ராயல் என்பீல்டுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!! ஒரே மாசத்துல இத்தனை ஆயிரம் பைக்குகளை விற்பது எல்லாம் வேற லெவல்!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட சுமார் 81 ஆயிரம் பைக்குகளை விற்பனை செய்துள்ளதாக பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய மாதங்களில் ராயல் என்பீல்டின் விற்பனை எண்ணிக்கை எந்த அளவிற்கு இருந்தது? என்ற விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று, ராயல் என்பீல்டு. ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வது என்கிற கொள்கை உடன் செயல்பட்டு வரும் நிறுவனம். இதனால், ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை மாதத்திற்கு மாதம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

royal enfield bikes sales report

இந்த வகையில், கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் சுமார் 80,958 பைக்குகளை ராயல் என்பீல்டு விற்பனை செய்துள்ளது. ஆனால், 2022 செப்டம்பர் மாதத்தில் இதனை காட்டிலும் 6% குறைவான எண்ணிக்கையிலான பைக்குகளையே ராயல் என்பீல்டு விற்பனை செய்திருந்தது. இத்தனைக்கும், ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்பில் இருக்கும் ஹிமாலயன் 452 மோட்டார்சைக்கிள் இன்னும் விற்பனைக்கு கொண்டுவரப்படவில்லை.

அதற்கு முன்னதாகவே, ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 81 ஆயிரம் பைக்குகளை விற்பனை செய்யும் அளவிற்கு ராயல் என்பீல்டு வளர்ந்துள்ளது. இந்தியாவில் ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனை அதிகரித்துள்ள போதிலும், வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி கணிசமாக குறைந்துள்ளது. 2022 செப்டம்பரில் 5,707 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது.

royal enfield bikes sales report

ஆனால், கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் வெறும் 3,477 ராயல் என்பீல்டு பைக்குகள் மட்டுமே இந்தியாவில் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் 84,435 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்துள்ளது. ஆனால், 2022 செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 82,235 ஆக மட்டுமே பதிவாகியது.

இந்த 2023ஆம் வருடத்தின் முதல் 9 மாதங்களில் மொத்தமாக 5,41,421 பைக்குகள் ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் வெறும் 4,77,204 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் உலகளவில் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடந்த 2022ஆம் ஆண்டை விட 13% அதிகரித்து உள்ளது.

royal enfield bikes sales report

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகளை மட்டும் கணக்கில் எடுத்துப் பார்த்தால், 2023 ஜனவரி - செப்டம்பரில் மொத்தம் 4,97,845 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால், 2022ஆம் ஆண்டில் இந்த 9 மாதங்களில் 4,17,237 ராயல் என்பீல்டு பைக்குகள் மட்டுமே உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், வெளிநாட்டிற்கு ராயல் என்பீல்டு பைக்குகள் ஏற்றுமதி 27% அளவிற்கு குறைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உள்நாட்டு விற்பனை இலட்சக்கணக்கில் அதிகரித்த போதிலும், வெளிநாட்டு ஏற்றுமதிகள் குறைந்து வருவது ராயல் என்பீல்டு நிறுவனத்தை நிச்சயமாக கவலையடைய செய்யும். ஏனெனில், இந்திய சந்தையை எந்த அளவிற்கு சார்ந்துள்ளதோ, அதே அளவிற்கு வெளிநாட்டு ஏற்றுமதிகளையும் ராயல் என்பீல்டு சார்ந்துள்ளது. ஏனெனில், வெளிநாடுகளில் விற்பனையாகுபவைகளில் பெரும்பான்மையானவை ராயல் என்பீல்டின் விலைமிக்க 650சிசி பைக்குகள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 3, 2023, 7:45 [IST]
English summary
Royal enfield bikes sales report 2023 september all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X