைலான தோற்றம் ஆகும்.

எதிர்காலத்திற்கு ஏற்ப மிகவும் அட்வான்ஸான தோற்றத்தில் என்.எக்ஸ்100 ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இ-ஸ்கூட்டரில் LiMFP பேட்டரி பொருத்தப்படுகின்றது. இந்தியாவின் வெவ்வேறான வெப்ப சூழலுக்கு ஏற்ப செயல்படக்கூடியதாக, அதிக ஆற்றல் & ஆஃப்-ரோடு திறன்களை எதிர்பார்ப்போருக்கு ஏற்றதாக இந்த பேட்டரியை உருவாக்கியுள்ளதாக ரிவோட் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்கூட்டரின் பேட்டரி பேக் எந்த அளவிற்கு சிறந்தது என்றால், எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்களில் இந்த பேட்டரி 100கிமீ ரேஞ்சையும், டாப் ஆஃப்லேண்டர் வேரியண்ட்டில் சுமார் 300கிமீ ரேஞ்சையும், மற்ற வேரியண்ட்களில் 200கிமீ ரேஞ்சையும் வழங்கும் என ரிவோட் நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், அனைத்து 5 வேரியண்ட்களிலும் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 100kmph ஆகும். என்.எக்ஸ்100 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுவதுமாக பெலகாவியிலேயே உற்பத்தி செய்ய ரிவோட் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரிவோட் என்.எக்ஸ்100 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தோற்றம் சிறப்பாக உள்ளது என்றாலும், அதனை காட்டிலும் இந்த இ-ஸ்கூட்டரில் நம்மை கவர்வது இதன் விலை தான். ஏனெனில், எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டிற்கும், டாப் வேரியண்ட்டிற்கும் இடையே கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் அளவிற்கு வித்தியாசம் உள்ளது. ஆக, பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கவர்ந்திழுக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









