ராயல் என்பீல்டு கிரேஸ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகுது!! இது ஹண்டர் 350 பைக்கின் காலம்...

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு (Royal Enfield) கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தமாக எத்தனை மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்தது என்பது குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் குறிப்பாக 350சிசி பைக்குகள் விற்பனையில் ராயல் என்பீல்டு கொடிக்கட்டி பறக்கிறது. இந்த நிறுவனத்தின் 350சிசி பைக்குகளான கிளாசிக், ஹண்டர், புல்லட் மற்றும் மீட்டியோர் மாடல்கள் ஒவ்வொரு மாதத்திலும் ஆயிரக்கணக்கில் விற்பனையாகுகின்றன. அதேபோல் ஹிமாலயன் பைக்குகளையும் நமது இந்தியர்கள் விரும்பி தேர்வு செய்கின்றனர்.

royal enfield bikes sales

இவ்வாறு உள்நாட்டு விற்பனையை இவை கவனித்து கொள்ள, வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியில் அதிகளவில் 650 இரட்டை பைக்குகளையும், சமீபத்திய அறிமுகமான சூப்பர் மீட்டியோரையும் ராயல் என்பீல்டு அனுப்பி வைத்து வருகிறது. இந்த சென்னை மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனையை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தோமேயானால், மொத்தம் 68,881 பைக்குகளை கடந்த ஏப்ரல் மாதத்தில் ராயல் என்பீல்டு இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது.

அதுவே 2022 ஏப்ரல் மாதத்தில் வெறும் 53,853 பைக்குகளை மட்டுமே இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தோமேயானால், கடந்த 1 வருடத்தில் ராயல் என்பீல்டின் விற்பனை ஆனது 15 ஆயிரம் பைக்குகள் அதிகமாகி உள்ளது. இது உண்மையில் இமாலய வளர்ச்சி ஆகும். ராயல் என்பீல்டின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் கடந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹண்டர் 350 பைக் ஆகும்.

royal enfield bikes sales

கிளாசிக் 350-ஐ போன்று குறுகிய காலத்திலேயே பலரை வெகுவாக கவர்ந்துள்ள ஹண்டர் 350 எடை குறைவான ராயல் என்பீல்டு பைக்காக வெளிவந்தது மட்டுமின்றி, விலையையும் குறைவாக கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 15,799 ஹண்டர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இப்போது தெரிந்திருக்கும், கடந்த மாதத்தில் எவ்வாறு ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை 15 ஆயிரம் அதிகரித்துள்ளது என்பது.

ஹண்டர் 350 வேகமாக பிரபலமாகி வந்தாலும், வழக்கம்போல் கடந்த ஏப்ரலிலும் அதிகம் விற்பனையான ராயல் என்பீல்டு பைக்காக கிளாசிக் 350 தான் உள்ளது. கிளாசிக் 350 பைக்குகள் கடந்த மாதத்தில் 26,781 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2022 ஏப்ரலில் 32,575 கிளாசிக் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் கிளாசிக் 350 பைக்குகளின் விற்பனை 17.79% குறைந்துள்ளது.

royal enfield bikes sales

2வது இடத்தில் ஹண்டர் 350 பைக் இருக்க, 3வது மற்றும் 4வது இடங்களில் புல்லட் 350 மற்றும் மீட்டியோர் 350 பைக்குகள் உள்ளன. கடந்த மாதத்தில் இவை இரண்டும் முறையே 8,399 மற்றும் 7,598 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. புல்லட் பைக்கின் எலக்ட்ரிக் ஸ்டார்ட் வெர்சனான எலக்ட்ரா 350 பைக் கடந்த மாதத்தில் 3,779 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. ஹிமாலயன் இதற்கடுத்து 3,521 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. 650 ட்வின்ஸ் & சூப்பர் மீட்டியோர் பைக்குகள் முறையே 1,865 மற்றும் 1,139 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ராயல் என்பீல்டின் சமீபத்திய வெற்றிக்கரமான மாடல் ஹண்டர் 350 என எந்தவொரு தயக்கமும் இன்றி கூறலாம். இன்னும் சில மாதங்களில் கிளாசிக் 350 பைக்கை முந்திக்கொண்டு இருப்பதிலேயே அதிகம் விற்பனையாகும் ராயல் என்பீல்டு பைக்காக முதலிடம் பிடித்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. அதேநேரம் ராயல் என்பீல்டின் 650சிசி க்ரூஸர் ரக பைக்கான சூப்பர் மீட்டியோரின் விற்பனையும் ஓரளவிற்கு கைக்கொடுக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 24, 2023, 11:17 [IST]
English summary
Royal enfield bikes sales 2023 april
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X