650 சிசி இன்ஜினை 865 சிசி இன்ஜினாக மாற்றுவது எப்படி தெரியுமா? செலவு இவ்வளவு கம்மி தானா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிடும் 650 சிசி டிவின் சிலிண்டர் இன்ஜினை 865 சிசி இன்ஜினாஆக மாற்ற மார்க்கெட்டில் என்எம்டபிள்யூ என்ற நிறுவனம் கஸ்டமஸ்டு இன்ஜின் ஸ்பேர் பார்ட்ஸ்களை விற்பனை செய்து வருகிறது. இதை பொருத்துவதன் மூலம் ராயல் என்ஃபீல்டு பைக்கின் இன்ஜின் பவர் அதிகமாகிறது. மேலும் இந்த பைக்கின் டாப் ஸ்பீடும் அதிகமாகின்றது. பலர் இந்த கஷ்டமைஸ்டு ஆப்ஷனை நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இது குறைந்த விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் ராயல் என்ஃபீல்டு 650 பைக்கை இப்படியாக கஸ்டமை செய்து 865 சிசி இன்ஜினாக மாற்றி வடிவமைத்துள்ளார். இந்த பைக்கை ஓட்டி பார்க்க டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி எங்கள் குழுவிலிருந்து கோஸ்டி இந்த பைக்கை ஓட்டிப் பார்த்தார். அவரது ரைடிங் அனுபவத்தை வீடியோவாக உங்களுக்காக வழங்கியுள்ளார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காண முடியும்.

இந்த இன்டர்செப்டர் 650 பைக்கில் 650 சிசி இன்ஜினில் உள்ள இரண்டு சிலிண்டரிலும் பிஸ்டன், போர் உட்பட பல்வேறு பாகங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாகங்களை எல்லாம் என்எம்டபிள்யூ நிறுவனம் தான் வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. ராயல் என்ஃபீல்டு தரும் பாகங்களை கழற்றிவிட்டு இந்த நிறுவனம் வழங்கும் பாகங்களை பொருத்துவதன் மூலம் இந்த பைக்கை 865cc இன்ஜின் ஆக மாற்ற முடியும்.

royal enfield 865cc big bore Kit

இதனால் இந்த பைக்கின் பவர் என்பது 47 பிஎச்பியிலிருந்து 70பிஎச்பியாக மாறுகிறது, டாப் ஸ்பீடு 240கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக மாறுகிறது. இந்த கஸ்டமைஸ் செய்ய ரூ1.2 - 1.5லட்சம் என்ற அளவு பணம் செலவாகும். மார்க்கெட்டில் உள்ள மற்ற கிட்டை விட இதன் விலை மிகவும் குறைவு தான். மற்ற நிறுவனங்கள் எல்லாம் வெளிநாட்டுகளிலிருந்து இந்த கிட்டை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 16, 2023, 19:10 [IST]
English summary
Royal enfield 865cc big bore kit top speed 240kmph
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+