ரூ.3 லட்சம் இருந்தால் போதும்!! இதில் ஒரு ரோட்ஸ்டர் பைக்கை வாங்கிடலாம் - மாடர்ன் வசதிகளுக்கு எந்த குறையும் இல்ல

நாக்டு பைக்குகள், ஸ்போர்ட்ஸ் பைக்குகள் என பல விதமான பைக்குகள் இருந்தாலும், நிமிர்ந்த தோற்றம் கொண்ட ரோட்ஸ்டர் ரக பைக்குகளை பார்ப்பதற்கே மிகவும் கவர்ச்சியாக இருக்கும். அத்தகைய ரோட்ஸ்டர் பைக்குகள் பழமை மாறாத கிளாசிக் தோற்றத்தில், அதேநேரம் மாடர்ன் டச்களுடன் இருந்தால் யாருக்குத்தாங்க பிடிக்காமல் இருக்கும்.

கூடுதலாக, மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டால் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்கள் ரோட்ஸ்டர் ரக மோட்டார்சைக்கிள்களை தேடி வருவர். அவ்வாறான மாடர்ன் கிளாசிக் ரோட்ஸ்டர் பைக்குகளில் ரூ.3 லட்சத்திற்குள் கிடைக்கக்கூடிய பைக்குகள் சிலவற்றை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். வாருங்கள் செய்திக்குள் போவோம்.

roadster motorcycles under rs.3 lakhs

ராயல் என்பீல்டு ஹண்டர் 350: ராயல் என்பீல்டின் சமீபத்திய வெற்றிக்கரமான பைக். கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹண்டர் 350 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.49 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. இந்த செய்தியில் நாம் பார்க்கவுள்ள விலை குறைவான ரோட்ஸ்டர் பைக்குகளுள் ஒன்று இது என கூட சொல்லலாம். ரெட்ரோ ஃபேக்ட்ரி, மெட்ரோ டாப்பர் மற்றும் மெட்ரோ ரீபெல் என 3 விதமான வேரியண்ட்களில் இந்த பைக் கிடைக்கிறது.

யெஸ்டி ரோட்ஸ்டர்: பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்த யெஸ்டி பிராண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட 3 பைக்குகளுள் இதுவும் ஒன்றாகும். பெயருக்கு ஏற்ப ரோட்ஸ்டர் ஸ்டைலில் இருக்கும் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.03 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த பைக்கில் 334சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

roadster motorcycles under rs.3 lakhs

ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440: சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் இதுவாகும். ரூ.2.29 லட்சத்தில் விலை கொண்ட இந்த பைக்கில் 440சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 27 பிஎச்பி மற்றும் 38 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரையம்ப் ஸ்பீடு 400: பஜாஜ் ஆட்டோ உடன் இணைந்து டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் உருவாக்கிய 2 பைக்குகளுள் ஒன்று இதுவாகும். மாடர்ன் ஸ்டைலிஷான தோற்றத்தில் காட்சியளிப்பது மட்டுமின்றி, செயல்திறன்மிக்கதாகவும் ஸ்பீடு 400 விளங்குகிறது. ஸ்பீடு 400 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.33 லட்சமாக உள்ளது.

roadster motorcycles under rs.3 lakhs

ஹோண்டா சிபி300ஆர்: இந்த வரிசையில் நாம் பார்க்கும் கடைசி ரோட்ஸ்டர் பைக் இதுவாகும். சுமார் ரூ.2.77 லட்சத்தில் விலையை கொண்ட 300சிசி ஹோண்டா பைக். இதில் பொருத்தப்படும் 286சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 30.7 பிஎச்பி மற்றும் 27.5 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதன் என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய 5 மாடர்ன் கிளாசிக் ரோட்ஸ்டர் பைக்குகள் இவைதான். இவை ஐந்தும் கடந்த 1 வருட காலத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தவை ஆகும். குறிப்பாக, ஹார்லி-டேவிட்சன் மற்றும் டிரையம்ப் மாடல்கள் மிக சமீபத்தில், இந்த ஜூலை மாத துவக்கத்தில்தான் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

More from DriveSpark

Article Published On: Saturday, July 15, 2023, 23:59 [IST]
English summary
Roadster motorcycles under price rs 3 lakhs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X