புது புல்லட் பைக் விலை இவ்ளோதானா! தர மட்டத்திற்கு இறங்கிய ராயல் என்பீல்டு! சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை பைக்குகளில் ஒன்று புதிய தலைமுறை ராயல் என்பீல்டு புல்லட் 350 (New-gen Royal Enfield Bullet 350). இது ஏற்கனவே இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடல் ஆகும்.
நீண்ட கால எதிர்பார்ப்புகளுக்கு பின், புதிய தலைமுறை ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் ஒரு வழியாக நாளை (செப்டம்பர் 1) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) மற்றும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) ஆகிய மாடல்களுக்கு இடையே புதிய தலைமுறை புல்லட் 350 நிலைநிறுத்தப்படலாம்.

ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கை 3 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) ஆகிய பைக்குகளில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே ஜே-பிளாட்பார்ம் (J-platform) அடிப்படையில்தான், புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த 3 பைக்குகளிலும் பொருத்தப்பட்டுள்ள அதே 350 சிசி இன்ஜின்தான், புதிய தலைமுறை ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. எனினும் புல்லட் 350 பைக்கின் பண்புகளுக்கு பொருந்தும் வகையில், இந்த இன்ஜினை ராயல் என்பீல்டு நிறுவனம் ட்யூனிங் செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி புதிய தலைமுறை ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20 பிஹெச்பி பவர் மற்றும் 27 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இது முன்பை காட்டிலும் 'ஸ்மூத்' ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சஸ்பென்ஸன் பணிகளை பொறுத்தவரையில், முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் ட்யூயல் கேஸ் ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்படலாம். அதே நேரத்தில் புதிய தலைமுறை ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் புதியதாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் ஆரம்ப விலை (Price) 1.53 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1.69 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளதன் காரணமாக புதிய தலைமுறை ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் விலை சற்று அதிகமாக இருக்கலாம். இதன்படி இந்த பைக்கின் ஆரம்ப விலை 1.60 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 1.60 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் களமிறக்கப்பட்டால், புதிய தலைமுறை ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில் இந்த விலை என்றால், புதிய தலைமுறை ராயல் என்பீல்டு புல்லட் 350, வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும்.
இந்தியாவின் 350 சிசி பைக் செக்மெண்ட்டில் ஏற்கனவே ராயல் என்பீல்டு நிறுவனம்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில், புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கின் வருகை இந்தியாவின் 350 சிசி பைக் செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்தை மேலும் வலிமையாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








