எல்லாரும் காத்து கிடந்த ராயல் என்பீல்டு பைக்குகளின் டெலிவரி தொடங்கியது! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

Royal Enfield 650cc (ராயல் என்பீல்டு 650சிசி) பைக்குகளை பொறுத்தவரையில், இன்டர்செப்டார் 650 (Interceptor 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650) ஆகிய 2 பைக்குகளும் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன.

இந்த 2 பைக்குகளும் ரசிகர்களால் 650 ட்வின்ஸ் (650 Twins) என செல்லமாக அழைக்கப்படுகின்றன. இந்த 2 பைக்குகளின் அப்டேட் செய்யப்பட்ட 2023 மாடல்கள் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சூழலில் அவற்றை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகளை ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.

Royal Enfield 650cc Interceptor 2023 Model

2023 ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் 2023 ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய 2 பைக்குகளிலும், புதிய இருக்கைகள், புதிய ஸ்விட்ச்கியர் என ஏராளமான புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் ஆகிய அம்சங்களும், இந்த 2 பைக்குகளிலும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் புதிய 650 ட்வின்ஸ் பைக்குகளில் புதிய கலர் ஆப்ஷன்களையும் ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில், புதிய 650 ட்வின்ஸ் பைக்குகளில், 647.95சிசி, ட்வின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது பழைய மாடல்களில் இருந்த அதே இன்ஜின்தான்.

2023 Royal Enfield 650cc Continental GT 2023 Model

இருப்பினும் இந்த இன்ஜின் தற்போது ஓபிடி-2 (OBD-2 / On-Board Diagnostics) விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7,250 ஆர்பிஎம்மில் 47 பிஹெச்பி பவரையும், 5,150 ஆர்பிஎம்மில் 52.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

2023 ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் 2023 ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகளின் டெலிவரி தொடங்கப்பட்டிருப்பதால், இதற்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதிய அப்டேட்கள் காரணமாக, வரும் காலங்களில் இந்த 2 பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது இந்தியாவின் 650சிசி செக்மெண்ட்டில் தனி கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. ஏற்கனவே இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகளை விற்பனை செய்து வரும் நிலையில், இதே செக்மெண்ட்டில் மற்றொரு புதிய பைக் ஒன்றையும் ராயல் என்பீல்டு நிறுவனம் களமிறக்கியுள்ளது.

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650) என்ற பெயரில் வெகு சமீபத்தில்தான், இந்த புதிய பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வரும் காலங்களில் இந்தியாவின் 650சிசி செக்மெண்ட்டில் இன்னும் நிறைய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய 2 பைக்குகளும், ஒவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளன. இந்த சூழலில் புதிய மாடல்களின் வருகை காரணமாக, அவற்றின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, March 24, 2023, 14:32 [IST]
English summary
Royal enfield 650 interceptor continental gt deliveries start
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+