இதை மாட்டுனா போதும் உங்க ராயல் என்ஃபீல்டு பைக் 240 கி.மீ ஸ்பீடுல போகும்! விலையும் ரொம்ப கம்மி தான்!
ராயல் என்ஃபீல்டு 650 பைக்கை 865 cc இன்ஜின் ஆக மாற்ற முடியும் என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி மாற்றினால் இந்த பைக் அதிகபட்சமாக 240 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட பைக்காக மாறும். இது எப்படி சாத்தியம் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நாம் அனைவருக்கும் தெரியும் ராயல்என்ஃபீல்டு பைக் என்பது ஒரு கெத்தான பைக். ஆனால் இது ரேஸ் பைக்கா? என்றால் இல்லை ராயல் என்ஃபீல்டு பைக் மெதுவாக தான் செல்லும், பிக்கப் குறைவாக தான் இருக்கும். டாப் ஸ்பீடு மற்ற பைகளை விட குறைவாக தான் இருக்கும். இது எல்லாம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அந்த பைக் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து டிசைன் செய்ததால் ஏற்பட்ட அம்சம்.

புதிதாக பைக் வாங்கிய பலர் அதன் பெர்பார்மென்ஸ் மற்றும் லுக் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மார்க்கெட்டில் உள்ள சில மாடிஃபிகேஷன்களை செய்து பைக்கை மாற்றி அமைப்பார்கள். இப்படியாக ராயல் என்ஃபீல்டு 650 டிவின் சிலிண்டர் இன்ஜின் பைக்கிற்க்கு மாடிஃபிகேஷன் கிட்டாக முற்றிலும் புதிய இன்ஜினை உருவாக்கும் 865 சிசி கிட் மார்க்கெட்டில் இருக்கிறது.
பெங்களூருவில் உள்ள என்எம்டபுள்யூ ரேசிங் என்ற நிறுவனம்தான் இந்த கிட்டை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இப்படியாக இஞ்சினை மாடிஃபிகேஷன் செய்யும் இந்தியாவிலேயே இருக்கும் ஒரே நிறுவனம் இதுதான். வேறு எந்த நிறுவனமும் இன்ஜின் மாடிஃபிகேஷன் கிட்டை தயாரிப்பதில்லை. சில விற்பனை நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இப்படியான இன்ஜின் மாடிஃபிகேஷன் கிட்டை இறக்குமதி செய்து அதை விற்பனை செய்து வருகின்றனர்.

ஆனால் என்எம்டபிள்யூ ரேஸிங் நிறுவனம் இந்தியாவிலேயே முதன்முறையாக இன்ஜின் மாடிஃபிகேஷன் கிட்டை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த மாடிஃபிகேஷன் கிட்டில் ஹை லிட் கேம், பெரிய போர் மற்றும் 90எம்எம் கொண்ட பெரிய பிஸ்டன் பெரிய வால்வு, ஹை டென்ஷன் ஸ்ப்ரிங் ரீமேக் செய்யப்பட்ட இசியூ ஆகிய வழங்கப்படுகிறது.
தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இந்த 650 ட்வின் என்ஜினில் சூப்பர் மீட்டியோர் 650, ஜிடி 650, இன்டர்செப்ட்ர் 650 ஆகிய பைக்குகளில் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கை நீங்கள் 865சிசி கொண்ட அதிக திறன் பைக்காக மாற்ற வேண்டும் என்றால் இந்த நிறுவனத்திற்கு சென்று இந்த புதிய இன்ஜின் மாடிஃபிகேஷன் கிட்டை வாங்கி உங்கள் பைக்கில் பொருத்திக் கொள்ளலாம்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பொருத்தி தரும் 650 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை இந்த கிட் 865 cc இன்ஜினாக மாற்றும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக மாற்ற முடியும். தற்போது இந்நிறுவனம் வழங்கும் எக்ஸாஸ்ட் மூலம் 62 பிஎச்பிக்கும் அதிகமான பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜினாக இது இருக்கிறது.
இந்த இன்ஜினை பொருத்தினால் உங்கள் ராயல் என்ஃபீல்டு பைக் அதிகபட்சமாக 220 முதல் 240 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்ட பைக்காக மாறிவிடும். அதே நேரம் மைலேஜை பொறுத்தவரை இந்த பைக் 20 முதல் 25 கிலோமீட்டர் மைலேஜ் மட்டும் தான் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட கிட்டை என்எம்டபிள்யூ நிறுவனம் இன்டர்செப்ட்ட 650 பைக்கில் இன்ஜினுக்கு பதிலாக மாற்றி உள்ளது.
இதை எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவினர் ஓட்டி பார்த்தனர். இந்த வீடியோவை நீங்கள் நீங்கள் இங்கே காண முடியும். இதில் இந்த கிட் குறித்த தெளிவான விளக்கத்தை உங்களால் பெற முடியும். உங்கள் பைக்கை நீங்கள் இப்படி மாற்ற வேண்டும் என்றால் நிச்சயம் நீங்கள் பெங்களூருவில் உள்ள என்எம்டபிள்யூ ரேசிங் நிறுவனத்தை அணுகலாம்.
இந்த கிட்டின் விலை ரூ1.2 லட்சம் முதல் ரூ1.5 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. மற்ற இறக்குமதி செய்யப்பட் கிட்கள் இந்தியாவில் ரூ2.2-2.5 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் முற்றிலும் இந்தியாவிலேயே இதை தயாரிப்பதால் இந்நிறுவனத்தால் குறைவான விலையில் விற்பனை செய்ய முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் பலருக்கு இருக்கும் மிகப்பெரிய குறை இந்த பைக் அதிக வேகத்தில் செல்லாது என்பதுதான். அந்தப் பிரச்சினையை மையமாக வைத்தே இந்நிறுவனம் இப்படியான ஒரு மாடிஃபிகேஷன் கிட்ட அறிமுகப்படுத்தியுள்ளனர். அதிக வேகத்தில் ராயல் என்ஃபீல்டு பைக்கில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தான்.


Click it and Unblock the Notifications









